Search

தூக்கம் முதல் மன அழுத்தம் வரை... தினமும் தூங்குவதற்கு முன் கால்களுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

 ஒவ்வொரு நாள் இரவும் நாள் முழுவதும் ஓடியாடி வேலை செய்ததால் ஏற்படும் களைப்பு, சோர்வு நம்மை மிகவும் வாட்டும். உடல் வலி தீர யாராவது மசாஜ் செய்து விட மாட்டார்களா என்று ஏங்குவோர் பலர்.. மசாஜ் செய்வது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை நாம் அறிவோம்.

பொதுவாக தலையில் எண்ணெய்யை கொண்டு செய்யும் ஹெட் மசாஜால் கிடைக்கும் நன்மைகள் நமக்கு தெரிந்ததே. ஆனால் இரவு நேரத்தில் உள்ளங்காலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? ஆயிலை கொண்டு Foot Massage செய்து கொள்வதன் மூலம் கால் வலி நீங்குவதுடன் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மைகளை தரும். உள்ளங்காலில் ஆயில் மசாஜ் செய்வதால் உடலுக்கும் மனதுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்...

கால் ஆரோக்கியம்: அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ் மெடிசின் கூற்றுப்படடி, தினமும் இரவு நேரத்தில் பாதத்தை ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் மற்றும் நெகிழ்வுத்தன்மை (flexibility) சிறப்பாக இருக்கும்.இந்த பழக்கம் plantar fasciitis மற்றும் flat feet போன்ற கால் தொடர்பான நோய்களை தடுக்கும்.

மன அழுத்தத்தை போக்கும்: நீங்கள் மன அழுத்தம், கவலை மற்றும் பதற்றம் உள்ளிட்ட உணர்வுகளால் அவதிப்பட்டால் இரவு நேரத்தில் பாதங்களை ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் மனநிலை நன்றாக இருப்பதாக உணர்வீர்கள். இந்த மசாஜ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இயற்கை வலி நிவாரணயாக் செயல்படும் எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது: உங்களுக்கு ஹை பிளட் பிரஷர் பிரச்சனை இருந்தால் நீங்கள் தினசரி இரவு நேரங்களில் எண்ணெய்யை பாதங்களில் மசாஜ் செய்து கொள்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. வழக்கமான அடிப்படையில் இரவு நேரங்களில் Foot Massage செய்து கொள்வது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கால் வீக்கம் குறையும்: சில நேரங்களில் உள்ளங்காலின் நரம்புகளில் திரவம் குவிகிறது, குறிப்பாக கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இந்த மசாஜ் செய்து கொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்படுவதால் இது போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது. அதிக அழுத்தம் கொடுக்காமல், வலியை ஏற்படுத்தாமல் காலில் வீங்கிய பகுதியில் மசாஜ் செய்வது அப்பகுதியில் இருக்கும் lymph fluid எனப்படும் நிணநீர் திரவத்தை வெளியே நகர்த்தி வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம்: மாதவிடாய் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் PMS எனப்படும் மாதவிடாய்க்கு முன் premenstrual syndrome ஏற்படுகிறது. உள்ளங்கால்களில் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் பெண்கள் PMS-ன் தீவிர அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். மெனோபாசில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கவும் இந்த மசாஜ் உதவுகிறது. மாதவிடாயின் போது நீடிக்கும் ரத்தப்போக்கு, மனநிலை மாற்றம், ஹார்மோன் பிரச்னை போன்றவற்றால் தவிக்கும் பெண்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த மசாஜ் மிகவும் உதவிகரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தலைவலிக்கு நிவாரணம்: நீங்கள் அடிக்கடி தலைவலியுடன் போராடி வருகிறீர்களா..! உள்ளங்காலில் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை எளிதில் சமாளிக்கலாம். தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த மசாஜ் உதவுகிறது.

பார்வை திறன் மேம்படும்: நம் பாதங்கள் கண்களுடன் தொடர்புடைய நான்கு முக்கிய புள்ளிகளை கொண்டுள்ளன. எனவே நேரம் கிடைக்கும் போது பாதங்களை ஆயில் மசாஜ் செய்வது கண்பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.

சிறந்த தூக்கம்: நல்ல ஆரோக்கியத்திற்கு சிறந்த தூக்கம் அவசியமானதாக இருக்கிறது. எனவே, இரவில் தூங்க முடியாமல் நீங்கள் அவதிப்பட்டால் பாதங்களில் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment