Search

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 முக்கியமான பயிற்சிகள்..!

 

நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கியமான ஒன்று. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது என்பது இதய ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவும் ஒரு முக்கிய படியாகும்.

இதய தசையை வலுப்படுத்த, எடையை கட்டுக்குள் வைக்க, மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் ஹை கொலஸ்ட்ரால், உயர் ரத்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக ஏற்படும் தமனி சேதத்தை தடுக்கவும் வழக்கமான உடல் செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளது.

அந்த வகையில் நம் இதயத்தை வலுப்படுத்த சிறந்த வழி உடற்பயிற்சி. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களை விட, உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் இதயத்தை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 முக்கிய உடற்பயிற்சிகள் இங்கே.

சுறுசுறுப்பான வாக்கிங்: வாக்கிங் என்பது ஒருவர் தனது தினசரி வழக்கத்தில் எளிதாக இணைத்து கொள்ள கூடிய குறைந்த தாக்கம் கொண்ட ஒரு கார்டியோ பயிற்சி ஆகும். நடைபயிற்சி, குறிப்பாக வேக நடைபயிற்சி, உங்கள் இதயத்தை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் வாரத்தில் குறைந்தது 6 நாட்களுக்கு 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சைக்கிளிங்: சைக்கிள் ஓட்டும் பழக்கம் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் சைக்கிளிங் என்பது இதயத்தை பலப்படுத்தும் ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியாகும். இது இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கலோரிகளை எரிக்கவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் சைக்கிளிங் உதவுகிறது.

நீச்சல்: நீச்சல் பயிற்சி என்பது நம் உடலை மட்டுமல்ல இதயத்தையும் பலப்படுத்த உதவும் சிறந்த முழு உடல் பயிற்சியாகும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைக்கும் அனைத்து வயதினருக்கும் நீச்சல் ஒரு சிறந்த தேர்வாகும்.நீச்சல் பயிற்சியானது இதயத்தை வலிமையாக்குகிறது.

ஏரோபிக் டான்ஸ் அல்லது ஜூம்பா: டான்சிங் செய்வது என்பது வேடிக்கையானது மட்டுமல்ல, நம் இதயத்தை சிறப்பாக செயல்பட தூண்டுவதற்கான சிறந்த வழியாகும். ஏரோபிக் டான்ஸ் அல்லது ஜூம்பா கிளாஸ் நடன அசைவுகளை ஏரோபிக் பயிற்சிகளுடன் இணைத்து செய்வது சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள இதய பயிற்சியாக அமைகிறது.

ஜம்பிங் ரோப்: ஜம்பிங் ரோப் என்பது இதய ஆரோக்கியம், ஸ்டாமினா மற்றும் கோர்டினேஷன் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் ஹை-இன்டென்சிட்டி கார்டியோவாஸ்குலர் பயிற்சி ஆகும். இது இதய துடிப்பை சீராக வைப்பதோஇதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment