தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

 


தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு 

கடும் வெயில் காரணமாக ஜூன் 1ல் பள்ளிகளை திறக்கக் கூடாது என பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வைத்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு என தெரிவிப்பு


665756



மக்கள் தொகை கணக்கெடுப்புபணியில் ஆசிரியர்கள் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புபணி  தீவிரம் 

ஆசிரியர்கள் இளநிலை உதவியாளர்கள் நியமிக்க மற்றும் மேற்பார்வையாளர்கள் அடையாளம்  காண்பது குறித்தான முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்






மென்பொருள் இயக்கம் தடைபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல்

 



மென்பொருள் இயக்கம் தடைப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ேம மாத ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே மே மாத சம்பளம் குறித்த காலத்தில் கிடைக்குமா? என்கிற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர சுமார் 7 லட்சம் பேர் ஓய்வூதியதார்களாகவும், குடும்ப ஓய்வூதியதாரர்களாகவும் அரசின் ஓய்வூதிய பணபலன்களை மாதம் தோறும் பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் கடைசிநாளில் அதாவது 30 அல்லது 31ம் தேதி வங்கி கணக்கில் சம்பளம் ஏறுவது வழக்கமாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாத சம்பள பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேலாண்மை (ஐஎப்எச்ஆர்எம்எஸ்) அமைப்பின் ஆன்லைனில் சமர்பிக்கப்படும். இப்பட்டியல் மாதம்தோறும் 15ம் தேதியே வெளியாகிவிடும்.

அந்தந்த கல்வி நிறுவனங்களின் சம்பள பட்டியலை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக பிரிவு ஊழியர்கள் எடுத்துக் கொண்டு போய் கருவூலத்தில் 25ம் தேதிக்குள் சமர்ப்பிப்பர். பிறகு மாத இறுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் நடப்பு மே மாதத்திற்கான சம்பள பட்டியல் விபரங்கள் குறிப்பிட்ட மென்பொருள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. 15ம் தேதியே ஏற்ற வேண்டிய பட்டியல் 22ம் தேதி வரை ஏற்ற முடியாத காரணத்தால், ஊதிய விபரங்களை கருவூலத்திற்கு அனுப்பி வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மென்பொருள் நிறுவனத்தின் சாப்ட்வேர் இன்னமும் திறக்கப்படவில்லை என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகையும் வரவுள்ள நிலையில், சம்பளம் குறித்த நேரத்தில் கிடைக்குமா? என்ற சந்தேகம் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஆட்டிப் படைக்கிறது. த.வெ.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை அறிவித்தது. கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், இனி வரும் காலங்களில் அகவிலைப்படி காலதாமதமாக அறிவித்தாலும் அகவிலைப்படி அறிவித்த மாத சம்பளத்தோடு, அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை ஆகியவற்றை இணைத்து வழங்கப்படும் என உறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை முந்தைய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நிறைவேற்றி வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்தும், அதனை வழங்க இயலாத நிலை இன்று வரை காணப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வை மட்டுமல்லாது மாத ஊதியத்தையும் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பள பட்டியல் மற்றும் 4 மாதத்திற்கான அகவிலைப்படி இணைந்து வழங்கிட, மென்பொருள் நிறுவனமே கணக்குகளை சரி செய்து விரைந்து வெளியிட வேண்டும். ஆனால் அரசுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது எனக்கூறி கொண்டு, மென்பொருள் நிறுவனம் இந்த பிரச்னையை தீர்க்க மறுப்பதாக கூறப்படுகிறது. புதிதாக பதவியேற்றுள்ள அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர். கருவூலத்திற்கு சம்பள பட்டியல் இதுநாள் வரை செல்லாத நிலையில், வரும் 31ம் தேதி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுமா என்ற கவலையும் வாட்டி வதைக்கிறது.

நீட் தேர்வு முறையில் அடுத்த ஆண்டு முதல் என்னென்ன மாற்றங்களுக்கு வாய்ப்பு?

 மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்புக்குப் பின் அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வு முறை மாறுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சக ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த் தேர்வு முறை தொடர்பான சீர்திருத்தங்கள் மீது மத்திய சுகாதார அமைச்சகம் மவுனம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வை கணினி வாயிலாக நடத்தப்போவதாக கல்வித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், நீட் தேர்வை பல அமர்வுகள் மற்றும் கட்டங்களாக நடத்துவது, தேர்வுக்கான முயற்சி எண்ணிக்கைக்கு மற்றும் வயது வரம்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது போன்ற பிற பரிந்துரைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. உயர்நிலைக் குழுவின் இந்தப் பரிந்துரைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் ஓர் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, அடுத்த ஆண்டில் இருந்து நீட் நுழைவுத் தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுவதுடன், வேறு பல முக்கிய மாற்றங்களும் நடைமுறைக்கு வரும்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் முன்பு தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) அதிகாரிகள் ஆஜராகி இருந்தனர்.

இதேபோன்று, 2024-இல் நிகழ்ந்த வினாத்தாள் கசிவுக்குப் பிறகு டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமர்த்தப்பட்டது. இதன் சார்பில் தேர்வை மேம்படுத்துவதற்கு அக்குழு சுகாதார அமைச்சகத்திடம் மூன்று முக்கியப் பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.

இவற்றை , என்டிஏவின்அதிகாரிகள் ஆஜரான நிலைக்குழுவின் முன்பு பகிர்ந்துகொண்டனர். அந்தப் பரிந்துரைகளில், பேனா மற்றும் காகித முறையை விடுத்து கணினி வாயிலாகத் தேர்வை நடத்தக் கூறியிருந்தனர்.


இத்துடன் தேர்வை பல அமர்வுகள் மற்றும் கட்டங்களாக நடத்துவதும், தேர்வுக்கான முயற்சி எண்ணிக்கைக்கு மற்றும் வயது வரம்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது ஆகிய மூன்று அம்சங்களும் குறிப்பிட்டிருந்தனர்.


இவற்றில் கடைசிப் பரிந்துரை மட்டும் தற்போது சுகாதார அமைச்சகத்தின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக சுகாதார அமைச்சகத்திடம் ஒரு புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக என்டிஏ, நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.


இளங்கலை மருத்துவப்

படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்தத் தேர்வுக்கான தரநிலைகளைத் தீர்மானிப்பது மத்திய சுகாதார அமைச்சகம்தான். சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தும் தரநிலைகளுக்கு உட்பட்டு நீட் தேர்வை நடத்துவர் என்டிஏவின் பணியாகும்.


அடுத்த ஆண்டிலில் இருந்து கணினி வாயிலாக நடத்தப்படும் என்று அறிவிப்பதற்கு முன்னதாக, சுகாதார அமைச்சகத்துடன் பலமுறை கல்வி அமைச்சகம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தது. எனினும், அப்போது எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இது குறித்து என்டிஏ அதிகாரிகள் வட்டாரத் தகவல்களின்படி, நீட் தேர்வுக்குச் சுகாதார அமைச்சகம் ஒரு குறிப்பிட்ட வயது வரம்பையும், முயற்சி எண்ணிக்கைக்கு உச்ச வரம்பையும் நிர்ணயிக்கத் திட்டமிடுகிறது. இது சாத்தியமானால், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


SSLC பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

 SSLC பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

648035

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்:

மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 22.05.2026 அன்று பிற்பகல் முதல் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் சென்று SSLC Provisional Mark Certificate என்பதை Click செய்து தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

II. விடைத்தாள் ஒளிநகலுக்கு விண்ணப்பம் செய்தல்:

விடைத்தாள் ஒளிநகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் 27.05.2026 மாலை 5.00 மணி (புதன்கிழமை) (24.05.2026 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) வரை விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் ஒளிநகல் (Scan Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் ரூ.275/- தேர்வர்கள் விடைத்தாட்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

விடைத்தாளின் ஒளிநகலினை (Scan Copy) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் www.dge.tn.gov.in இணையதளத்திலும் வெளியிடப்படும்.

அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் மறு தேர்விற்கான குறுகிய கால பயிற்சி முகாம் (Crash Course Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

 647827


அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் மறு தேர்விற்கான குறுகிய கால பயிற்சி முகாம் (Crash Course Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

DSE - Medical Competitive Exam Crash Course Proceedings.pdf

👇👇👇

Download here

எண்ணும் எழுத்தும் திட்டம் 2026-27 கல்வி ஆண்டு முதல் தொடராது..

 

 

2026 - 2027 கல்வியாண்டின் பாடப்புத்தகத்திலேயே எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகமும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்...

எண்ணும் எழுத்தும் திட்டம் 2026-27 கல்வி ஆண்டு முதல் தொடராது.பாடப்புத்தகங்கள் மட்டுமே

2026-27 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பொருட்களை வழங்குவது குறித்து DEE அறிவுரைகள்

 

தொடக்கக்கல்வி விலையில்லா நலத்திட்டங்கள் அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடைகள் மற்றும் இதரக் கல்வி உபகரணப் பொருட்களைப் பெற்று விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைப்பது மற்றும் மாணவ/மாணவியருக்கு வழங்குவது குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக DEE Instructions 

2026-27- Schemes - Instructions.pdf

👇👇👇👇

Download here




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்கள்


Training For Primary Teachers - SCERT Proceedings

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்


2026 2027 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாவட்ட மற்றும் வட்டார அளவில் அனைத்து பாடங்களுக்கும் புதிய பாடநூல்களுக்கான பயிற்சியினை அனைத்து மாவட்டங்களில் நடத்துதல் கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை பங்குபெற செய்தல் - அறிவுரை வழங்குதல் தொடர்பாக,



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - Direct Link

 640714

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் செய்திக் குறிப்பு!

மார்ச்/ஏப்ரல்-2026-ல் நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் சென்னை, கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.


தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

 DGE Press Release - Class 10 Results - Download here

01.06.2026 முதல் பள்ளிகள் திறப்பு - பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - DSE செயல்முறைகள்!

 641149


01.06.2026 முதல் பள்ளிகள் திறப்பு - பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - DSE செயல்முறைகள்!

2026-27- School Reopening-Hon'ble Educational Minister Review _ Instructions.pdf

👇👇👇👇

Download here