ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் தொடர்பாக பயிற்சி

 



அரசு மற்றும் அரசு உதவி பெறும் தெ ாடக்கப் பள்ளிகள், மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக செயல்வழிக் கற்றல் மற்றும் பாடத்திட்டம் தொடர்பான 3 பயிற்சி நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தற்போது 2025-2026ம் கல்வி ஆண்டு முடிவடைய நிலையில் மே மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டான 2026-2027ல் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறக்கப்படும் போது வினியோகம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. 

திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் மாவட்ட வாரியாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு முதல் பருவப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளது. 


மாநில பாடத்திட்டத்தின் குழுவினர் பரிந்துரை செய்துள்ள கருத்துகளை உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் தொடர்பாக கல்வியாளர்களிடம் இருந்து கருத்துருக்கள் பெறப்பட உள்ளன. மாநில பாடத்திட்டம் தொடர்பாக பாடங்களை உருவாக்கவும் ஆசிரியர்கள் குழுக்களை ஈடுபடுத்தி பாடங்களை எழுதுவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.ஆசிரியர் பயிற்சி

பாடத்திட்டங்களை உருவாக்கும் போது தொடக்கப் பள்ளிக் குழந்தைகள் பாடங்களில் உள்ள உரையை எளிதில் உணரும் வகையிலும் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும் மாற்றி அமைக்கப்பட உள்ளன. 

மேலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலனா வரைவுப்பாடத்திட்டம், முதலுதவி மற்றும் பாதுகாப்பு, சுய அடையாளத்தை புரிந்து கொள்ளுதல், மாணவர்கள் தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ளும் நடைமுறைகள், சிறு வயதில் இருந்தே நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்தல் போன்ற புதிய கருப்பொருள்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மே மாதம் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் வகையிலும், அ வற்றை ஆசிரியர்கள் கற்பிக்கும் வகைகளையும் பயிற்சியாக அளிக்கப்படும். அதற்கான அட்டவணை தயாரிக்கமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. Education

புதிய பாடத்திட்டத்தை பொருத்தவரையில் புதிய பாடப்புத்தகங்கள், பாரம்பரியமான உரை சார்ந்த வடிவத்தில் இருந்து விலகி, அதிக செயல்பாடுகளை சார்ந்த உள்ளடக்கத்தைக் ெகாண்டிருக்கும். முந்தைய திருத்தங்களின்போது பாடப்புத்தங்களில் QR குறியீடுகள் இணைக்கப்பட்ட காணொளிகள் எளிமையாக்கப்பட்டு கருத்துருக்களை புரிந்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 மேலும் இந்த பயிற்சியின் போது, மாற்றங்கள் குறித்த முன்னோட்டத்தையும், பின்பற்ற வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய வகுப்பறை நடைமுறைகளின் சரிபார்ப்பு பட்டியல்களும் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் - Orders

 சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15.03.2026 அன்று அறிவித்தது. 


தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இவ்விதிகளின் படி எந்த ஒரு அரசு ஊழியரும் அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது, இது தொடர்பாக, அனைத்து அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில், புதுச்சேரி கல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உருளையன்பேட்டை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் பரிந்துரையில் அவ்வூழியரை கல்வித்துறை துணை இயக்குனர் (பெண்கள்) அவர்கள் பணியிடை நீக்கம் செய்து உத்திரவு பிறப்பித்துள்ளார். 

மேலும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் நிகழ்வுகளில் ஈடுபட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் மேலும் ஐந்து ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்துள்ளார்

அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ செயல்பட்டால் அவர் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவதாக கருதப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.





BEO / HS HM / HSSS HM Promotion - Department Exam - ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைத்தேர்வுக்கான தாள்கள்

 ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைத்தேர்வுக்கான தாள்கள்

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 

பள்ளி துணை ஆய்வர் 

வட்டார கல்வி அலுவலர் 

மாவட்ட கல்வி அலுவலர் 

முதன்மை கல்வி அலுவலர் 

மேற்கண்ட பதவிகளில் பதிவு உயர்வு மூலம் செல்ல விரும்புபவர்கள் குறிப்பிட்ட தேர்வுகளை தேர்ச்சி பெற்றால் மட்டுமே அதற்கான முன்னுரிமை பட்டியலில் இடம் பற இயலும். நேரடி நியனம் பெறுபவர்கள் குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தான் தகுதிக்கான பருவம் நிறைவு செய்யப்படும்





2025 - 26 கல்வி ஆண்டு வேலை நாட்கள் - மாத வாரியாக

 தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் - 2025-26 கல்வி ஆண்டு வேலை நாட்கள்


பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட 2025-26 கல்வி நாட்காட்டியின்படி:


பள்ளி திறப்பு*: ஜூன் 10, 2026
*இறுதி வேலை நாள்*: ஏப்ரல் 24, 2026
*மொத்த வேலை நாட்கள்: 210 நாட்கள்*
*குறிப்பு*: அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை


மாத வாரியாக வேலை நாட்கள் - 2025-26
**மாதம்** **வேலை நாட்கள்** **முக்கிய விடுமுறை/தேர்வு**

**ஜூன் 2025** **16 நாட்கள்** பள்ளி திறப்பு: ஜூன் 10 . கோடை விடுமுறை ஜூன் 9 வரை 

**ஜூலை 2025** **23 நாட்கள்** முதல் இடைப்பருவ தேர்வு: ஜூலை 16-18 

**ஆகஸ்ட் 2025** **21 நாட்கள்** சுதந்திர தினம் - ஆக 15

**செப்டம்பர் 2025** **18 நாட்கள்** மிலாடி நபி - செப் 5. காலாண்டு தேர்வு: செப் 18-26 . விடுமுறை ஆரம்பம்: செப் 29 

**அக்டோபர் 2025** **20 நாட்கள்** காலாண்டு விடுமுறை: அக் 3 வரை  இரண்டாம் பருவம் தொடக்கம்: அக் 6 


நவம்பர் 2025** **20 நாட்கள்** இரண்டாம் இடைப்பருவ தேர்வு: நவ 11-13 


**டிசம்பர் 2025** **17 நாட்கள்** அரையாண்டு தேர்வு: டிச 15-23 விடுமுறை ஆரம்பம்: டிச 24

**ஜனவரி 2026** **19 நாட்கள்** அரையாண்டு விடுமுறை: ஜன 2 வரை மூன்றாம் பருவம்: ஜன 5 . பொங்கல் விடுமுறை: ஜன 14-19 ஜன 25 வேலை நாள் 

**பிப்ரவரி 2026** **20 நாட்கள்** 10-12 

முதல் திருப்புதல் தேர்வு: ஜன 8-21  

இரண்டாம் திருப்புதல்: ஜன 27-பிப் 4. 1-9 

மூன்றாம் இடைப்பருவம்: பிப் 17-19 

**மார்ச் 2026** **22 நாட்கள்** முழு மாதமும் வேலை நாள்


**ஏப்ரல் 2026** **14 நாட்கள்** ஆண்டு தேர்வு ஆரம்பம்: ஏப் 10. 
இறுதி வேலை நாள்: ஏப் 25. கோடை விடுமுறை: ஏப் 25 

**மொத்தம்** **210 நாட்கள்** 

*முக்கிய குறிப்புகள்*

1. *அரசு & அரசு உதவி பள்ளி*: இரண்டுக்கும் ஒரே நாட்காட்டி, ஒரே வேலை நாட்கள்

2. *சனி, ஞாயிறு*: 2025-26 முதல் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை. முன்பு போல 2-வது, 4-வது சனி மட்டும் இல்லை

3. *பொங்கல் விடுமுறை*: ஜன 14-19, 6 நாள் தொடர் விடுமுறை. ஜன 17 கூடுதல் விடுமுறைக்கு பதில் ஜன 25 வேலை நாள்

4. *அரையாண்டு விடுமுறை*: டிச 24, 2025 முதல் ஜன 4, 2026 வரை 12 நாட்கள் 5949c02c9c27

கவனம்: 
மழை, தேர்தல், உள்ளூர் பண்டிகைக்காக மாவட்ட ஆட்சியர்/ CEO அறிவித்தால் 1-2 நாள் மாற வாய்ப்பு உண்டு.

June 21
July 23
August 19 
September 19
November 20
December 17
January 17
February 19
March 21
April 10 
Total days 204

School Working & Holidays List 2025 - 2026 - Single Page (New Revised) - For Attendance Closing

 பள்ளி நாட்காட்டி 2025 - 2026 | அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில் - School Academic  Calendar  - Single Page (New Revised)

தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள  புதிய நாட்காட்டியின் படி  மாதவாரியான வேலை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறைகள் மற்றும் பிற விடுமுறைகள்  ஆகியவை தொகுத்து  ஒரே பக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயனுள்ள வகையில்  இங்கே பகிரப்பட்டுள்ளது  (New Revised)


Total - 204 Working Days


கவனம்: 
மழை, தேர்தல், உள்ளூர் பண்டிகைக்காக மாவட்ட ஆட்சியர்/ CEO அறிவித்தால் 1-2 நாள் மாற வாய்ப்பு உண்டு.



மும்மொழிக் கொள்கையை 7 நாளில் அமல்படுத்த வேண்டும்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

 தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி 6-ம் வகுப்பு முதல் மும்​மொழிக் கொள்​கையை 7 நாட்​களில் செயல்​படுத்த வேண்​டுமென சிபிஎஸ்இ தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்​குநர் பிரக்யா எம்​.சிங், அனைத்து வித​மான பள்​ளி​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை: 2026-27-ம் கல்​வி​யாண்டு முதல் 6-ம் வகுப்​பில் இருந்து மும்​மொழி திட்​டம் அறி​முகம் செய்​யப்​படு​கிறது.

இது​வரை அமல்​படுத்​தாத மற்ற பள்​ளி​களும், இந்த அறி​விப்பு வெளி​யான 7 நாட்​களுக்​குள் திட்​டத்தை செயல்​படுத்​து​வதை உறு​தி​செய்ய வேண்​டும். 3-வது மொழிகளுக்​கான பாடப்​புத்​தகங்​கள் விரை​வில் கிடைக்​கப்​பெறும்.

அதேநேரம் உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள், கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழியை பள்ளிகள் கற்பிக்க வேண்டும்.

இதுதவிர பள்ளிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த மும்மொழி விவரங்களை இறுதிசெய்து, தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒரு பள்ளி 6-ம் வகுப்பில் எந்த 3-ம் மொழியை அறிமுகம் செய்கிறதோ, அதே மொழிதான் அந்த பள்ளிக்கான 9, 10-ம் வகுப்புகளில் விருப்பப் பாடமாக இருக்கும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் மும்மொழி அமல் செய்வதை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



SSLC OFFICIAL DGE ANSWER KEY ALL SUBJECT MARCH 2026

 .com/sortd-service/imaginary/v22-01/jpg/large/

SSLC OFFICIAL DGE ANSWER KEY ALL SUBJECT MARCH 2026 

👇👇👇👇

Download here

ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை

 ஒன்​றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித்​துறை அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள் மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு நேற்று அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: பள்​ளிக் கல்​வித் துறை கட்​டுப்​பாட்​டின் கீழ் செயல்​படும் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​கள் மற்​றும் தனி​யார் சுயநிதி பள்​ளி​களில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்​கான இறு​தித் தேர்​வு​கள் ஏப்.16-ம் தேதி முடிவடைகின்​றன.

இதையடுத்து, 17-ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என விடப்படுகிறது. அதே வேளையில், வரும் 25-ம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை பணி, நிர்வாகப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

புதிய பாடநூல்கள் அறிமுகம்

பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2026-27) வகுப்பு ஜூன் 1-ம் தேதி தொடங்கும். வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 3-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3 வரை மாவட்ட அளவில் பணியிடை பயிற்சி அளிக்கப்படும்.

எனவே, 1, 2, 3 ஆகிய வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும் ஜூன் 4-ம் தேதி முதல் வகுப்பு நடைபெறும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Booth Slip விநியோகம் குறித்த தகவல்

 

பூத் சிலிப் விநியோகம் எப்போது?

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் இறுதி பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) அச்சிடப்பட்டு ஏப்ரல் 10 முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட இம்முறை பெரிதாக அச்சிடப்படும். புகைப்படத்துக்கு பதிலாக க்யூ ஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும்.

வாக்குப் பதிவுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் தகவல் சீட்டுகளை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்பட 12 ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.


ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றக் கோரிய மனு முடித்துவைப்பு

 ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.


ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுகா மானவாரி மற்றும் இறவை பாசன விவசாயிகள் சங்கம், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியா்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யும் வகையில் கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

வேளாண், வருவாய் மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறைகளில் அரசு அதிகாரிகள் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனா். இதன் காரணமாக அரசு நலத் திட்டங்களைத் தங்களுக்கு வேண்டியவா்களுக்கு அதிகாரிகள் வழங்குகின்றனா்.

தோ்தல் நேரங்களில் அரசு அதிகாரிகள் நடுநிலையாகச் செயல்பட வேண்டும். ஆனால், தொடா்ச்சியாக இவா்களை ஒரே இடத்தில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிப்பது தோ்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது. மேலும், இதுபோன்ற அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு அதிகாரிகளின் பணிமாற்றம் தொடா்புடையதால் இதை பொதுநல வழக்காக கருத முடியாது.


மேலும், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கையை தோ்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.


15.04.2026 அன்று இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பு - மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதம்

 இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 15.4.2026 அன்று நடைபெற உள்ளதாக தகவல்.


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வழங்குதல்


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026 தொடர்பாக, 185,வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 15:04,2025 அன்று இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.










பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

 தமிழ்நாட்டில் அனைத்து வகை அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு ஏப். 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தோ்வுகள் ஏப். 10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறுவதால், பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதையடுத்து 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 9-ஆம் வகுப்புக்கான விரிவான தோ்வுக் கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.

அதன்படி, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.17 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் ஜூன் 1ஆம் தேதியான திங்கள்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், “அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப். 16 ஆம் தேதி நிறைவடைகின்றன. ஏப். 17 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.


ஏப். 25ஆம் தேதிவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி / யூ.கே.ஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலைக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதியான திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் 1-3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்” என தெரிவிக்கப்படுகிறது.



10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி - ஆசிரியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு

 தமிழ்நாடு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளன. ஏப்ரல் 20-க்குள் திருத்தும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி நடைபெற்றது. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.


இந்த தேர்வுகளை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 8,82,806, தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு மையங்களில் தேர்வு எழுதப்பட்டது. இந்த தேர்வு பணிகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 47,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,950-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

10ம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 10,877 மாணவர்களும். ஆங்கிலம் பொதுத் தேர்வை 10,369 மாணவர்களும், கணிதம் பொதுத் தேர்வை 11,284 மாணவர்களும், அறிவியல் தேர்வு எழுத 11,341 மாணவர்களும், சமூக அறிவியல் தேர்வை 11,228 மாணவர்களும் தனித்தேர்வர்களும் எழுதவில்லை. ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற விருப்பமொழி பாடத்தேர்வை 118 பேர் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத் துறை இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்கத் தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கையை, பாடப் பிரிவு, பயிற்று மொழி வாரியாக சரியாக கணக்கிட்டு உடனே அவர்களை பணியில் இருந்து விடுவித்து முகாம் பணிக்கு அனுப்ப வேண்டும். தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.

மதிப்பீட்டுப் பணிகளை தாமதமின்றி குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதற்காக, தங்களது நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 10-ம் வகுப்பு பாடம் நடத்தும் தகுதியான பாட ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து, தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும். எந்த பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாத வகையில் கண்காணிக்க வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு அனுப்பும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதிக்குள் நியமன ஆணையை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள், ஏப்ரல் 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டும். அரசுத் தேர்வுத் துறை வழங்கியுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் உதவி தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்த பணிகளை 20-ம் தேதிக்குள் அதாவது 6 நாட்களில் நடத்தி முடிவுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே20ம் தேதி வெளியாகும் எனவும் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.