SMC - இன்று நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை ( 06.02.26 வெள்ளி ) - கையால் எழுதப்பட்ட நகல் ( Pdf )

 65992471bddeb_wm

SMC - இன்று நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை ( 06.02.26 வெள்ளி ) - கையால் எழுதப்பட்ட நகல் ( Pdf )

👇👇👇👇

Download here

நன்றி

திரு க.நாகராஜன்

தலைமையாசிரியர்

ஊ.ஒ.தொ.பள்ளி - குப்பதேவன்

தஞ்சாவூர் மாவட்டம்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பிப்.8-ல் நடைபெற உள்ள நிப்ட் நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

hindutamil-prod%2F2026-02-06%2F3jhya6bu%2F10

நாடு முழு​வதும் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் (நிப்ட்) இளநிலை, முது​நிலை, பிஎச்டி படிப்​பு​களில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம். அந்த வகை​யில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான தேசிய அளவிலான நிப்ட் நுழைவுத் தேர்வு வரும் 8-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், தேர்​வுக்கான ஹால் டிக்​கெட்​களை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. மாணவர்​கள் தங்​கள் ஹால் டிக்​கெட்டை https://exams.nta.nic.in/niftee என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ள வேண்​டும். கூடு​தல் விவரங்​களை http://www.nta.ac.in எனும் தளத்​தில் அறிய​லாம்.

இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால், 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்​லது nift@nta.ac.in எனும் மின்​னஞ்​சலை மாணவர்​கள் தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

CTET : ஆசிரியர் பணி தகுதிக்கான ‘சிடெட்’ தேர்வு இன்று தொடக்கம்

hindutamil-prod%2F2026-02-06%2Fra4ep42l%2F15451212
தமிழ், ஆங்​கிலம் உள்​ளிட்ட 20 மொழிகளில் ஆசிரியர் பணிக்​கான ‘சிடெட்’ தேர்வு நாடு முழு​வதும் இன்று தொடங்​கு​கிறது.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, ஆசிரியர் பணி​யில் சேரு​வதற்​கு, மத்​திய ஆசிரியர் தகு​தித் தேர்​வில் (சிடெட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். 2 தாள்​கள் கொண்ட இந்தத்தேர்வை மத்​திய இடைநிலைக்கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) சார்பில் ஆண்​டுதோறும் ஜூலை,டிசம்​பர் என 2 முறை தேர்வு நடத்தி வரு​கிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்​வும், பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்​வும் நடத்​தப்​படு​கிறது. இந்தத் தேர்​வில் ஒரு​முறை தேர்ச்சி பெற்​றால், அதன்சான்​றிதழ் வாழ்​நாள் முழு​வதும்செல்​லத்​தக்​கதாகும்.

இந்​நிலை​யில், நடப்பு ஆண்​டுக்​கான சிடெட் தேர்வு இன்​றும், நாளை​யும் (பிப்​.7, 8) நடை​பெறுகிறது. மொத்​தம் 150 மதிப்​பெண்​கள். தமிழ், இந்​தி, ஆங்​கிலம் உள்​ளிட்ட 20 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

தேர்​வர்​களுக்​கான ஹால் டிக்​கெட் கடந்த 5-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதன் விவரங்​களை https://ctet.nic.in/ என்ற இணை​யதளத்​தில் அறிய​லாம். தேர்வு மையத்​துக்கு காலை அமர்​வுக்கு 9.30 மணிக்​கும், பிற்பகல் 2.30 மணிக்​கும் முன்​பாக தேர்வர்கள் வந்​து​விட வேண்​டும்.

ஹால் டிக்​கெட்​டில் கூறப்​பட்​டுள்ள விதி​களை முறையாக பின்​பற்றி தேர்​வறை​யில் செயல்பட வேண்​டும். முறை​கேடு​களில் ஈடு​பட்​டால், தேர்ச்சி ரத்து செய்​யப்​படு​வதுடன், எதிர்​காலத் தேர்​வு​களில் பங்​கேற்க தடை​யும்​ விதிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு

 > மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1. சிறப்பு தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2. விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்: வரும் 10 மற்றும் 11-ம் தேதிகள்.

3. விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

4. கட்டண விவரம்: தேர்வு கட்டணத்துடன் சேர்த்து, மேனிலைப் பள்ளிக்கு ரூ.1000-ம், பத்தாம் வகுப்புக்கு ரூ.500-ம் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

5. தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

6. இந்த விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் பெற முடியாது: ஐகோர்ட்

Tamil_News_lrg_4145002

'அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது. 

மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர், தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி, ஓய்வூதியம் வழங்க, அரசுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர், ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரத சக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் அடங்கிய, மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: பணி விதிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா ஆகிய சொற்றொடர்கள், வெவ்வேறு பொருளை உணர்த்துகின்றன. 

தமிழக ஓய்வூதிய விதிகள், உடல் அல்லது மன அளவில் பலவீனம் போன்ற மருத்துவ காரணங்கள் அடிப்படையில், ராஜினாமா செய்வோருக்கு மட்டுமே, ஓய்வூதியம் வழங்க வகை செய்கிறது. மற்ற மருத்துவ காரணங்களை கூறி ராஜினாமா செய்தவர், முந்தைய பணிக் காலத்தை இழந்து விடுவதால், ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கல்வி விழிப்புணா்வு பணி: இந்திய ஆசிரியைக்கு 10 லட்சம் டாலா் பரிசு

நூற்றுக்கணக்கான கல்விப் பயிற்சி மையங்களை உருவாக்கியதற்கும், குடிசைப் பகுதிகளில் உள்ள சுவா்களில் கல்விச் சித்திரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காகவும் இந்தியாவைச் சோ்ந்த ஆசிரியை ரூபிள் நாகிக்கு 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ. 9 கோடி) உலக ஆசிரியா் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

ரூபிள் நாகியின் தொண்டு நிறுவனம் சாா்பில் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட பயிற்சி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி கற்க பள்ளிக்குச் செல்லாத சிறாா்களுக்கு இந்த மையங்கள் வழியே கல்வி கற்றுத் தரப்படுகிறது. இதேபோல், குடிசைப் பகுதிகளில் உள்ள சுவா்களில் கல்வியறிவு, அறிவியல், கணிதம், வரலாறு உள்ளிட்டவை குறித்து ரூபிள் நாகி சித்திரம் வரைந்துள்ளாா்.

இந்தச் சேவையை கெளரவிக்கும் வகையில், துபையில் நடைபெற்ற உலக அரசுகளின் மாநாட்டில் ரூபிள் நாகிக்கு 10 லட்சம் டாலா் உலக ஆசிரியா் பரிசு அளிக்கப்பட்டது. துபை துணைப் பிரதமா் ஷேக் ஹம்தான்பின் முகமது இப்பரிசை வழங்கினாா். விருதுடன் கிடைத்த பரிசுத் தொகையை இலவசப் பயிற்சி மையம் அமைக்கப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ரூபிள் தெரிவித்தாா்.

இந்த விருதைப் பெறும் 10-ஆவது ஆசிரியை இவா் ஆவாா். இதற்கு முன்பு கென்யா, பாலஸ்தீனம், கனடா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த ஆசிரியைகள் பெற்றனா்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..

221995

தமிழ்நாடு 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.

மேலும், 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 एल, 2026-2027-ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.

2026-2027-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியன 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்கப்பெறும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இன்றைய (07.02.2026) முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வில் காண்பிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் பட்டியல்!!!

222049

இன்றைய (07.02.2026) முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு காண்பிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள்!

PG Vacancies 07.02.2026 - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?

.com/

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?*

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

நடப்பு (2025-26) நிதியாண்டில், New Regimeல் எதுவரை வரி உண்டு, Rebate, Marginal Relief எனும் வரித் தள்ளுபடிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இப்பதிவில் வரிசைக்கிரமமாகத் தெரிந்து கொள்வோம்.

`Total Gross Income :`

Pay + DA + All other Allowances + EL Surrender + Any Pay Arrear = Total Gross Income.

_(கூடுதலாக Savings & Investmentற்கான வட்டி ITRன் போது தானாகவே வருமானக் கணக்கில் சேர்க்கப்படும்)_

`Net Taxable Income :`

இந்த Total Gross Incomeல் இருந்து,

1. மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி

2. Standard Deduction Rs.75,000/- 

உள்ளிட்டவற்றைக் கழித்துவரும் தொகையே Net Taxable Income. இத்தொகை 10ன் முழுமையாக்கப்பட்டு வரிவிதிப்புக் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

`Tax Slab :`

Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.

Rs.4,00,000 வரை                    - வரியில்லை

Rs.4,00,001 to Rs.8,00,000     - 5%

Rs.8,00,001 to Rs.12,00,000   - 10%

Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%

Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%

Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%

Rs.24,00,000க்கு மேல்           - 30%

`Rebate :`

Net Taxable Income  Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதற்குண்டான வருமானவரி U/S.87Aன் கீழ் தள்ளுபடி செய்யப்படும்.

அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,

முதல் 4,00,000 × 0% = 0

2வது  4,00,000 × 5% = 20,000

3வது  4,00,000 × 10% = 40,000

என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இவ்வாறுதான் 12 இலட்சம் வரை Tax இல்லை என்று கூறப்படுகிறது.

`Marginal Relief :`

Net Taxable Income மேற்படி Rebate வரம்பைவிட ரூ.10 கூடி Rs.12,00,010/- என்று வருமானால்  Rebate கிடையாது என்பதால் அணற்கான வரியாக Rs.60,002/-ஐ செலுத்தியாக வேண்டும். Marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்று தோன்றலாம். இக்குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.

இதன்படி, Tax Marginஆன ரூ.12,00,000/-ஐவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதை மட்டும் வரியாகக் கட்டினால் போதும். மீதத்தொகை U/S.87Aன் கீழ் Marginal Relief என்று கழிக்கப்பட்டுவிடும்

உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.

இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.

இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும். அதாவது,

Rs.4,00,000 =   0% = 0

Rs.4,00,000 =   5% = 20,000

Rs.4,00,000 = 10% = 40,000

Rs.70,590.   = 15% = 10,589

மொத்த வரி          = 70,589

எனவே, Rs.12,70,580/-ற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.

`Marginal Relief Formula :`

12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால், அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.

Marginal Relief = Actual Tax - Tax margin Excess Income

இந்த Marginal Reliefஐக் கண்டுபிடித்து அதை மொத்த வரியில் கழித்துவிட்டால் கட்ட வேண்டிய வரி கிடைத்துவிடும்.

உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,

Rs.12,10,000/-ற்கான Actual Tax = 61,500

12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000

ஃ Marginal Relief (61,500 - 10,000) = Rs.51,500

ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,

= Actual Tax - Marginal Relief

= 61,500 - 51,500

= Rs.10,000/-

2025-26 நிதியாண்டிற்கான EL Surrender உள்ளிட்ட உங்களது ஒட்டுமொத்த ஆண்டு வருமானத்தையும், அதற்குண்டான வருமானவரியையும் 100% துல்லியமாகத் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே இணைப்பில் உள்ள அறிவுச்சாளரம் Income Tax Calculator 2026 உதவியாக இருக்கும். தேவையெனில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

https://arivuchaalaram.blogspot.com/2025/04/it-calculator-fy-2025-26.html

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET தேர்வு 2025 - தேர்ச்சி சான்றிதழில் பிழைகள் இருப்பின் எப்படி சரிசெய்வது?

  ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்

TET தேர்வு 2025 - பின்வருவனவற்றில் மாற்றத்திற்கான கோரிக்கை:-

1. ஆரம்ப மாற்றம்

2. பிறந்த தேதி மாற்றம்

3. எழுத்து மாற்றம்

4. பாலின மாற்றம்

விண்ணப்ப நகல், சான்றுகள் மற்றும் சலான் ரூ.200/-க்கு பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய நகலுடன் உங்களது சான்றிதழில் உள்ள பிழையினை குறிப்பிட்டு,  சான்றிதழ் நகல் ஒன்றும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.

212559