காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: பெரியார் பிறந்த நாளில் தொடங்க முதல்வர் உத்தரவு

  

​முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்​யப்​படு​வ​தாக முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். பெரி​யாரின் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி இத்​திட்​டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்​கு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

கடந்த திமுக ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை அப்​போதைய முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. விரி​வாக்க திட்​டத்தை ஸ்டா​லின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி​வைத்​தார். தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத் திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவி​களுக்கு விரி​வாக்​கம் செய்ய ஏது​வாக, பெரி​யார் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி தொடங்​கு​வதற்கு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​னார்.

மேலும் ‘‘சமூக நலம், மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்​படுத்​தப்​படும் திட்​டங்​களை, பயனாளர்​களான குழந்​தைகள், பெண்​கள், திருநங்​கைகள், மூத்த குடிமக்​களிடம் தடை​யின்​றி, துரித​மாக கொண்டு சேர்க்க வேண்​டும். குழந்​தைகள் பாது​காப்​பில் கவனம் செலுத்த வேண்​டும். போதைப் பொருள் பழக்​கத்​துக்கு ஆளா​காத​படி அவர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். அந்த பழக்​கத்​துக்கு ஆளான குழந்​தைகளை மீட்டு மறு​வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றும் அறி​வுறுத்​தி​னார். இந்த கூட்​டத்​தில் சமூக நலம், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் ஜெகதீஸ்​வரி, தலை​மைச் செயலர் சாய்​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வரின் காலை உணவுத் திட்ட விரி​வாக்​கம் குறித்​து, கூட்​டத்​தில் பங்​கேற்ற உயர் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘‘முதலில் அரசு நடுநிலைப் பள்​ளி​களில் மட்​டும் இத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வதா அல்​லது அரசு மற்​றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்​ளி​களி​லும் சேர்த்தே அமல்​படுத்​து​வதா என்​பது பின்​னர் அறிவிக்​கப்​படும். அப்​போது​தான் எத்​தனை மாணவ, மாணவி​கள்​ பயன்​பெறு​வார்​கள்​ என்​ற விவரம்​ தெரிய​வரும்​’’ என்​று தெரி​வித்​தனர்​.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்க



 

தொழில்​நுட்ப பிரச்​சினை​யால் நீட் மறு​தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்ய முடி​யாமல் மாணவர்​கள் கடும் சிரமத்​துக்கு உள்​ளா​னார்​கள். தொழில்​நுட்ப பிரச்​சினை சரிசெய்​யப்​பட்டு வரு​வ​தாக​வும், அனைத்து மாணவர்​களும் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என்​றும் தேசிய தேர்வு முகமை அறி​வித்​துள்​ளது.

தேர்வு ரத்து: மருத்​து​வம் மற்​றும் பல் மருத்​துவ படிப்பு மாணவர் சேர்க்​கைக்​காக நீட் (யுஜி) நுழைவுத்​தேர்வு நடத்​தப்​படு​கிறது அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடந்​தது. வினாத்​தாள் கசிந்​த​தால் அத்​தேர்வு ரத்​துசெய்​யப்​படு​வ​தாக​வும் மறு நீட் தேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்​தப்​படும் என்று தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) அறி​வித்​தது. இதைத்​தொடர்ந்து நீட் மறு​தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட்டை மாணவர்​கள் ஜூன் 15-ம் தேதி முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என தெரி​வித்​தது.

நாடு முழுவதும்... அதன்​படி, நீட் தேர்வு மாணவர்​கள் தங்​களுக்​கான ஹால் டிக்​கெட்டை நேற்று என்​டிஏ இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்ய முயன்​றனர். ஆனால், இணை​யதளத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக மாணவர்​கள் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டது. இணை​யதளத்​தில் பக்​கம் திறக்​காதது, பதி​விறக்​கம் செய்​யும்​போது பாதி​யில் நின்​று​விடு​வது என பல்​வேறு பிரச்​சினை​களை நாடு முழு​வதும் மாணவர்​கள் எதிர்​கொண்​டனர்.

இதற்​கிடையே, என்​டிஏ வெளி​யிட்ட அறி​விப்​பில், நாடு முழு​வதும் இது​வரை 4 லட்​சம் மாணவர்​கள் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​திருப்​ப​தாக​வும், விரை​வில் தொழில்​நுட்ப கோளாறு சரிசெய்​யப்​பட்டு அனைத்து மாணவர்​களும் ஹால் ​டிக்​கெட் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலா்ம் என உறு​தி​யளித்​துள்​ளது.

மன உளைச்சல்: வினாத்​தாள் கசிந்து தேர்வு ரத்​து, மறு​தேர்​வு, அதற்​கான ஹால்​ டிக்​கெட் பதி​விறக்​கம் செய்​வ​தில் சிக்​கல், மறு தேர்வு எழு​தாதவர்​களுக்கு கட்​ட​ணத்தை திருப்பி அளிப்​ப​தில் பிரச்​சினை என நீட் தேர்வு விவ​காரத்​தில் மாணவர்​கள் கடும்​ மனஉளைச்​சலுக்​கு ஆளாகி​யுள்​ளனர்​.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அவகாசம் ஜூன் 23-ம் தேதி வரை நீட்டிப்பு

  

தமிழகத்​தில் உள்ள கால்​நடை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 16 ஆயிரம் மாணவ, மாணவி​கள் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​துள்​ளனர். விண்​ணப்​பிக்​கும் அவகாசம் 23-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு, சேலம் தலை​வாசல், உடுமலைப்​பேட்​டை, தேனி வீர​பாண்டி ஆகிய 7 இடங்​களில் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன. இந்த கல்​லூரி​களில் ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட கால்​நடை மருத்​து​வம், பராமரிப்பு படிப்​புக்கு (பி​விஎஸ்சி - ஏ.ஹெச்) 660 இடங்​கள் இருக்​கின்​றன.

இதில் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு 15 சதவீத இடங்​கள் வழங்​கப்​படு​கின்​றன. திரு​வள்​ளூர் மாவட்​டம் கோடு​வெளி​யில் உள்ள உணவு, பால்​வளத் தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 60 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்​ளன. இதில் உணவுத் தொழில்​நுட்ப படிப்​பில் 6 இடங்​களும், பால்​வளத் தொழில்​நுட்ப படிப்​பில் 3 இடங்​களும் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு வழங்​கப்​படு​கின்​றன.

ஓசூர் மத்​தி​கிரி​யில் உள்ள கோழி​யின உற்​பத்​தி, மேலாண்​மைக் கல்​லூரி​யில் கோழி​யின தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், உணவு தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்​ளன. சேலம் மாவட்​டம் தலை​வாசல் பகு​தி​யில் உள்ள இணைப்​புக் கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்ளன. 3 பி.டெக். பட்​டப் படிப்​பு​களும் 4 ஆண்​டு​கள் கொண்​ட​வை.

இந்​நிலை​யில், பிவிஎஸ்சி - ஏ.ஹெச் மற்​றும் பி.டெக். படிப்​பு​களுக்கு நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிப்​பது கடந்த மே 25-ம் தேதி தொடங்​கியது. பிவிஎஸ்சி - ஏ.ஹெச். படிப்​புக்கு 10,678 பேர், பி.டெக். படிப்​பு​களுக்கு 5,356 பேர் என மொத்​தம் 16,034 மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

விண்​ணப்​பிக்​கும் அவகாசம் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி​யுடன் முடிவ​தாக ஏற்கனவே அறிவிக்​கப்​பட்டிருந்தது. இந்நிலை​யில், மாணவர்​களின் கோரிக்​கையை ஏற்று, ஜூன் 23-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​நேரம், வெளி​நாட்​டினர். வெளி​நாடு வாழ் இந்​தி​யர், அவர்​களது வாரிசுகள், அவர்​களது நிதி ஆதரவு பெற்றவர்​களுக்கு இந்த கெடு நீட்​டிக்​கப்​பட​வில்​லை. அவர்​கள் 17-ம் தேதி மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இந்த அனைத்து படிப்​பு​களுக்​கும் பிளஸ்2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர்​ சேர்க்​கை நடை​பெறு​வது குறிப்​பிடத்​தக்​கது.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆசிரியர்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 5- வேலை நாட்களுக்குள் தீர்வு கான தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2026 - 2027 தகவல்

  

2026-2027  ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் அளிக்க உள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட 8 இலக்க Emis Id மூலம் ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டிய தேதி 15-06-2026 முதல் 22-06-2026 முடிய என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! ஒருவர் ஒன்றியத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய மூன்றுக்கும் ஒரு முறையில் மூன்று கட்டத்திலும் டிக் கொடுத்து பதிவு செய்தால் போதும். ஒவ்வொரு கலந்தாய்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டியது இல்லை. Beo Approve செய்தவுடன்  ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 3 காப்பிகள் பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று Beo அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்பதை அவசியம் கவனத்தில் கொள்ளுங்கள்!

👇👇👇

https://whatsapp.com/channel/0029VaALwicAu3aFvcBQEF2F



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NEET UG Re-Examination (21.06.2026) - Hall Ticket Download - Direct Link

 National Tcsting Agency will conduct the National Eligibility cum Entrance Test /NEET (UG) - 2026 on 21 June 2026 (Sunday) from 02:00 P.M. to 05:15 P.M.(Indian Standard Time). The Admit Cards are being released as per the following schedule



2026 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


ஜூன் 21 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது ; தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்

  தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு விவரம்; தனித்தேர் வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை தேர்வுத்துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணைய வழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தேர்வுக் கட்டணம் ரூ.125, இணைய வழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.

இதற்கிடையே மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 9, 10-ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன் ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும். முதன் முதலாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி பதிவுத் தாள் நகல், சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே 8-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப் பவர்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும். இது தவிர அனைத்து தனித் தேர்வர்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய சுய முகவரி உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இணைய வழியிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங் கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை உள்ளிட்ட தகவல் களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொது ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது?

  


1. பொது ‘டெட்' தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் பிஎட் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

2. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.


3. தமிழகத்தில் கடைசியாக 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெட் தேர்வு நடத்தப்பட்டது.

4. 2026-ம் ஆண்டுக்கான கால அட்டவணைப்படி, மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

5. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6. என்சிடிஇ விதிமுறைப்படி ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்தப்பட வேண்டும், ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) இதை முறையாகப் பின்பற்றுவதில்லை என தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

7. பொது டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட்டு விரைந்து தேர்வை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Aavin Salem Recruitment 2026: கால்நடை மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு! | ₹43,000 வரை சம்பளம்

 

Aavin Salem Recruitment 2026 – Veterinary Consultant வேலைவாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு தேடும் BVSc candidates-க்கு நல்ல வாய்ப்பு வெளியாகியுள்ளது. Salem District Co-operative Milk Producers Union Limited – Aavin Salem சார்பில் Veterinary Consultant / கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு Walk-in Interview நடைபெற உள்ளது.

இந்த recruitment மூலம் மொத்தம் 01 vacancy நிரப்பப்பட உள்ளது. தகுதி உள்ள candidates தேவையான original documents உடன் நேரடியாக interview-க்கு கலந்து கொள்ளலாம்.

Aavin Salem Recruitment 2026 – Quick Info

விவரம்தகவல்
நிறுவனம்Salem District Co-operative Milk Producers Union Limited
Brand / DepartmentAavin Salem
Post NameVeterinary Consultant
மொத்த காலியிடங்கள்01
Job LocationSalem, Tamil Nadu
QualificationB.V.Sc & AH
Salary₹43,000 வரை
Apply ModeWalk-in
Walk-in Date18.06.2026
Interview Timeகாலை 10.00 மணி
Selection ProcessWalk-in Interview
Application FeeNo Fee
Official Websitehttps://aavin.tn.gov.in/

Vacancy Details

Post NameVacancy
Veterinary Consultant / கால்நடை மருத்துவ ஆலோசகர்01
Total01

Educational Qualification

Veterinary Consultant

Candidates கீழ்க்கண்ட qualification கொண்டிருக்க வேண்டும்:

  • B.V.Sc & AH
  • கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவுச் சான்று அவசியம்

Veterinary Science / Animal Husbandry qualification உள்ள candidates இந்த Walk-in Interview-க்கு கலந்து கொள்ளலாம்.


Salary Details

Post NameMonthly Salary
Veterinary Consultant₹43,000 வரை

குறிப்பு: சம்பளம் / honorarium தொடர்பான முழு விவரத்தை candidates official notification / interview venue-ல் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


Age Limit

இந்த Aavin Salem Recruitment 2026 notification-ல் age limit விவரம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. Candidates official notification-ல் உள்ள eligibility instructions-ஐ சரிபார்த்து interview-க்கு செல்லவும்.


Selection Process

Aavin Salem Veterinary Consultant selection கீழ்க்கண்ட முறையில் நடைபெறும்:

  • Walk-in Interview
  • Document Verification
  • Veterinary qualification verification
  • Council registration certificate verification

Written exam / online exam இல்லை.


Application Fee

இந்த recruitment-க்கு Application Fee இல்லை.

CategoryFee
All CandidatesNo Fee

Walk-in Interview Details

விவரம்தகவல்
Walk-in Date18.06.2026
Timeகாலை 10.00 மணி
ModeDirect Walk-in Interview
VenueSalem Aavin Office / Training Centre

Interview Venue / Address

Salem District Co-operative Milk Producers Union Limited,
Sithanur,
Thalavaipatty Post,
Salem – 636302.


Required Documents

Walk-in interview-க்கு செல்லும் candidates கீழ்க்கண்ட documents originals மற்றும் photocopies கொண்டு செல்ல வேண்டும்:

  • B.V.Sc & AH Degree Certificate
  • Veterinary Council Registration Certificate
  • 10th / 12th Certificates
  • Mark Sheets
  • Experience Certificate, if applicable
  • Aadhaar Card / Photo ID Proof
  • Address Proof
  • Passport Size Photos
  • Resume / Bio Data
  • Community Certificate, if applicable

எப்படி Apply செய்வது?

இந்த recruitment-க்கு online / offline application அனுப்ப தேவையில்லை. Candidates நேரடியாக Walk-in Interview-க்கு செல்ல வேண்டும்.

Attend Steps:

  1. முதலில் official notification-ஐ download செய்து முழுமையாக படிக்கவும்.
  2. B.V.Sc & AH qualification மற்றும் Veterinary Council Registration Certificate இருப்பதை உறுதி செய்யவும்.
  3. தேவையான original documents மற்றும் photocopies தயார் செய்யவும்.
  4. 18.06.2026 அன்று காலை நேரத்திற்கு முன் Salem Aavin venue-க்கு செல்லவும்.
  5. Interview மற்றும் document verification-ல் கலந்து கொள்ளவும்.

Important Dates

நிகழ்வுதேதி
Notification Date10.06.2026
Walk-in Interview Date18.06.2026
Interview Timeகாலை 10.00 மணி

Apply செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

  • இது Walk-in Interview recruitment.
  • Online application தேவையில்லை.
  • Original documents இல்லாமல் interview-ல் பிரச்சனை ஏற்படலாம்.
  • Veterinary Council Registration Certificate முக்கியம்.
  • Application Fee இல்லை.
  • Interview நேரத்திற்கு முன் venue-க்கு செல்லவும்.
  • Salary / contract period போன்ற விவரங்களை official notification / interview venue-ல் உறுதி செய்யவும்.

யாருக்கு இந்த வேலைவாய்ப்பு நல்ல வாய்ப்பு?

இந்த Aavin Salem Recruitment 2026 கீழ்க்கண்ட candidates-க்கு நல்ல வாய்ப்பு:

  • B.V.Sc & AH qualification உள்ளவர்கள்
  • Veterinary Council Registration உள்ளவர்கள்
  • Salem district-ல் வேலை தேடுபவர்கள்
  • Aavin / Milk Producers Union-ல் பணியாற்ற விரும்புபவர்கள்
  • கால்நடை மருத்துவ field-ல் experience பெற விரும்புபவர்கள்

Official Notification PDF: Click Here
Aavin Official Website:
https://aavin.tn.gov.in/
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)


FAQs – Aavin Salem Recruitment 2026

Aavin Salem Recruitment 2026-ல் எத்தனை vacancy?

மொத்தம் 01 Veterinary Consultant vacancy அறிவிக்கப்பட்டுள்ளது.

Qualification என்ன?

B.V.Sc & AH qualification மற்றும் Veterinary Council Registration Certificate தேவை.

Walk-in Interview date என்ன?

Walk-in Interview 18.06.2026 அன்று நடைபெறும்.

Interview time என்ன?

காலை 10.00 மணி அளவில் interview நடைபெறும்.

Application fee உள்ளதா?

இல்லை. Application Fee இல்லை.

Selection process என்ன?

Walk-in Interview மற்றும் Document Verification அடிப்படையில் selection நடைபெறும்.

Salary எவ்வளவு?

Veterinary Consultant post-க்கு ₹43,000 வரை monthly salary வழங்கப்படலாம். Candidates official notification / interview venue-ல் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க