Election 2026 - பள்ளிக் . கட்டடங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Proceedings

         தேர்தல் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

பார்வையில் காணும் கடிதத்தின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 நடைபெறும் . பொருட்டு விரைவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவிருப்பதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு/தனியார் பள்ளி கட்டடங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் கட்சி சுவர் விளம்பரங்கள் பள்ளிக் . கட்டடங்களில் இருந்தால் அதனை அகற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு!

389012

💼  *வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE  (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

💼*எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு அஞ்சல் ஊழியர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு PAY RECOVERY MODE பாலிசிகளை துவங்க வேண்டாம்.

💼 *இதற்கு பதிலாக அஞ்சல் சேமிப்பு கணக்கு,  IPPB கணக்கு, இதர வங்கி கணக்குகளில் இருந்தும் ஆட்டோ பேமென்ட் செய்யும் நடைமுறையை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவும்.

💼 *மேலும் காப்பீடாளர் தங்களின் PLI பாலிசி Login மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் வசதியும் உள்ளது.

💼 *ஏற்கனவே பிடித்தம் செய்த பாலிசிகளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

10, +2 மாணவர்கள் விடைத்தாள் நகலை 3 மாதத்துக்குள் பெறலாம்! - ஆர்டிஐ சொல்வது என்ன?

hindutamil-prod%2F2026-03-13%2F92rwb7ed%2F1379466

தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 3 மாத காலத்துக்குள் பக்கத்துக்கு ரூ.2 செலுத்தி பெற முடியும் என்பதை அரசு தேர்வுகள் இயக்ககம் தனது இணையத்தில் வெளியிட வேண்டுமென மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவியான ஆர்.பிரியதர்ஷினி மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘2023-ம் ஆண்டு முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். நான் எழுதிய தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணக்குப்பதிவியல், விலங்கியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் விடைத் தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்தேன்.

ஆனால் தேர்வு முடிவு வெளியான 5 தினங்களுக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே விடைத்தாள் நகல் அளிக்கப்படும் எனக்கூறி இயற்பியல் பாடத்துக்கு மட்டும் விடைத்தாள் அளித்தனர். மற்ற பாடங்களுக்கு விடைத்தாள்கள் மறுக்கப்பட்டது. இதுபோன்ற பொதுத்தேர்வு விடைத்தாள்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கோரி பெற சட்டரீதியாக முழு உரிமை உள்ளது’’ என கோரியிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விடைத்தாள்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரி பெறும் உரிமை அனைத்து மாணவர்களுக்கும் உள்ளது.

அதன்படி அரசுத் தேர்வு இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தியோ அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி பக்கத்துக்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்தியோ விடைத்தாள் நகல்களை 3 மாத காலத்துக்குள் பெறலாம். இந்த காலக்கெடுவை 6 மாதமாக நீட்டிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை:

எனவே மனுதாரருக்கு அவர் கோரியுள்ள விடைத்தாள் நகல்களை செலவுத்தொகை ஏதுமின்றி 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அப்போதைய பொதுத்தகவல் அலுவலரான ஜெய தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளதால் அவருக்கு ரூ.25 ஆயிரத்தை ஏன் அபராதமாக விதிக்கக்கூடாது என்பது குறித்து அவர் எழுத்துப்பூர்வ விளக்கத்தை மார்ச் 27 அன்று ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த மனுவை ஏற்கெனவே சரியாக விசாரித்த மேல்முறையீட்டு அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

அதேபோல மாணவர்கள் ரூ. 2 கட்டணத்தில் விடைத்தாள் நகல்களை 3 மாதத்துக்குள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறமுடியும் என்பதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தனது இணைய தளத்திலும் அனைவரும் அறியும்வண்ணம் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TRB மூலம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 பேருக்கு பணிநியமனம் வழங்கி அரசாணை வெளியீடு!

393773

TRB மூலம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 பேருக்கு பணிநியமனம் வழங்கி அரசாணை வெளியீடு!

G.O.No.15 - Assistant Professor Appointment.pdf

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Kalanjiyam Appல் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி

சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

 Kalanjiyam செயலி மூலம் கருவூலம் மாற்றும் முறை :

  Kalanjiyam செயலியில் உங்கள் User ID (PPO Number) மற்றும் கடவுச்சொல் (Password) கொண்டு உள்நுழையவும்.

உள்ளே Pensioner மெனுவை தேர்ந்தெடுக்கவும்.

 அங்கு கொடுக்கப்பட்டுள்ள "Transfer of Pension Pay Office" அல்லது "Treasury Change" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

 நீங்கள் எந்த கருவூலத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

முக்கிய குறிப்புகள்:

 Approval: 

நீங்கள் செயலியில் சமர்ப்பிக்கும் கோரிக்கை, சம்பந்தப்பட்ட கருவூல அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே மாற்றம் நடைமுறைக்கு வரும்.

 * Web Portal:

செயலியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்தால், ifhrms.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் இதே மாற்றத்தைச் செய்துகொள்ளலாம்.

 * Mustering:

வருடாந்திர நேர்காணல் (Mustering) நிலுவையில் இருந்தால் அல்லது கருவூல கணக்கு தணிக்கையில் (Audit) ஏதேனும் நிலுவை இருந்தால் இந்தச் செயல்முறையில் தாமதம் ஏற்படலாம்.

இப்பதிவினை பிற ஓய்வூதிய நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் பகிரலாம்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மதிப்பீட்டு புலம் - Future Ready-மார்ச்-2026

மதிப்பீட்டு புலம் - Future Ready-மார்ச்-2026

வகுப்பு- 6 முதல் 9ஆம் வகுப்பு வரை

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 09.03.26 - மாலை 5.00 மணி முதல் 13.03.26 மாலை 5.00 மணி வரை.

இணையதள முகவரி : 

https://exam.tnschools.gov.in

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும்  பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧  மாணவர்கள் NAS/SLAS போன்ற அடைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளவதற்கு ஏதுவாக Future  Ready வினாக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து   பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மெரினாவில் 'கற்றனைத் தூறும் அறிவு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

.com/sortd-service/imaginary/v22-01/webp/medium/

 சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் 'கற்றனைத் தூறும் அறிவு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கற்றனைத் தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம் நூலினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி சார்பில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: சென்னை ஐஐடி சார்பில் வழங்கப்பட்டது

       தேசிய அளவில் சிறந்த பள்ளி ஆசிரியர்​கள் 6 பேருக்கு சென்னை ஐஐடி விருதுகள் வழங்​கப்​பட்​டன. பள்ளி மாணவர்​களுக்கு கணிதம், இயற்​பியல், வேதி​யியல் ஆகிய பாடங்​களை நல்ல முறை​யில் பயிற்​று​வித்​து, அறி​வியல் ஆர்​வத்தை ஏற்​படுத்​தி, அவர்​கள் அறி​வியல் மற்​றும் பொறி​யியல் படிப்​பு​களில் சேர சிறப்​பாகப் பணி​யாற்​றும் பள்ளி ஆசிரியர்​களுக்கு சென்னை ஐஐடி தேசிய அளவில் விருது வழங்கி கவுர​வித்து வரு​கிறது.

கடந்த ஆண்​டிலிருந்து வழங்​கப்​படும் இந்த விருது, ‘முதல் கொள்​கைகள் ஆசிரியர் விருது’ என அழைக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் 2026-ம் ஆண்​டுக்​கான ஐஐடி விருதுக்கு தேர்​வு செய்​யப்​பட்ட 6 ஆசிரியர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் காமகோடி நேற்று விருது வழங்​கி​னார்.

அவர் வாழ்த்​திப் பேசும்​போது, “ஒரு மாணவரின் எதிர்​காலத்தை வடிவ​மைப்​ப​தில் பள்ளி ஆசிரியர்​கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றனர். ஆசிரியர்​களால்​தான் மாணவர்​களின் சிந்​தனையை​யும் கற்​றலை​யும் மேம்​படுத்த முடி​யும்.

இத்​தகைய உயர் பணியை செய்​யும் ஆசிரியர்​களுக்கு உரிய அங்​கீ​காரம் கிடைப்​ப​தில்​லை. அந்த வகை​யில் மாணவர்​களுக்கு சிறந்த எதிர்​காலத்தை உரு​வாக்​கும் ஆசிரியர்​களுக்கு விருது வழங்கி ஐஐடி கவுரவிக்​கிறது.

இந்த விருது மற்ற ஆசிரியர்​களுக்​கும் உத்​வேகத்​தை​யும் ஊக்​கத்​தை​யும் அளிக்​கும் என்று நம்​பு​கிறோம். இதன்​மூலம் அனைத்து மாணவர்​களுக்​கும் தரமான கல்வி கிடைக்​கும். தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளபடி நம் நாட்​டில் உயர் கல்விக்கு செல்​லும் மாணவர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்பட வேண்​டும்” என்​றார்.

தொடர்ந்​து, டீன் (கல்​வி) பேராசிரியர் பிர​தாப் ஹரி​தாஸ் பேசும்​போது, “அடிப்​படை அறி​வியல் புரிதலுடன் ஐஐடி​யில் சேரும் மாணவர்​கள் உயர் கல்​வி​யிலும் வேலை​யிலும் சிறந்து விளங்​கு​கிறார்​கள். மாணவர்​கள் சரி​யான வழி​யில் படித்​தால் அறி​வியல், பொறி​யியல் படிப்புகள் மிகவும் உற்சாகம் அளிக்கும்'' என்றார்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தனித் தேர்வர்கள்/ Arrear செய்முறை தேர்வு சார்ந்த FAQ

379991

நண்பர்களே வணக்கம் 🙏

தனித் தேர்வர்கள்/ Arrear 

செய்முறை தேர்வு சார்ந்த FAQ

1) புதிய நடைமுறை படி (100 Mark) செய்முறை தேர்வு (20 Max) minimum pass Mark எவ்வளவு?

செய்முறை தேர்வு attendance/வருகை கட்டாயம்... 

Minimum pass Mark என்று எதுவும் கிடையாது...

2) பழைய நடைமுறை படி (200 Mark) செய்முறைத் தேர்வு (50 max) minimum pass Mark எவ்வளவு?

40 மதிப்பெண் குறைந்த பட்சம் எடுத்தால் மட்டுமே செய்முறை தேர்வில் தேர்ச்சி

3) புதிய நடைமுறை படி (100 மதிப்பெண்) 

செய்முறை தேர்வு எழுத வில்லை, internal marks zero, Theory இல் 35 எடுத்தால்? தேர்ச்சி ஆ?

இல்லை... செய்முறை தேர்வு கட்டாயம் எழுதி இருக்க வேண்டும்...

எனவே தேர்ச்சி இல்லை.

4)  கடந்த ஆண்டு internal marks (10க்கு) zero. இந்த ஆண்டு arrear exam போது internal marks வழங்க இயலுமா?

இயலாது... 

5) செய்முறை தேர்வு குறைந்த பட்சம் இல்லை எனில் தேர்ச்சி க்கு நிபந்தனைகள்?

புதிய முறையில்..

Theory+ internal+ practical

35/100 வேண்டும்

(Theory 15 minimum required)...

அதாவது செய்முறை தேர்வு வருகை புரிந்து (0/20) 

Internal (0/10)

Theory (35/70) எனில் அவர் தேர்ச்சி...

6) செய்முறை தேர்வு + theory இரண்டும் ஒன்றாக தேர்ச்சி பெற வேண்டுமா?

தேவையில்லை...

Theory இல் ஏற்கனவே தேர்ச்சி, எனில் புதிய முறையில் , செய்முறை தேர்வு மட்டும் எழுதி தேர்ச்சி பெறலாம்...

அதே போல ஏற்கனவே செய்முறை தேர்வு attended/வருகை எனில்

Theory exam மட்டும் எழுதி தேர்ச்சி பெறலாம்

( 35/100) மட்டுமே நிபந்தனை...

7) பழைய முறையில் (200) செய்முறை தேர்வில் 40 மதிப்பெண் எடுக்காதவர்கள் ?

அவர்கள் மீண்டும் தற்போது செய்முறை தேர்வு எழுத வேண்டும்

செய்முறை தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி.

8) பழைய முறையில் 50 செய்முறை தேர்வு.

அதில் 20 internal,  30 external இப்போது எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு?

Internal marks, அந்த தேர்வர்கள் படித்த பழைய பள்ளி தலைமை ஆசிரியர் இடம் internal marks details கையெழுத்து பெற்று கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்.

External practical மட்டுமே நடத்தப்படும்.

9) ஏற்கனவே வழங்கப்பட்ட internal marks எப்படி பார்ப்பது?

TML இல் practical +Theory என தனியே இருக்கும்..

மதிப்பெண் சான்றிதழ்களில் 2001 க்கு பிறகு practical+ Theory என பிரித்து இருக்கும்...

10) 2001 முன் பழைய மாணவர், practical marks எப்படி பெறுவது?

பள்ளி தலைமை ஆசிரியரை அணுக வேண்டும்...

ஒருவேளை பள்ளியில் இருந்து செய்முறை தேர்வு விவரங்கள் பெற இயலவில்லை எனில் தற்போது மீண்டும் செய்முறை தேர்வு எழுதி 40 மதிப்பெண் குறைந்த பட்சம் எடுக்க வேண்டும்..

என அறிவுறுத்தப்படுகிறது .

11) புதிய முறையில் (100) மதிப்பெண், மீண்டும் செய்முறை தேர்வு எழுத வேண்டுமா? 

தேவை இல்லை... (பதிவின் நோக்கம் இது தான்) ...

இதுவரை ஒருமுறை கூட செய்முறை தேர்வில் பங்கேற்காதவர்கள் மட்டுமே தற்போது செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும் ...

ஏற்கனவே appeared எனில் அவர்களுக்கு செய் முறை தேர்வு மீண்டும் கிடையாது...

12) பள்ளியில் பயின்று தோல்வி அடைந்த மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பற்றி புரிந்தது..

Direct private candidate practicals என்ன நடைமுறை?

தேவை எழாது...

எந்த ஒரு Direct private ( பள்ளியில் பயிலாமல் நேரடியாக தனித் தேர்வர்கள்) candidate, practical subject உள்ள பிரிவை எடுக்க முடியாது...

Direct private candidate

குறிப்பிட்ட 5 group ஐ மட்டுமே தேர்வு செய்ய இயலும் ( non practical subject group)

எனவே direct private candidate, practical என்ற வினா எழாது .

13) புதிய/பழைய முறையில் தற்போது தனித்தேர்வர்கள்

செய்முறை தேர்வு எழுதுவது எப்படி?

தேர்வுத் துறை இயக்குநர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்கள் ( பார்க்க இணைப்பு) ..

தனித் தேர்வர்கள் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்/தலைமை ஆசிரியர்கள் தான் செய்முறை தேர்வு நடத்த வேண்டும்...

14) தனித் தேர்வர்கள் யார் யாருக்கு செய்முறை தேர்வு நடத்த வேண்டும் என list அனுப்பபடுமா?

இல்லை... தேர்வுத் துறையில் இருந்து practical candidates list என தனியே எதுவும் அனுப்ப படமாட்டாது..

அந்த தனித் தேர்வர்கள் தான் தங்களை (chief superintendent) அணுக வேண்டும்...

செய்முறை தேர்வு எந்த எந்த பாடத்தில் தேவை என்பதை தனித் தேர்வர்கள் இடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கி கொள்ளுங்கள் 

15) தனித் தேர்வர்கள் practical செய்ய internal external நியமனம் செய்வார்களா? 

எத்தனை நபர்கள் செய்முறை தேர்வு எழுத வேண்டும் என்ற தகவல் தனியே அனுப்ப இயலாது... 

Internal external practical teacher duty orders வழங்க மாட்டார்கள்...

Chief superintendent, அந்த அந்த பாட 

Hall invigilator களை external ஆக பயன் படுத்தி கொள்ளலாம்...

அந்த பாடத்தில் hall invigilator இல்லை எனில்..

அந்த பள்ளி subject teachers பயன்படுத்தி கொள்ளலாம்...

அல்லது chief superintendent, அவர் பள்ளி பாட ஆசிரியரை வரவழைத்து செய்முறை தேர்வு நடத்தி கொள்ளலாம்..

( Internal examiner தேவைப்படாது)

External examiner மட்டும் போதும்

16) Regular candidate போல் empty practical Mark sheet download?

இல்லை அப்படி எதுவும் DGE இல் இருந்து download ஆகாது.

மதிப்பெண் படிவம் இணைப்பில் உள்ளதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் 

17) practical marks details யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?

செய்முறை தேர்வுகள் அனைத்தும் முடித்த பிறகு

AD exam office இல் *31/3/2026* க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்...

18) AD exam office இல் என்ன என்ன ஒப்படைக்க வேண்டும்?

Covering letter

1) Subject wise Mark sheet

2) Candidate internal marks details signed by previous school HM

3) Candidate Hall ticket xerox

4) Candidate request letter for practical exam

தலைமை ஆசிரிய நண்பர்களின் சந்தேகங்கள் மற்றும் கிடைக்கப் பெற்ற செயல்முறைகள் மற்றும் அரசாணை படி இந்த *தகவல் தொகுப்பு* ..

பகிர்கிறேன்

கூடுதல் விவரங்களுக்கு

 *தங்களின் மாவட்ட AD exam office / CEO office தொடர்பு கொள்ளுங்கள்* 

தகவலுக்காக 

 *க.செல்வக்குமார்* 

மதுரை மாவட்டம் 🙏

10/3/26