பெண்களுக்கு வேலைவாய்ப்பு; சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி - செப்டம்பர் 17-ம் தேதியே கடைசி நாள்

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) செயல்படுகிறது. இங்கு சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சுய உதவிக்குழு பெண் விண்ணப்பதார்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு குறிப்பிட்ட கல்வித்தகுதி கட்டாயமில்லை. அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

பணியின் தன்மைகள்
சமுதாய வளப் பயிற்றுநர் தகவல் தேடுதல், தகவல் சேகரித்தல், புதிய தகவல்கள் சேர்த்தல் மற்றும் தகவல் தொகுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தகவல் தேடுதல் - பயிற்சிக்கு தேவையான தகவல்களை தேடி சேகரிப்பவராக இருக்க வேண்டும்.
தகவல் சேகரித்தல் - பயிற்சிக்கான தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
புதிய தகவல்கள் சேர்த்தல் - காலத்திற்கு ஏற்ப புதிய தகவல்களை சேகரிக்க வேண்டும்.
தகவல் தொகுத்தல் - தேவையான நேரத்தில் தகவல்களை வழங்குபவராக இருக்க வேண்டும்.

தகுதிகள்

  • இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக வயது வரம்பு இல்லை.
  • கல்வித்தகுதி கட்டாயமில்லை. நல்ல உடற்தக்தி மற்றும் திறன் இருந்தால் போதுமானது.
  • சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
  • மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10இல் கலந்துகொண்டு இருந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதார்களுக்கு செல்போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • சுய உதவிக்குழு வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும். குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் தேவை.
  • அரசியலில் பொறுப்புகளில் இருக்கக்கூடாது. தனியார் நிறுவனங்களில் முழு நேரம் அல்லது பகுதி நேரம் பதிவியில் இருக்கக்கூடாது.
ஊதியம்
இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுகு பயிற்சி நடைபெறும் காலத்தில் அதற்கான மதிப்பூதியம் மட்டும் வழங்கப்படும். மாத ஊதியம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பயிற்சியாளர்கள் பணி நிரந்தரம் உரிமை கோர முடியாது.

விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள பெண்கள் https://dindigul.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதார்களின் அடிப்படை தகவல்கள், மொழி திறன், கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து, புகைப்படம், கல்வித்தகுதி நகல் மற்றும் குழு பரிந்துரை தீர்மானம் இணைத்து அனுப்ப வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம்,
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு

முக்கிய நாட்கள்
விவரம்தேதிகள்
விண்ணப்பம் தொடக்கபப்ட்ட நாள்10.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்17.09.2025
எழுத்துத் தேர்வு, நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்

இப்பணி தொடர்பான விவரங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண் : 0451 - 2460050 அல்லது உதவி திட்ட அலுவலர் 9944133895 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

டிப்ளமோ போதும்!! திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்...

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.apprenticeshipindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, வரும் 2025 செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

திருச்சி பெல் நிறுவனத்தில் பட்டதாரி, தொழில்நுட்ப, மற்றும் வர்த்தக அப்ரெண்டீஸ் என மொத்தம் 760 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 120 பட்டதாரி அப்ரெண்டீஸ், 90 தொழில்நுட்ப அப்ரெண்டீஸ் மற்றும் 550 வர்த்தக அப்ரெண்டீஸ் பணியிடங்கள் அடங்கும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஐடிஐ, டிப்ளமோ, அல்லது பி.இ./பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பணியின் தன்மைக்கேற்ப, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பட்டமோ அல்லது டிப்ளமோவோ பெற்றிருப்பது அவசியம். உதாரணமாக, கணக்கியல் சார்ந்த அப்ரெண்டீஸ் பணிக்கு பிகாம் பட்டமும், மனிதவளப் பிரிவில் உதவியாளர் பணிக்கு பிஏ பட்டமும் தேவை.

பயிற்சி காலம் மற்றும் ஊதியம்: இந்த அப்ரெண்டீஸ் வேலைகள் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே. பயிற்சி காலத்தில், பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். பட்டதாரி அப்ரெண்டீஸ்களுக்கு மாத ஊதியம் ₹12,000/- ஆகவும், தொழில்நுட்ப அப்ரெண்டீஸ்களுக்கு ₹11,000/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ அப்ரெண்டீஸ்களுக்கு மாத ஊதியம் ₹11,050/- வழங்கப்படும்.

வயது வரம்பு மற்றும் தளர்வுகள்: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசின் இடஒதுக்கீடு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.apprenticeshipindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, வரும் 2025 செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SCERT - Training For PG Chemistry Teachers - Proceedings & Teachers List

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு சென்னை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய 3 மண்டலங்களில் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

Click Here to Download - SCERT - Training For PG Chemistry Teachers - Proceedings & Teachers List - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Special TET - அனுமதிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கடிதம்.

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

STET

சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அனுமதிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம்.

சிறப்பு  தகுதித் தேர்வு முடிந்த பின்னர் தான் பதவி உயர்வு வழங்க முடியும் என தகவல்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர்களுக்கு IIT யில் இலவச AI Courses பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

AI

ஆசிரியர்களுக்கு IIT யில் இலவச AI Courses பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30

1. ஐஐடி மெட்ராஸ், அதன் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை மூலம், ஸ்வயம் பிளஸ் தளம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆன்லைன் AI படிப்புகளை வழங்குகிறது.  

2. 25 முதல் 45 மணிநேரம் வரையிலான இந்தப் படிப்புகள், கற்பித்தல், மதிப்பீடு மற்றும் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு அத்தியாவசிய AI அறிவு மற்றும் நடைமுறைக் கருவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.  

3. இந்தப் படிப்புகள் இலவசம் என்றாலும், சான்றிதழ் பெற விரும்பும் ஆசிரியர்கள் தேர்வெழுதி, ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அதைப் பெறலாம்.  

4. ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அக்டோபர் 10 ஆம் தேதி வரை https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses இல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

THIRAN - காலாண்டுத் தேர்வு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கானவழிகாட்டுதல்கள்

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

👍🏻 *THIRAN இயக்கம் - 2025*

✅ _6-9 வகுப்புகளில் பயிலும் THIRAN மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வழிகாட்டுதல்கள்_

🙏🏻 அன்பார்ந்த ஆசிரியர்களே, உங்கள் மதிப்புமிக்க கருத்துக்கு நன்றி!

📮 *உங்கள் கருத்துகளையும் கள யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு, THIRAN மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகளுக்கு பின்வரும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.*

▪️ *THIRAN மாணவர்களுக்குத் தனி வினாத்தாள்கள் வழங்கப்படுமா?*

ஆம்! THIRAN மாணவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அடிப்படை கற்றல் முடிவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட அலகுகளைக் கற்றிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு-THIRAN கையேட்டின் பகுதி ஒன்றில் இருந்து, அடிப்படைக் கற்றல் அடைவுகளைச் (BLO) சார்ந்த கேள்விகளைக் கொண்ட தனி வினாத்தாள்களைப் பெறுவார்கள்.

▪️ *அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், THIRAN அலகுகள் இல்லாத பட்சத்தில், மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படுமா?*

ஆம்! THIRAN மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படும்.

10.09.2025 முதல் 12.09.2025 வரை exam.tnschools.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயிற்சி அளிக்கலாம்.

▪️ *THIRAN தேர்வுகள் எத்தனை மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்?*

காலாண்டு தேர்வு மதிப்பீட்டு முறைக்கு இணங்க, 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்களுக்கும், 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு 100 மதிப்பெண்களுக்கும் வினாத்தாள்கள் வழங்கப்படும்.

▪️ *அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா? கேள்வித்தாள் பாட புத்தகத்தைச் சார்ந்து வருமா அல்லது பொதுவான கேள்விகளாக இருக்குமா?*

மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கற்றால், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்னும் கருத்தில் THIRAN இயக்கமானது தமிழ். ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மட்டுமே கூடுதல் பயிற்சி அளிக்கும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது. எனினும், மாணவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியினை அளிக்க அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். இந்தப் பாடங்களுக்கான கேள்விகள், முந்தைய வகுப்புகளில் இருந்து மிகவும் எளிமையான பொதுவான BLO கேள்விகளாக இருக்கும்.

▪️ *THIRAN மாணவர்கள் கேள்வித்தாளிலேயே விடையளிக்கும் படி சொல்ல வேண்டுமா?*

வழக்கமான காலாண்டுத் தேர்வு நடத்தும் முறையிலேயே இத்தேர்வும் நடத்தலாம்.

▪️ *THIRAN மாணவர்களுக்கு தனி நேரம் தனி வகுப்பில் தேர்வு நடத்த வேண்டுமா?*

தனியாக நேரம் ஒதுக்கி, தனி வகுப்பில் தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. காலாண்டு தேர்வு அட்டவணையின்படி தேர்வுகளை நடத்தவும். 

💥 *நடுநிலை பள்ளிகளுக்கு:*

THIRAN மற்றும் THIRAN அல்லாத மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும், அந்தந்த பாட தேர்விற்கு முந்தைய நாள் காலை 9.00 மணி முதல் exam.tnschools.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

💥 *உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு:*

THIRAN மாணவர்களுக்கு மட்டும் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள், அந்தந்த பாட தேர்விற்கு முந்தைய நாள் காலை 9.00 மணி முதல் exam.tnschools.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

📣 _*தேர்வுகளை சிறப்பாக நடத்தி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி!*_

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2019 அக்டோபர் மாதம் சரண் விடுப்பு செய்தவர்கள் தற்போது அக்டோபர் 2025 சரண் விடுப்பு செய்து பணம் பெறலாம்

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250910_101127

2019 அக்டோபர் மாதம் சரண் விடுப்பு செய்தவர்கள் தற்போது அக்டோபர் 2025 சரண் விடுப்பு செய்து பணம் பெறலாம் 

EL Surrender GO - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

6 முதல் 9 வகுப்பு வரையான திறன் முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் - பணிமனை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் சார்ந்து SCERT Proceedings

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250910-WA0022

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - மதிப்பீட்டுப் புலம் - 6 முதல் 9 வகுப்பு வரையான திறன் முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் - பணிமனை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் – 08.09.2025 முதல் 12.09.2025 அனுமதித்தல் - சார்ந்து SCERT Proceedings 

பார்வை 1 - ல் காணும் கடிதத்தின்படி , 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கியுள்ள திறன் மாணவர்களுக்கென முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ் , ஆங்கிலம் , கணக்கு , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா 1 மாதிரி வினாத்தாள் மற்றும் 2 முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே , தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கும் பணிமனை 08.09.2025 முதல் 12.09.2025 முடிய ஐந்து ( 05 ) வேலை நாட்களில் நடத்திட ஆணை வழங்கப்படுகிறது . 08.09.2025 அன்று இதன்படி , இணைப்பு ( 1 ) ல் தெரிவிக்கப்பட்டுள்ள சார்ந்த ஆசிரியர்கள் முதல்வர்கள் நடைபெறும் பணிமனையில் கலந்துகொள்ள அறிவுறத்தப்படுகிறார்கள் . எனவே , சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவிக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது . மேலும் , திறன் முதல் பருவம் / காலாண்டுத்தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பக்கவடிவமைப்பு செய்யும் பணியினை 03 Layout பணியாளர்களைக் கொண்டு 10.09.2025 முதல் மேற்கொள்வதற்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

STET - சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அனுமதிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம்.

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250910_151937

சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அனுமதிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம்.

சிறப்பு  தகுதித் தேர்வு முடிந்த பின்னர் தான் பதவி உயர்வு வழங்க முடியும் என தகவல்.

Video News 👇👇👇