டிப்ளமோ போதும்!! திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்...

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.apprenticeshipindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, வரும் 2025 செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

திருச்சி பெல் நிறுவனத்தில் பட்டதாரி, தொழில்நுட்ப, மற்றும் வர்த்தக அப்ரெண்டீஸ் என மொத்தம் 760 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 120 பட்டதாரி அப்ரெண்டீஸ், 90 தொழில்நுட்ப அப்ரெண்டீஸ் மற்றும் 550 வர்த்தக அப்ரெண்டீஸ் பணியிடங்கள் அடங்கும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஐடிஐ, டிப்ளமோ, அல்லது பி.இ./பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பணியின் தன்மைக்கேற்ப, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பட்டமோ அல்லது டிப்ளமோவோ பெற்றிருப்பது அவசியம். உதாரணமாக, கணக்கியல் சார்ந்த அப்ரெண்டீஸ் பணிக்கு பிகாம் பட்டமும், மனிதவளப் பிரிவில் உதவியாளர் பணிக்கு பிஏ பட்டமும் தேவை.

பயிற்சி காலம் மற்றும் ஊதியம்: இந்த அப்ரெண்டீஸ் வேலைகள் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே. பயிற்சி காலத்தில், பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். பட்டதாரி அப்ரெண்டீஸ்களுக்கு மாத ஊதியம் ₹12,000/- ஆகவும், தொழில்நுட்ப அப்ரெண்டீஸ்களுக்கு ₹11,000/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ அப்ரெண்டீஸ்களுக்கு மாத ஊதியம் ₹11,050/- வழங்கப்படும்.

வயது வரம்பு மற்றும் தளர்வுகள்: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசின் இடஒதுக்கீடு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.apprenticeshipindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, வரும் 2025 செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment