THIRAN - காலாண்டுத் தேர்வு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கானவழிகாட்டுதல்கள்

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

👍🏻 *THIRAN இயக்கம் - 2025*


✅ _6-9 வகுப்புகளில் பயிலும் THIRAN மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வழிகாட்டுதல்கள்_


🙏🏻 அன்பார்ந்த ஆசிரியர்களே, உங்கள் மதிப்புமிக்க கருத்துக்கு நன்றி!


📮 *உங்கள் கருத்துகளையும் கள யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு, THIRAN மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகளுக்கு பின்வரும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.*


▪️ *THIRAN மாணவர்களுக்குத் தனி வினாத்தாள்கள் வழங்கப்படுமா?*

ஆம்! THIRAN மாணவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அடிப்படை கற்றல் முடிவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட அலகுகளைக் கற்றிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு-THIRAN கையேட்டின் பகுதி ஒன்றில் இருந்து, அடிப்படைக் கற்றல் அடைவுகளைச் (BLO) சார்ந்த கேள்விகளைக் கொண்ட தனி வினாத்தாள்களைப் பெறுவார்கள்.


▪️ *அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், THIRAN அலகுகள் இல்லாத பட்சத்தில், மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படுமா?*


ஆம்! THIRAN மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படும்.


10.09.2025 முதல் 12.09.2025 வரை exam.tnschools.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயிற்சி அளிக்கலாம்.


▪️ *THIRAN தேர்வுகள் எத்தனை மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்?*


காலாண்டு தேர்வு மதிப்பீட்டு முறைக்கு இணங்க, 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்களுக்கும், 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு 100 மதிப்பெண்களுக்கும் வினாத்தாள்கள் வழங்கப்படும்.


▪️ *அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா? கேள்வித்தாள் பாட புத்தகத்தைச் சார்ந்து வருமா அல்லது பொதுவான கேள்விகளாக இருக்குமா?*


மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கற்றால், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்னும் கருத்தில் THIRAN இயக்கமானது தமிழ். ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மட்டுமே கூடுதல் பயிற்சி அளிக்கும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது. எனினும், மாணவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியினை அளிக்க அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். இந்தப் பாடங்களுக்கான கேள்விகள், முந்தைய வகுப்புகளில் இருந்து மிகவும் எளிமையான பொதுவான BLO கேள்விகளாக இருக்கும்.


▪️ *THIRAN மாணவர்கள் கேள்வித்தாளிலேயே விடையளிக்கும் படி சொல்ல வேண்டுமா?*


வழக்கமான காலாண்டுத் தேர்வு நடத்தும் முறையிலேயே இத்தேர்வும் நடத்தலாம்.


▪️ *THIRAN மாணவர்களுக்கு தனி நேரம் தனி வகுப்பில் தேர்வு நடத்த வேண்டுமா?*


தனியாக நேரம் ஒதுக்கி, தனி வகுப்பில் தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. காலாண்டு தேர்வு அட்டவணையின்படி தேர்வுகளை நடத்தவும். 


💥 *நடுநிலை பள்ளிகளுக்கு:*


THIRAN மற்றும் THIRAN அல்லாத மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும், அந்தந்த பாட தேர்விற்கு முந்தைய நாள் காலை 9.00 மணி முதல் exam.tnschools.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


💥 *உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு:*


THIRAN மாணவர்களுக்கு மட்டும் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள், அந்தந்த பாட தேர்விற்கு முந்தைய நாள் காலை 9.00 மணி முதல் exam.tnschools.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


📣 _*தேர்வுகளை சிறப்பாக நடத்தி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி!*_


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment