முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
காலாண்டுத் தேர்வு 2025 அட்டவணை - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறை
ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " - தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு இன்று விருது வழங்கும் விழா...
ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " - இன்று விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது.
NEWS 7 தொலைக்காட்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் " ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " விருதுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தேர்வாகியுள்ள 250 ஆசிரியர்களுக்கு இன்று ( 26.8.2025 ) விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா சென்னையில் உள்ள MCC பள்ளியில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
விருதுகளை வழங்க சிறப்பு விருந்தினராக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.
விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துகள் 💐
Selected Teachers List - Download here
✨ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.⭐
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பை வெளியிட்டது ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இத்தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து, இலவசமாக பெறலாம் எனவும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய- மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்
இந்த அகாடமியில் கடந்த ஆண்டுகளில் படித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றிபெற்று பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் (தாள்-1 மற்றும் தாள்-2) தேர்வுகள் 15.11.2025 அன்று தாள்-1 மற்றும் 16.11.2025 அன்று தாள்-2 ம் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுகளை எழுதும் ஆசிரியர்களின் வெற்றிக்கு உதவும் வகையில், புதிய பாடத்திட்டத்தின்படி சமச்சீர் பாடப்புத்தகங்களை 'ஆசிரியர் தகுதித் தேர்வு நோக்கில்' தொகுத்து, இந்த 'ஆசிரியர் தகுதித் தேர்வு பாடநூல்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாட நூல்கள் அனைத்தும் இ-புத்தகங் களாக வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும். இந்த பாடநூல்களை படித்தாலே, ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
முன்பதிவுக்கு... இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) ஆகிய இரண்டு தாள்களுக்கான பாட நூல்களை இலவசமாக பெற 'TNTET PAPER-I,II FREE TEXT BOOKS' என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியுடன் 9176055542 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்
மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.
இலக்கியத் திறனறி தேர்வு: செப்டம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம்
தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம்
பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டுக்கான திறனறித் தேர்வு அக்டோபர் 11-ல் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
10-ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் 26-ம் தேதி (இன்று) பிற்பகல் வெளியிடப்படுகிறது.
பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல் அல்லது மறுப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் இன்று பிற்பகல் முதல் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
மாற்றுத்திறனாளி மாணவர் பற்றிய கட்டுரைப் போட்டி - `எனது தோழன் / எனது தோழி` என்ற தலைப்பில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்துதல் சார்ந்து DSE செயல்முறைகள்!
மாற்றுத்திறனாளி மாணவர் பற்றிய கட்டுரைப் போட்டி - `எனது தோழன் / எனது தோழி` என்ற தலைப்பில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்துதல் சார்ந்து DSE செயல்முறைகள்!
👇👇👇👇
DSE - Essay Competition Proceedings - Download here
2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள்
Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)...
2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள் (RL / RH)
ஆகஸ்ட்
26.08.2025 செவ்வாய் சாம உபகர்மா
செப்டம்பர்
05-09-2025 - வெள்ளி - ஓணம் ( அன்று மிலாடி நபி அரசு விடுமுறை.. RL எடுக்க முடியாது )
அக்டோபர்
03-10-2025 - வியாழன் - கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்
டிசம்பர்
04-12-2025 - வியாழன் - கார்த்திகை தீபம்
GATE - நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான ‘கேட்' நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுவதால் இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த முறை கேட் தேர்வை கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவனம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேட் நுழைவுத் தேர்வில் என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளின் கீழ் கணினி வழியில் தேர்வு நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும் இந்த தேர்வை ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்களை மட்டும் தேர்வு செய்து எழுதலாம்.
2026ம் ஆண்டுக்கான கேட் தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்களும் இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பம் உள்ளவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (ஆகஸ்ட் 25-ம்தேதி) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு எழுத விருப்பம் உள்ளர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கூடுதல் விவரங்களுக்கு www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இந்த இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 25-ம்தேதி) முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘கேட் 2026’ தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு மார்ச் 19-ம்தேதி வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிலாடி நபி - 2025 (விடுமுறை) எப்போது? ஷரியத் அறிவிப்பு
ஹிஜ்ரி 1447 சஃபர் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 24-08-2025 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை திருநெல்வேலி மேலப்பாளையத்தில் காணப்பட்டது.
ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 25-08-2025 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் மீலாதுன் நபி 05-09-2025 தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்.
திறனறி தேர்வுகளை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு
அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம்தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் படித்த பாடப் பொருட்களை ஒட்டி உயர் சிந்தனை வினாக்களை வடிவமைக்கும் பணி எஸ்சிஇஆர்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஆங்கிலப் பாடத்தில் பத்திகள் வாசித்தல் மற்றும் இலக்கணம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் சிந்தனை திறனை மேம்படுத்தும் வினாக்கள் ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கும், பொது அறிவு வினாக்களை வகுப்பு ஆசிரியருக்கும் தரவேண்டும். இந்த வினாக்களைக் கொண்டு மாதம்தோறும் மாணவர்களிடம் மதிப்பீடு நடத்த வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.
இதன்மூலம் திறன் அடிப்படையிலான கேள்விகளில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறுவதுடன், பல்வேறு அடைவுத் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை மாணவர்கள் நன்கு புரிந்து படிக்கவும் வழிசெய்யும். ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பொறுப்பு அலுவலர்கள் தங்கள் பள்ளி ஆய்வின்போது இந்த செயல்பாடுகளின் நிலை குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாட வேண்டும். கலந்தாய்வுக் கூட்டங்களின் போதும் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுத இது உதவிகரமாக இருக்கும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
அகல் விளக்கு' முதல் 'வானவில்' வரை திட்டங்கள்; பாடவேளையை பறிப்பதாக ஆசிரியர்கள் குமுறல்
பள்ளிக்கல்வி வெளியிடும் அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கே அதிக நேரம் செலவாகி வருவதால், ஆசிரியர்கள் தங்களுக்கான பாட வகுப்புகளை சரியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம், மகிழ் முற்றம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும், 'லெவல் அப்', 'திறன்', 'ஸ்லாஸ்' போன்ற கற்றல் அடைவு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. அதோடு, வினாடி-வினா, சிறார் திரைப்படம், இணையதளப் பயன்பாடு விழிப்புணர்வுக்கான 'அகல்விளக்கு' ஆகியவற்றையும் செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் தலைமையில் 5 முதல் 6 மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மன்ற செயல்பாடுகளுக்காக வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த நேரத்தில் அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக நிறைவு செய்ய முடிவதில்லை.
மேலும், மாணவர்களின் கற்றல் அடைவு மற்றும் மன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பாட வகுப்புகளை நடத்த முடியாத சூழல் உருவாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'வெளியிடப்படும் அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கே அதிக நேரம் செல்கிறது. இதனால் பாடங்களை முழுமையாக எடுக்க முடியவில்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், அறிவிப்புகளை செயல்படுத்தவும், பாடங்களை நடத்தவும் முடியும். இல்லையெனில் செயல்பாட்டில் தொய்வு ஏற்படும். மாணவர்களின் நலனுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிடும் அதேசமயம், போதியளவில் ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்' என தெரிவித்தனர்.







