திறனறி தேர்வுகளை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு

 அரசுப் பள்ளி மாணவர்​கள் திறனறி தேர்​வு​களை எளி​தில் எதிர்​கொள்​ளும் வித​மாக ‘ப்​யூச்​சர் ரெடி’ வினாக்​கள் மூலம் மாதம்​தோறும் பயிற்சி அளிக்​கப்பட உள்​ளது.


இதுதொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்​சி, பயிற்சி நிறு​வனம் (எஸ்​சிஇஆர்​டி) அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்​கள் உயர் சிந்​தனை வினாக்​களை எதிர்​கொள்​ளும் திறனை மேம்​படுத்​த​வும், கற்​றல் அடைவுத் தேர்​வு​களை தன்​னம்​பிக்​கை​யுடன் எழுத​வும் பல்​வேறு நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதன் தொடர்ச்​சி​யாக, ‘எதிர்​காலத்​துக்கு தயா​ராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்​போது முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி, மாதம்​தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்​கிலம், கணிதம், அறி​வியல், பொது அறிவு சார்ந்த பாடங்​களில் மாணவர்​கள் கடந்த கல்வி ஆண்​டில் படித்த பாடப் பொருட்​களை ஒட்டி உயர் சிந்​தனை வினாக்​களை வடிவ​மைக்​கும் பணி எஸ்​சிஇஆர்​டிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.


அதன் அடிப்​படை​யில், ஆங்​கிலப் பாடத்​தில் பத்​தி​கள் வாசித்​தல் மற்​றும் இலக்​கணம், கணிதம், அறி​வியல் ஆகிய பாடங்​களில் சிந்​தனை திறனை மேம்​படுத்​தும் வினாக்​கள் ஒவ்​வொரு மாத​மும் தயாரிக்​கப்​பட்​டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு​வனம் மூல​மாக பள்​ளி​களுக்கு அனுப்​பப்​படும். அதை பள்ளி தலைமை ஆசிரியர்​கள் பதி​விறக்​கம் செய்​து, கணிதம், ஆங்​கிலம், அறி​வியல் பாட ஆசிரியர்​களுக்​கும், பொது அறிவு வினாக்​களை வகுப்பு ஆசிரியருக்​கும் தரவேண்​டும். இந்த வினாக்​களைக் கொண்டு மாதம்​தோறும் மாணவர்​களிடம் மதிப்​பீடு நடத்த வேண்​டும். இதை தலைமை ஆசிரியர்​கள் முறை​யாக கண்​காணிக்க வேண்​டும்.


இதன்மூலம் திறன் அடிப்படையிலான கேள்விகளில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறுவதுடன், பல்வேறு அடைவுத் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை மாணவர்கள் நன்கு புரிந்து படிக்கவும் வழிசெய்யும். ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பொறுப்பு அலுவலர்கள் தங்கள் பள்ளி ஆய்வின்போது இந்த செயல்பாடுகளின் நிலை குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாட வேண்டும். கலந்தாய்வுக் கூட்டங்களின் போதும் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுத இது உதவிகரமாக இருக்கும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

0 Comments:

Post a Comment