10-ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

 அரசு தேர்​வு​கள் இயக்​குநர் சசிகலா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு கோரி மாணவர்​கள் விண்​ணப்​பித்​திருந்​தனர். அவர்​களில் மதிப்​பெண் மாற்​றம் உள்​ளவர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் www.dge.tn.gov.in என்ற இணை​யளத்​தில் 26-ம் தேதி (இன்​று) பிற்​பகல் வெளியிடப்​படு​கிறது.


பட்​டியலில் இடம் ​பெறாத பதிவெண்​களுக்​கான விடைத்​தாள்​களில் எவ்​வித மதிப்​பெண் மாற்​ற​மும் இல்​லை. மறுகூட்​டல் அல்​லது மறுப்​பீட்​டில் மதிப்​பெண் மாற்​றம் உள்ள தேர்​வர்​கள் மட்​டும் இன்று பிற்​பகல் முதல் மேற்​குறிப்​பிட்ட இணை​யதளத்​தில் தற்​காலிக மதிப்​பெண் சான்​றிதழை பதி​விறக்​கம் செய்யலாம்.

0 Comments:

Post a Comment