ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய 10 மிகப்பெரிய வேலைவாய்ப்புகள்; தமிழக, மத்திய அரசு வேலைகளின் லிஸ்ட்!

 Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்) 

ஜூலை மாதத்திற்கு பின்பு கல்லூரிகளில் படிப்பை முடித்து, வேலைக்கு தயாராக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய டாப் 10 அரசு வேலைவாய்ப்புகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

படிப்பை முடித்து வேலை தேடுக்கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கான சரியான மாதம் ஆகஸ்ட் ஆகும். தமிழ்நாடு அரசு மட்டுமின்றி, மத்திய அரசு துறைகளில் இருக்கும் மிகப்பெரிய பணி வாய்ப்புகள் இந்த மாதம் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும் டாப் 10 தமிழக மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் என்னென்ன, அவற்றுக்கான தகுதிகளை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் வேலை 2025
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 1,996 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்ப (TRB PG Teacher Recruitment 2025) அறிவிப்பு ஜூலை 10-ம் தேதி வெளியானது. முதுகலை டிகிரியுடன் பி.டெட் முடித்தவர்கள் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 28.09.2025 தேதி தேர்வு நடைபெறும்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://trb.tn.gov.in/

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு அறிவிப்பு 645 காலிப்பணியிடங்களுக்கு ஜூலை 15-ம் தேதி வெளியானது. குரூப் 2 பதவிகளில் 50 காலிப்பணியிடங்கள், குரூப் 2ஏ பதவிகளில் 595 காலிப்பணியிடங்கள் ( TNPSC Group 2 Exam 2025) உள்ளன. முதல்நிலை, முதன்மை என தேர்வு நடத்தப்படும். டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 13-ம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். முதல்நிலைத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://tnpsc.gov.in/ 

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வேலை

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் (TN Environment Dept Jobs 2025) உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. டிகிரி, பி.காம். பிஜி டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15-ம் தேதியே கடைசி நாள் ஆகும். இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக ரூ.68,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://environment.tn.gov.in/

நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படும் நான் முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தில் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள், அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களில் அதிகபடியாக 1.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://naanmudhalvan.tn.gov.in/

புலனாய்வுத் துறையில் அதிகாரி வேலை 2025
மத்திய அரசின் உள்துறையில் கீழ் செயல்படும் புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு ஜூலை 19-ம் தேதி வெளியானது. மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://www.mha.gov.in/en

எய்ம்ஸ் செவிலியர் வேலை 2025
தேசிய அளவில் உள்ள 17 எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், டெல்லி ESIC மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். மொத்தம் 3,500 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது. நர்சிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆகஸ்ட் 11 வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு 14.09.2025 தேதியும், முதன்மைத் தேர்வு 27.09.2025 தேதியும் நடைபெறும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://www.aiimsexams.ac.in/

புலனாய்வுத்துறை பாதுகாப்பு உதவியாளர் வேலை 2025

புலனாய்வுத்துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. மொத்தம் 4,987 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10-ம்வ் அகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தமிழ்நாட்டில் 285 பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பணி வாய்ப்பை பெற தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 17.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/94478/Index.html

யுபிஎஸ்சி EPFO வேலைவாய்ப்பு 2025
யுபிஎஸ்சி மூலம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கீழ் அமலாக்க அதிகாரி அல்லது கணக்கு அதிகாரி மற்றும் உதவி வருமான நிதி ஆணையர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 230 காலிப்பணியிடங்களுக்கு 18.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://upsc.gov.in/

வங்கி கிளார்க் வேலை 2025

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் பொத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்தாண்டு மொத்தம் 10,277 கிளார்க் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 21.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://www.ibps.in/

எல்லை பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் வேலை 2025
எல்லை பாதுகாப்புப் படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு அறிவிப்பு இந்த மாதம் வெளியானது. மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு ஐடிஐ, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 23.08.2025 தேதியே கடைசி நாள் ஆகும். உடற்தகுதி, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://rectt.bsf.gov.in/

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

TNPSC மூலம் 1,850 உதவியாளர் தேர்வுக்கு மின் வாரியம் ஒப்புதல்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1371796

டிஎன்​பிஎஸ்சி மூல​மாக, 400 உதவி பொறி​யாளர்​கள், 1,850 கள உதவி​யாளர்​களை தேர்வு செய்ய மின் வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

மின் வாரி​யத்​தில் உதவி பொறி​யாளர், கள உதவி​யாளர், கேங்​மேன், லைன்​மேன் போன்ற பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என தொழிற்சங்கங்கள் வலி​யுறுத்​துகின்​றன.

மின் வாரிய பணி​யாளர்​கள் வாரி​யத்​தின் வாயி​லாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மாக தேர்வு செய்​யப்​படு​கின்​றனர்.

இந்​நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறி​யாளர் உட்பட ஒரு சில பணி​யிடங்​களை நிரப்ப டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்​வு​கள் நடை​பெற்று வரு​கிறது. கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்​வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்​கள் விரை​வில் பணி​யில் சேர்க்​கப்பட உள்​ளனர்.

இந்​நிலை​யில். தற்​போது 400 உதவி பொறி​யாளர்​கள் மற்​றும் 1850 கள உதவி​யாளர்​களை டிஎன்​பிஎஸ்சி மூல​மாக தேர்வு செய்ய மின் வாரி​யம் ஒப்​புதல் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. டிஎன்​பிஎஸ்​சி​யின் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப சேவை​கள் தேர்​வு​கள் மூல​மாக இந்த பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட​வுள்​ளன.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

6 முதல் 9-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கப் பயிற்சி: மாணவர்களுக்கு வாரம்தோறும் தேர்வு நடத்த உத்தரவு

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசுப் பள்​ளி​களில் திறன் இயக்​கத்​தில் பயிற்சி பெறும் மாணவர்​களுக்கு வாரம்​தோறும் வெள்​ளிக்​கிழமை தேர்​வு​கள் நடத்​தப்பட வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடம் மற்​றும் கணிதத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் ‘திறன்’ எனும் இயக்​கம் 6 மாதம் மேற்​கொள்​ளப்பட உள்​ளது. இந்த திறன் இயக்​கம் பள்​ளி​களில் சிறப்​பாக செயல்​படுத்​தப்பட வேண்​டும். திறன் இயக்க மாணவர்​கள் தனி​யாக அமர வைக்​கப்​பட்டு வகுப்​பறைச் செயல்​பாடு​கள் தொடங்​கப்​பட்​டிருக்க வேண்​டும்.

அந்த வகை​யில் மாணவர்​களுக்கு அடிப்​படை கற்​றல் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். அதில் தமிழ், ஆங்​கிலம் மற்​றும் கணித பாடங்​களின் மதிப்​பெண்​கள் அடிப்​படை​யில் மாணவர்​களைச் சேர்த்து பயிற்சி தரவேண்​டும். வகுப்​பு​களுக்கு தலா 90 நிமிடம் வீதம் 30 நாட்​கள் பயிற்​று​விக்க வேண்​டும்.

இதுத​விர வாரம்​தோறும் வெள்​ளிக்​கிழமை, அந்த வாரத்​தில் நடத்​தப்​பட்ட பாடங்​களில் இருந்து 10 மதிப்​பெண்​களுக்கு தேர்​வு​களை நடத்த வேண்​டும். ஒரு பாடத்​தலைப்பு முடிந்த பின்பு அதற்​கான பயிற்​சித்​தாள் செய்​வதை​யும் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்​டும். இதற்​கான ஆசிரியர் கையேடு மற்​றும் மாணவர் பயிற்சி புத்​தகம் பள்​ளி​களுக்கு வழங்​கப்​படும். மேலும், இது​சார்ந்த வழி​முறை​களை பின்​பற்றி திட்​டத்தை சிறப்​பாக செயல்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

dinamani%2F2025-03-02%2Ff04wx5th%2Ftngov

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணிகளுக்கு 574 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரைவாளர் பணி

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

பணி: Guest Lecturers

காலியிடங்கள்: 574

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் சம்மந்தப்பட்ட பாடத்தில் நெட், செட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசி விதிமுறைப்படி பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின் படி 57-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, முதுநிலை பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.100 மட்டும். இதர பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tngasa.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

இனி பள்ளிகளுக்கு மே மாதம் லீவு இல்லை... கோடை விடுமுறையில் மாற்றம்... கேரள அரசு முடிவு?

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு முடிந்ததும் ஆண்டு விடுமுறை விடப்படுகிறது. வழக்கமாக கோடைக்கால மாதமான ஏப்ரல், மே மாதங்களில் விடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இம்மாதங்களில்தான் ஆண்டு விடுமுறை விடப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும் போது பல சிக்கல்கள் எழுகின்றன.

இந்த நிலையில் பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை ஏப்ரல் - மே மாதங்களுக்கு பதிலாக வேறு மாதத்திற்கு மாற்ற கேரள மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. ஏப்ரல் - மே மாதங்களுக்கு பதிலாக ஜூன் - ஜூலை மாதத்திற்கு மாற்ற பரிசீலித்து வருவதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வரும் நிலையில், அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "கேரளாவில் பள்ளி ஆண்டு விடுமுறையானது இப்போது ஏப்ரல் மே மாதங்களில் விடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நிலவும் வெப்பமான சூழல் மாணவர்களுக்கு சிரமத்தைத் தருகிறது.

அதேநேரம் ஜூன், ஜூலை மாதங்களில் மாநிலத்தில் மழைப்பொழிவு மாதம் என்பதால் அந்த காலங்களில் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக விடுமுறை அளிக்க வேண்டியிருக்கிறது. இதனால் கல்வி தடைபடுகிறது.

எனவேதான் பள்ளி ஆண்டு விடுமுறையை ஏப்ரல் - மே மாதங்களுக்கு பதிலாக மழை பெய்யும் ஜூன் - ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது குறித்து பொது விவாதம் துவங்கப்பட்டுள்ளது. அதேநேரம், மே - ஜூன் மாதமும் பரிசீலனையில் உள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இந்த விஷயத்தில் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

முதன் முறையாக வேலைக்கு போறீங்களா.? EPFO- மூலம் ரூ.15000 ஊக்கத்தொகை உங்களுக்கு கன்பார்ம்!!

   Education News (கல்விச் செய்திகள்)
    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
 முதன் முறையாக வேலைக்கு போறீங்களா.? EPFO- மூலம் ரூ.15000 ஊக்கத்தொகை உங்களுக்கு கன்பார்ம்!!

இத்திட்டத்திற்காக ரூ.99,446 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான காலகட்டத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இது, வேலைவாய்ப்பு உருவாக்குதல், வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. "Employment Linked Incentive (ELI) Scheme" என்ற ஒரு புதிய திட்டத்தை ஜூலை 1, 2025 அன்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் "பிரதம மந்திரி ரோஜ்கர் மேளா" திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இத்திட்டத்திற்காக ரூ.99,446 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான காலகட்டத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.ELI திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:இந்த ELI திட்டம், இரு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு ₹1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். பணியாளர் EPFO-வில் சேர்ந்த பிறகு, தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்த பின்னர் முதல் தவனை வழங்கப்படும். 12 மாதங்கள் வேலை செய்த பின்னர், ஒரு கட்டாய நிதி கல்வியறிவு படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு வழங்கப்படும்.

இந்தத் திட்டம் புதிய ஊழியர்களை முறைசார்ந்த வேலைவாய்ப்புக்குள் கொண்டு வந்து, அவர்களுக்கு ஆரம்பகால நிதி ஊக்கத்தை அளிப்பதையும், நிதி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.92 கோடி புதிய ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

1st Standard - Term 1 Exam - Time Table 2025

வகுப்பு  முதல் பருவ கால அட்டவணை 2025 - 2026

  • How to Download Quarterly Exam 2025 Question Papers | Step by Step Guide - PDF Download Here

Date & Day

Class - 1

Time

10:00 – 12:00

20.09.2024

Friday

Tamil

23.09.2024
Best online courses

Monday

English

24.09.2024

Tuesday

Language

(Minority)

25.09.2024

Wednesday

Maths

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான உடற்கல்வி பாடப்புத்தகம் வெளியிடப்பட்டது ஏன்?

 44440726-untitled-6

மாணவர்கள் தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க இந்த பாடத்திட்டம் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை கற்றுத் தருவதற்கும், உடற்கல்விக்கும் பாடப்புத்தகங்கள் இல்லை என உடற்கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். மேலும் 2017-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டபோது, உடற்கல்விக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டது. அதன் பின்னர் பாடப்புத்தகங்கள் வரும் என உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 2024-25ம் கல்வியாண்டு வரையில் உடற்கல்விக்கு என தனியாக பாடப்புத்தகம் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் 2025-ம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை எவ்வாறு சொல்லிக் கொடுப்பது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கவும், பதக்கங்களை வெல்லவும், சாதனை உணர்வை மேம்படுத்தவும், தங்களின் உடல் வலிமையை எண்ணிப் பெருமை கொள்ளவும் இந்த பாடத்திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உடற்கல்வியை கற்றுத் தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வியறிவு, விளையாட்டுக்கல்வி, பாதுகாப்புக்கல்வி ஆகியவற்றை தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் விளையாட்டுகள், பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளில் மாணவர்களை ஈடுப்படுத்தும் போது, அவர்களின் உடல்நிலை, சூழல் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்; பின்னர் செயல்பாடுகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவலுடன், விளையாட்டுகளை கற்றுத்தரும் முறைகள் இந்த பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 - 10th Physical Education Text Book - Download here

11 & 12th Physical Education Text Book - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான உடற்கல்வி பாடப்புத்தகம் வெளியீடு!

 IMG_20250803_204102

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான உடற்கல்வி பாடப்புத்தகம் (ஆங்கில வழி) வெளியீடு!

👇👇👇👇

11 & 12th PET New Textbook.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

New SG Teachers Training - Day Wise Timetable & Schedule

 புதிதாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் பயிற்சி அட்டவணை

New%20SG%20Teachers%20Training%20-%20Day%20Wise%20Schedule%20copy

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Mutual Transfer Application கொடுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

 மனமொத்த மாறுதல் விண்ணப்பம் அளிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

Mutual Transfer Application கொடுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

1) ஒன்றியத்திற்குள் மனமொத்த மாறுதல் எனில் ஒரே படிவத்தில் இருவரின் விவரம் முழுவதும் பூர்த்தி செய்து தனிநபர்கள் கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று மூன்று காப்பிகள் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்

2) ஒன்றியம் விட்டு ஒன்றியம் மனமொத்த மாறுதல் எனில் ஒரே படிவத்தில் இருவரின் விவரம் முழுவதும் பூர்த்தி செய்து தனிநபர்கள் கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர்கள் கையொப்பம் பெற்று அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் மொத்தம் 6 படிவத்தில் கையொப்பம் பெற்று 3 காப்பிகளை தேவையான இணைப்புகளுடன் அவரவரின் வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! நன்றி

எண்ணும் எழுத்தும் திட்ட முன்னேற்றம் - ஆய்வு வழிமுறைகள் வெளியீடு.

          Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250802_094759

எண்ணும் எழுத்தும் திட்டம் - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்துதல் - கற்றல் இடைவெளி குறைப்பு மாணவர் முன்னேற்றக் கண்காணிப்பு , மாணவர் பயிற்சி புத்தகம் , ஆசிரியர் கையேடு பயன்பாடு , பள்ளிப் பார்வை மற்றும் செயல்திறன் குறியீடுகள் ( KPIs ) ஆகிய கல்விசார் செயல்பாடுகள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் - சார்நிலை அலுவலர்கள் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

EE Inspection Guidelines - DEE Proceedings - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

          Education News (கல்விச் செய்திகள்)

Dr. Radhakrishnan Award-Registrstion - Extension upto 06.08.2025

 2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்காக 386 ஆசிரியர்களை தெரிவு செய்யும் பொருட்டு EMIS இணையதளம் வாயிலாக 20.07.2025 முதல் 03.08.2025 வரை இணையவழி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பார்வை 3 ல் காணும் கடிதப்படி அவ்விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.

 இந்நிலையில் தற்போது வரை EMIS இணையதளத்தில் மிகவும் குறைவான விண்ணப்பங்கள் முழுமையான அளவில் எண்ணிக்கையிலேயே செய்யப்பட்டுள்ளன. எனவே தலைமையாசிரியர்கள் மற்றும் பதிவேற்றம் ஆசிரியர்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க 06.08.2025 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

மேலும் இவ்விவரத்தினை அனைத்து சார் நிலை அலுவலர்களும் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவித்து சுற்றறிக்கை அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

IMG-20250802-WA0013