ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய 10 மிகப்பெரிய வேலைவாய்ப்புகள்; தமிழக, மத்திய அரசு வேலைகளின் லிஸ்ட்!

 Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்) 

ஜூலை மாதத்திற்கு பின்பு கல்லூரிகளில் படிப்பை முடித்து, வேலைக்கு தயாராக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய டாப் 10 அரசு வேலைவாய்ப்புகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

படிப்பை முடித்து வேலை தேடுக்கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கான சரியான மாதம் ஆகஸ்ட் ஆகும். தமிழ்நாடு அரசு மட்டுமின்றி, மத்திய அரசு துறைகளில் இருக்கும் மிகப்பெரிய பணி வாய்ப்புகள் இந்த மாதம் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும் டாப் 10 தமிழக மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் என்னென்ன, அவற்றுக்கான தகுதிகளை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் வேலை 2025
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 1,996 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்ப (TRB PG Teacher Recruitment 2025) அறிவிப்பு ஜூலை 10-ம் தேதி வெளியானது. முதுகலை டிகிரியுடன் பி.டெட் முடித்தவர்கள் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 28.09.2025 தேதி தேர்வு நடைபெறும்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://trb.tn.gov.in/

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு அறிவிப்பு 645 காலிப்பணியிடங்களுக்கு ஜூலை 15-ம் தேதி வெளியானது. குரூப் 2 பதவிகளில் 50 காலிப்பணியிடங்கள், குரூப் 2ஏ பதவிகளில் 595 காலிப்பணியிடங்கள் ( TNPSC Group 2 Exam 2025) உள்ளன. முதல்நிலை, முதன்மை என தேர்வு நடத்தப்படும். டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 13-ம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். முதல்நிலைத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://tnpsc.gov.in/ 

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வேலை

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் (TN Environment Dept Jobs 2025) உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. டிகிரி, பி.காம். பிஜி டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15-ம் தேதியே கடைசி நாள் ஆகும். இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக ரூ.68,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://environment.tn.gov.in/

நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படும் நான் முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தில் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள், அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களில் அதிகபடியாக 1.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://naanmudhalvan.tn.gov.in/

புலனாய்வுத் துறையில் அதிகாரி வேலை 2025
மத்திய அரசின் உள்துறையில் கீழ் செயல்படும் புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு ஜூலை 19-ம் தேதி வெளியானது. மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://www.mha.gov.in/en

எய்ம்ஸ் செவிலியர் வேலை 2025
தேசிய அளவில் உள்ள 17 எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், டெல்லி ESIC மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். மொத்தம் 3,500 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது. நர்சிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆகஸ்ட் 11 வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு 14.09.2025 தேதியும், முதன்மைத் தேர்வு 27.09.2025 தேதியும் நடைபெறும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://www.aiimsexams.ac.in/

புலனாய்வுத்துறை பாதுகாப்பு உதவியாளர் வேலை 2025

புலனாய்வுத்துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. மொத்தம் 4,987 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10-ம்வ் அகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தமிழ்நாட்டில் 285 பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பணி வாய்ப்பை பெற தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 17.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/94478/Index.html

யுபிஎஸ்சி EPFO வேலைவாய்ப்பு 2025
யுபிஎஸ்சி மூலம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கீழ் அமலாக்க அதிகாரி அல்லது கணக்கு அதிகாரி மற்றும் உதவி வருமான நிதி ஆணையர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 230 காலிப்பணியிடங்களுக்கு 18.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://upsc.gov.in/

வங்கி கிளார்க் வேலை 2025

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் பொத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்தாண்டு மொத்தம் 10,277 கிளார்க் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 21.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://www.ibps.in/

எல்லை பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் வேலை 2025
எல்லை பாதுகாப்புப் படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு அறிவிப்பு இந்த மாதம் வெளியானது. மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு ஐடிஐ, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 23.08.2025 தேதியே கடைசி நாள் ஆகும். உடற்தகுதி, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://rectt.bsf.gov.in/

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

0 Comments:

Post a Comment