நீட் தேர்வு - 2025 எப்படி இருந்தது?

   Education News (கல்விச் செய்திகள்)

dinamani%2F2025-05-04%2Fyfxiki8s%2Fneet-exam-aspirants

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.

இதில், இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இயற்பியல் பகுதியில் கணக்கீடு செய்து பதில் அளிக்கும் கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டதாகவும், இதனால், பதிலளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மொத்தத் தேர்வு நேரத்தில் ஒன்றரை மணிநேரம் இயற்பியல் கேள்விகளுக்கே சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனர்.

இதேபோன்று, உயிரியல் பகுதியில் கேள்விகள் நீளமாக இருந்ததால், புரிந்துகொண்டு பதில் அளிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாக சில மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், வேதியியலை ஒப்பிடும்போது உயிரியல் கேள்விகள் எளிமையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உள்பட மொத்தம் 23 லட்சம் பேர் நீட் நுழைவுத் தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் நீட் தோ்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் தேர்வு நடந்தது.

நீட் தேர்வு மையங்களில் மாணவர்கள் கடும் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய தேர்வு, மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்தே மாணவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.

தேர்வு குறித்து மாணவர்கள் சிலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் பாடவாரியாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இயற்பியல்

பல மாணவர்கள் இயற்பியல் பாடக் கேள்விகள் கடினமாக இருந்ததாக உணர்ந்துள்ளனர். இயற்பியலில் நேரடிக் கேள்விகளை விட, கணக்கீடு செய்து பதில் அளிக்கும் கேள்விகள் அதிகம் இடம்பெற்றிருந்ததாகவும், இதனால் கணக்கீடு செய்து பதில் அளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் கூறினர்.

அதாவது, வினாத்தாளில் இயற்பியலுக்காக மொத்தம் உள்ள 45 வினாக்களில் கிட்டத்தட்ட 40 வினாக்களுக்கு கணக்கீடு செய்தே பதில் அளிக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டனர்.

வேதியியல்

வேதியியலைப் பொருத்தவரை உயிரி வேதியியல் பிரிவு கேள்விகள் எளிமையாக இருந்ததாகக் கூறினர். எனினும், என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் இருந்து நேரடியாக வினாக்கள் இடம்பெறாமல், வேதி சமன்பாடுகளுக்குத் தீர்வு கண்டு பதில் அளிக்கும் விதமாக சில கேள்விகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

உயிரியல்

இயற்பியல், வேதியியலை ஒப்பிடும்போது உயிரியல் பாடக் கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். கேள்விகள் சற்று நீளமானதாக இருந்தாலும், புரிந்துகொண்டால் எளிதில் பதிலளிக்கும்படி இருந்ததாகவும் மாணவர்கள் கூறினர். எனினும், கேள்விகள் பெரிதாக இருந்ததால், புரிந்துகொள்வது சற்று கடினமாக இருந்ததாகவும் சிலர் குறிப்பிட்டனர்.

கடந்த ஆண்டு (2024) நீட் தேர்வு வினாத்தாளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு (2025) வினாத்தாள் கடினமானது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2025 இளநிலை நீட் வினாத்தாளில் ஒட்டுமொத்தமாக 78% கேள்விகள் பதில் அளிக்கக் கூடியதாக இருந்ததாக, ஆங்கில ஊடகம் நடத்திய பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in , exams.nta.ac.in , neet.nta,nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

Kalanjiyam / IFHRMS post change தொடர்பாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம்

   Education News (கல்விச் செய்திகள்)

களஞ்சியம் / IFHRMS post change தொடர்பாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம்

1) AZ BC KH KI Post Jan 25 இல் நிரந்தரமாக மாற்றம்

2) AZ BC KH KI Post APR 25 இல் AA கணக்கு தலைப்பு ஆக மாற்றம்.

3) அனைத்து AA permanent post களை ஒரே Bill ஆக இணைக்கலாம்...

இவை தாங்கள் அறிந்தவை 

சில கூடுதல் தகவல்கள் தங்களின் கனிவான புரிதலுக்கு...

1) அனைத்து AA பணியிடங்களும் நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட வில்லை .

2) பல பணியிடங்கள் இன்னும் AA temporary ஆக உள்ளது...

3) Temporary post ஐ permanent post உடன் இணைக்க இயலாது.

4) Temporary bills தனியாக தான் சமர்பிக்க வேண்டும்...

5) AA temporary post எனில் Bill உடன் pay continue order copy attach செய்ய வேண்டும்... இது கட்டாயம்

6) Permanent Bill க்கு எந்த ஒரு pay order attachments செய்ய தேவையில்லை...

7) அரசாணை படி தங்களின் பள்ளி temporary post நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஆனால் IFHRMS / களஞ்சியத்தில் மாற வில்லை எனில்...

உரிய ஆவணங்கள் /அரசாணை இணைப்புகள் உடன் DDO(HM) / CEO/ DSE வழியாக Chennai இல் தான் சரி செய்ய இயலும் . 

நமது நிலையில் மாற்றம் செய்ய முடியாது...

8) முதுகலை ஆசிரிய பணியிடங்கள்..

அரசாணை 157 நாள் 5/9/19 படி 2019 இல் நிரந்தரமாக மாற்றப்பட்டது.

அரசாணை 19 நாள் 22/1/25 இன் படி 2025 இல் 5741 PG temp நிரந்தரமாக மாற்றப்பட்டது

 (பார்க்க இணைப்பு)

9) முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் இன்று வரை தற்காலிகமாக தொடரும் பணியிடங்கள் பட்டியல் மீண்டும் இணைத்துள்ளேன்

(பார்க்க இணைப்பு)...

10) அளவைப் பதிவேட்டில் மாற்றங்கள் பதிவு செய்து கொள்ளலாம்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

IFHRMS - April 2025 Payslip Download Now - Direct Link

பொது தேர்வில் 100% தேர்ச்சி பெறும் பள்ளி விவரங்களை அனுப்ப உத்தரவு

 Education News (கல்விச் செய்திகள்)

.com/

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் 3,088 உயர்நிலைப் பள்ளிகள், 3,174 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதை செயல்படுத்தும் விதமாக, பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சேகரிக்க வேண்டும். அவற்றை தொகுத்து இயக்குநரகத்துக்கு 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படாத வகையில் முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

வருமான வரி தாக்கல்: படிவம்-16ல் புதிய மாற்றம்! ஏன் தெரியுமா?

 Education News (கல்விச் செய்திகள்)

dinamani%2Fimport%2F2021%2F12%2F31%2Foriginal%2Fincome_tax53

2025-26ஆம் நிதியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதமே வந்துவிட்டது. வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான வரி கணக்குத் தாக்கலுக்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருவார்கள்.

கடந்த 2024 - 25ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு் தாக்கல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

எனவே, தேவையான ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொள்வது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மிகவும் அவசியம்.

வருமானம் பெறும் வரி செலுத்துவோருக்கு மிக அவசியமான ஆவணங்களில் ஒன்று படிவம்-16. இது நிறுவனம், ஊழியருக்கு வழங்குகிறது. இந்த படிவத்தில் ஒரு ஊழியர் பெறும் வருமானம், பிடித்தம் செய்யப்பட்ட வரி என அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

இந்த படிவம் 16தான், ஒரு நிறுவனம் தனது ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்த வரியை வருமான வரித் துறைக்கு செலுத்தியதற்கான சாட்சி. அதுபோல, ஒரு ஊழியருக்கும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான அடிப்படை ஆவணம்.

படிவம் 16 என்றால் என்ன?

ஒரு நிறுவனம் தனது ஊழியரிடமிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்ததற்கும், அந்த வரியை முறையாக வருமான வரித் துறை அலுவலகத்தில் செலுத்தியதற்கும் ஆதாரம். ஒருவர் எவ்வளவு ஊதியம் பெற்றார், எவ்வளவு வரி செலுத்தினார் என்பதற்கும் ஆதார ஆவணம். இது இரண்டு பிரிவுகளாக இருக்கும். ஒன்று ஏ, இரண்டாவது பி.

பணி மாற்றத்தின்போது?

ஒருவர் ஒரு நிதியாண்டில் பணி மாற்றம் செய்யும்போது, இரண்டு நிறுவனங்களில் இருந்தும் படிவம் 16-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும்.

படிவம் 16 பகுதி ஏ

படிவம் 16ன் ஏ பகுதியானது ஒருவர் செலுத்திய வரி மற்றும் செய்திருக்கும் வைப்புத் தொகைகள் குறித்த ஒவ்வொரு காலாண்டுக்கான நிலவரத்தை அளிக்கும். அதில் ஊழியரின் பெயர், முகவரி, பான் எண், நிறுவனத்தின் நிரந்தர வரிக் கணக்கு எண்ணான டேன் மற்றும் பான் எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

தனது மாத ஊதிய வருமானச் சான்றிதழில் இருக்கும் தகவல்களை இதன் மூலம் ஊழியர் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Advertisement

படிவம் 16 பகுதி பி

படிவம் 16-ன் பகுதி பியில், ஏ பாகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களை விரிவாக அறிந்துகொள்ள முடியும். ஊழியர் பெறும் ஊதியத்தின் விவரம், பல்வேறு பிரிவுகளில் பிடித்தம் செய்யப்பட்ட வரி விவரம் தெரிவிக்கப்படும்.

வரிவிலக்குக்கான விவரங்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.

படிவம் 16 ஏன் அவசியம்?

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு மட்டும் படிவம் 16 அவசியம் என்றில்லை. கடன் விண்ணப்பங்களுக்கும் கட்டாயமாகிறது. வருமானத்துக்கு சான்றாக பல நிதிநிறுவனங்கள் படிவம் 16-ஐத்தான் கேட்கின்றன.

செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

வருமான வரித் தாக்கல் செய்வோர் இந்த ஆண்டு படிவம் 16ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். படிவம் 16ன் மாதிரி மாற்றப்பட்டிருப்பதன் மூலம், பலவகையான வரிகள், வரிப் பிடித்தம், வரி விலக்கு என அனைத்தும் மிக விவரமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இந்த மாற்றத்தால், முந்தைய படிவங்களைக் காட்டிலும் புதிய படிவத்தில் வரி செலுத்துவோர் விவரங்களை எளிதாகவே அறிந்துகொள்ளலாம். முந்தைய படிவம் 16 அடிப்படை விவரங்களை மட்டுமே கொண்டிருக்கும். புதிய படிவம் விரிவான விவரங்களை கொண்டிருக்கும். இதன் மூலம் எந்தெந்த படிகளுக்கு வரி விலக்கு உண்டு, எவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எந்த வருமான சலுகைகளுக்கு வரி உள்ளது என அறிய முடியும்.

இதனால் வருமான கணக்குத் தாக்கல் செய்யும்போது எந்தக் குழப்பமும் நேரிடாது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

மே 31 ல் கல்வித்துறை அதிகாரிகள் 20 பேர் ஓய்வு

 IMG_20250504_130559

மே 31 ம் தேதியுடன் தமிழக கல்வித்துறையில் 12 மாவட்ட கல்வி அதிகாரிகள் , 5 முதன்மை கல்வி அதிகாரிகள் , 3 துணை இயக்குனர்கள் ஓய்வு பெறுகின்றனர் . இந்தப் பணியிடங்களில் பொறுப்பு அதிகாரிகளாக மேல்நிலை , உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

Spices Board-ல் Technical Analyst காலிப்பணியிடங்கள் – சம்பளம்: 30,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Spices Board-ல் Technical Analyst காலிப்பணியிடங்கள் – சம்பளம்: 30,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Technical Analyst பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Spices Board ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate degree in Microbiology தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Spices Board காலிப்பணியிடங்கள்:

Technical Analyst பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree in Chemistry / Applied Chemistry / Analytical Chemistry / Organic Chemistry தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Spices Board வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி போதிய ஆவணங்களுடன் 05.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

BEL நிறுவனத்தில் Junior Assistant காலிப்பணியிடங்கள் – ஊதியம் : ரூ.82,000/- || உடனே விரையுங்கள்!

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

BEL நிறுவனத்தில் Junior Assistant காலிப்பணியிடங்கள் – ஊதியம் : ரூ.82,000/- || உடனே விரையுங்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Junior Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com / BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,500/- முதல் ரூ.82,000/-வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Senior Research Assistant காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Senior Research Assistant காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

University of Madras காலிப்பணியிடங்கள்:

Senior Research Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Assistant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

University of Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Research Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,600/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ravimano2004@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

Union Bank of India-வில் Assistant Manager வேலை – 500 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!

 '    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Union Bank of India-வில் Assistant Manager வேலை – 500 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!

Union Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 500 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Union Bank of India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 500 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / BE / B.Tech / CA / CMA / M.Sc / MBA / MCA / ME / M.Tech / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Union Bank of India வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

Union Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு / Group Discussion / Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.