தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் GM, AGM, Store Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 

2024ல் தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன GM, AGM, Store Manager.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 6. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22.01.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.214,790 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். Any Degree, B.Sc, BE/B.Tech, M.Sc, MBA, Retired தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: GM, AGM, Store Manager

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 6

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் Any Degree, B.Sc, BE/B.Tech, M.Sc, MBA, Retired தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 214,790/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 25 முதல் 55 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (22.01.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
General Manager (HR), Tamil Nadu Newsprint And Papers Limited,
No.67,
Anna Salai,
Guindy,
Chennai-600032,
Tamil Nadu.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

22.01.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலைக்கழகம் ரூ.25,000 சம்பளத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள்

 

2024ல் அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Project Assistant (Chemical Engineering).

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.01.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.25,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். M.Sc, ME/M.Tech தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Project Assistant (Chemical Engineering)

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் M.Sc, ME/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 25,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (24.01.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
Dr. T. Santhoshini Priya,
Assistant Professor / Adjunct Faculty (CEST), Department of Chemical Engineering,
AC Tech Campus,
Anna University,
Chennai-600025 & Email ID: santhoshinipriya.thomas@gmail.com or santhoshinithomas@annauniv.edu

விண்ணப்பிக்க கடைசி தேதி:

24.01.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலைக்கழகம் BE/B.Tech, ME/M.Tech முடித்தவர்களுக்கு Project Assistant காலிப்பணியிடங்கள்

 2024ல் அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Project Assistant.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.01.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.25,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். BE/B.Tech, ME/M.Tech தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Project Assistant

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் BE/B.Tech, ME/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 25,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (25.01.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
Dr. Dhananjay Kumar,
Professor and Principal Investigator,
Department of Information Technology,
MIT campus,
Anna University,
Chromepet,
Chennai-600044.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

25.01.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Unit - 2 ) Lesson Plan

 Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025


Ennum Ezhuthum Empty Format - Download here

Term III Lesson Plan

 Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term III - Empty Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term III - Empty Lesson Plan - Download here


January - 2025

Unit - 2

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Unit - 2 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 2 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 2 ) Lesson Plan - E/M - Download here


Unit - 1

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Unit - 1 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 1 ) Lesson Plan - Download here

Term II Lesson Plan

 Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1I - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4  Std -  Term 1I - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 5th Std -  Term I1 - Full Lesson Plan - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மத்திய அரசின் இணையதளத்தில் மாணவர், ஆசிரியர் விவரங்களை பிப்.17-க்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வி துறை உத்தரவு

 

1347476

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசின் யுடிஐஎஸ்இ தளத்தில் பிப்ரவரி 17-ம் தேதிக்குள் பதிவேற்றுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


நாடு முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை மத்திய கல்வி அமைச்சகம் சேகரித்து, அதற்கேற்ப முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ) இணையதளத்தில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் சார்ந்த தரவுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். பின்னர், ஒவ்வொரு வகுப்பு, பிரிவு வாரியாக மாணவர்களின் பொது விவரங்கள், சேர்க்கை, பதிவு விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், ஆதார் எண் போன்றவற்றை பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் மிக துல்லியமாக பதிவு செய்ய வேண்டும். இப்பணிகளை பிப்ரவரி 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதற்கேற்ப, ஒரு பள்ளியில் இருந்து விலகி வேறொரு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து முடித்து அனுப்ப வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


நாளை பள்ளிகள் திறப்பு 12 நாள் செயல்பட வாய்ப்பு

 
ஆறு நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை (20ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ந்து, 12 நாட்கள் செயல்பட உள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த, 10 ம் தேதி முதல் பனியன் நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கமும் துவங்கியது. 11 மற்றும், 12ம் தேதி பள்ளிகள் விடுமுறையாக இருந்த போதும், 13ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் செயல்பட்டன.


இந்நிலையில், 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை ஆறு நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது.


விடுமுறை முடிந்து நாளை (20ம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. கடந்த, 17 ம் தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்ததால், இதற்கு மாற்றாக வரும், 25ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி குடியரசு தினம்.


பெரும்பாலான பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இதனால், 20ம் தேதி முதல் வரும், 31ம் தேதி வரை தொடர்ந்து, 12 நாட்கள் பள்ளி வேலை நாட்கள்; பள்ளிகள் செயல்பட உள்ளது.

IMG-20250119-WA0016




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Blockages In Heart: இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள்..!

 

Blockages In Heart | மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே இதய ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் அறிகுறிகளை சரியாக புரிந்து கொள்வது நம்முடைய அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் உயிரை காக்கக் கூடும். இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

பிளட் பேனல்ஸ் மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம்கள் (EKGs) போன்ற மேம்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் இதய பாதிப்புகளை கண்டறிய தேவைப்படும் அவசியமான நோய் அறிதல் கருவிகளாக இருந்தாலும், இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் உள்ளதா? என்பதை கண்டறிய நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய பரிசோதனைகள் உள்ளன. இதய கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் உங்கள் உடலில் இருக்கிறதா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி விளக்கி உள்ளார்.


உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனிப்பதன் முக்கியத்துவம்...

  • நம் உடலில் ஏதாவது பாதிப்புகள் இருக்கும்போது உடல் பெரும்பாலும் சிக்னல்களை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த அறிகுறிகளை கூர்ந்து கவனித்து பாதிப்புகளை வெளிப்படுத்தும் சிக்னல் தான் இது என்பதை புரிந்து கொள்வது இதயத்தில் இருக்கும் அடைப்புகளை கண்டறிவதற்கான சாத்தியமான முதல் படியாகும்.
  • உடல் செயல்பாடுகளின் போதோ அல்லது உடல் உழைப்பின் போதோ ​​இதயத்திற்கு அதிக ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் தேவைப்படுகிறது. உதாரணமாக அடைப்பு இருந்தால், அடைப்புக்குக் கீழே உள்ள பகுதி உரிய ரத்த விநியோகமின்றி பாதிக்கப்படும். இது அசௌகரிய உணர்வு ஏற்பட அல்லது வலி ஏற்பட வழிவகுக்கும். அதேநேரம் நீங்கள் ஓய்வெடுக்கும் போது, ​​இதயத்திற்கான ஆக்ஸிஜன் தேவை குறைகிறது. மேலும் இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கியபோது தோன்றிய அறிகுறிகள் தற்காலிகமாக மறைந்து போகக்கூடும்.
  • மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம். எனிமும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அறிகுறிகள் ஓய்வெடுத்த பிறகும் நீடிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது தான். இந்த அறிகுறிகள் ஏற்பட காரணம் தமனிகளில் (arteries) ஏற்படும் அடைப்பு இதயத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது தான்.

    அறிகுறிகள் இல்லாதது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துமா?

    மேற்கண்ட அறிகுறிகள் இருப்பதால் மட்டுமே உங்கள் தமனிகளில் அடைப்புகள் இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஏனென்றால் பாதிப்புகள் கண்டறியப்பட்ட சிலருக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்த போதும் அடைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலை "silent ischaemia" என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் வயதிற்கு பின்னர் அனைவருமே, குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைப்பழக்கம் கொண்டவர்கள், நீரிழிவு நோய் அல்லது இதய நோயின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகளை கொண்டவர்கள் வழக்கமான அடிப்படையில் சுகாதார பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


    வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனை

    இதயத்தில் இருக்கும் அடைப்பை கண்டறிய வீட்டிலேயே துல்லியமான முடிவை தர கூடிய சோதனை எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளின் போது உடலில் ஏற்படும் எதிர்வினைகளைக் கவனிப்பது நமக்கு மிக முக்கியம். நீங்கள் கவனிக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

    மார்பு அசௌகரியம்

    உடற்பயிற்சியின் போது மார்பில் இறுக்கம், அழுத்தம் அல்லது வலி போன்ற எந்தவொரு உணர்வையும் நாம் முக்கியமானதாக கருத வேண்டும். குறிப்பாக இந்த அறிகுறிகள் நாம் ஓய்வெடுக்கும் போது குறைந்துவிட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

    வலி பரவல்

    தாடை, இடது கை அல்லது முதுகு வரை வலி பரவுவது இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை குறிக்கலாம்.

    மூச்சுத்திணறல்

    உங்களின் அன்றாட செயல்பாடுகளின்போது வழக்கத்திற்கு மாறாக மூச்சுத்திணறல் ஏற்படுவது உங்கள் இதயம் ரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய சிரமப்படுவதை குறிக்கலாம்.

    சோர்வு

    மார்பு வலி இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக அல்லது அசாதாரண சோர்வு உங்களுக்கு நீடிக்கிறது என்றால் அது இதய பிரச்சனைகள் இருப்பதை குறிக்கும் நுட்பமான அறிகுறியாக இருக்கலாம்.
    மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிகிச்சையை தாமதப்படுத்துவது மாரடைப்பு உள்ளிட்ட கடும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் இதயம் மற்றும் தமனிகளின் நிலையை மதிப்பிட EKG, மன அழுத்த சோதனை அல்லது இமேஜிங் ஆய்வுகள் போன்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.

    இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...


    பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேநேரம் நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.

    வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.

    நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தைப் பாதிக்கலாம். தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    புகைப்பழக்கம் ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது மற்றும் அடைப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இப்பழக்கம் இருந்தால் நிறுத்துவது உங்கள் இதயத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

    சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் உயர் ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

6-6-6 Walking Rule: உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தை 6-6-6 நடைப்பயிற்சி விதியுடன் மாற்றி அமையுங்கள்!


 

6-6-6 Walking Rule | 6-6-6 நடைப்பயிற்சி விதியானது உங்கள் வாழ்க்கை முறையில் வழக்கமான உடற்பயிற்சியை இணைப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் இணக்கத்தை வழங்குகிறது. வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் நடைமுறைகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வதன் மூலம், நிலையான நடைப்பயிற்சியின் நன்மைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தீவிரத்தை அமைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம்.

பரபரப்பான அலுவலக வேலைகளுக்கு மத்தியில், உடற்பயிற்சிக்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கலாம். ஜிம் அல்லது யோகா வகுப்புகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு, 6-6-6 என்ற நடைப்பயிற்சி விதி தீர்வை வழங்குகிறது. உங்கள் நடைப்பயிற்சியின் பல்வேறு அம்சங்களில் ஆறாவது எண்ணை உள்ளடக்கிய இந்த எளிதான பின்பற்றக்கூடிய அணுகுமுறை, அதன் எளிமை மற்றும் பிஸியான வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது.

6-6-6 நடைப்பயிற்சி விதியானது, ஒரு சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட நடைப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. முதலில் 6 நிமிட வார்ம்-அப்புடன் தொடங்கவும். காலை 6 அல்லது மாலை 6 மணிக்குள் 60 நிமிட நடைப்பயிற்சியில் ஈடுபடவும். அடுத்த 6 நிமிடம் ரிலாக்ஸாக இருக்கவும். இந்த சீரான அமைப்பு இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, மன நலனை மேம்படுத்துதல் மற்றும் உடல் செயல்பாடுகளை உங்கள் அன்றாட வழக்கத்தின் நிலையான பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் ஆகியவற்றின் செயல்திறன்

  • 6 நிமிட வார்ம்-அப் உங்கள் உடலியல் தயார் நிலையை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் நடைப்பயணத்தின் உடல் தேவைகளுக்கு உங்கள் உடலை முதன்மைப்படுத்துகிறது. இது படிப்படியாக உங்கள் இதயத் துடிப்பை உயர்த்தி, உங்கள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகரித்த பணிச்சுமைக்கு உங்கள் இதய அமைப்பை தயார் செய்கிறது.
  • 6 நிமிட கூல்-டவுன் படிப்படியாக ஓய்வெடுக்கும் நிலைக்குத் திரும்ப உதவுகிறது. ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்களைத் தடுக்கிறது மற்றும் மீட்புக்கு உதவுகிறது. இது உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை படிப்படியாகக் குறைக்க அனுமதிக்கிறது.
  • தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கிறது. உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக குறைத்து மதிப்பிடப்படும் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
  • கார்டியோவாஸ்குலர் ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது ஒரு ஏரோபிக் செயல்பாடாகும். இது உங்கள் இதய தசையை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. வழக்கமான நடைபயிற்சி புற தமனி நோய் (பிஏடி) அபாயத்தை குறைப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


எடை மேலாண்மை: 60 நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி, பல கலோரிகளை எரித்து, எடை இழப்பு அல்லது பராமரிப்பிற்கு பங்களிக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆற்றலுக்காக கொழுப்பைப் பயன்படுத்துவதற்கான உடலின் திறனை மேம்படுத்துகிறது.

எலும்பு ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது எடை தாங்கும் பயிற்சியாகும். இது எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் பலவீனமான எலும்புகள் என வகைப்படுத்தப்படும் எலும்புப்புரையை தடுக்க உதவுகிறது. இது வயதானவர்களுக்கும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் மிகவும் முக்கியமானது.


மனநிலை மேம்பாடு: நடைப்பயிற்சி உட்பட உடற்பயிற்சி, மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைத் தணிக்கும் இயற்கையான முறையில் மனநிலையை உயர்த்தக்கூடிய எண்டோர்பினை வெளியிடத் தூண்டுகிறது. நடைப்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. இது உங்கள் உடலுடன் இணைத்து, உங்கள் மனதையும் தெளிவுபடுத்தும். அத்துடன் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும். உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பயணத்தை மாற்ற 6-6-6 விதியை பின்பற்றி பயன் பெறுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.)

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip