அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 

DSE

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அனுப்பும் அதிகாரி: பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை.

தேதி: 22-12-2025

பொருள்: அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்துவதைத் தவிர்த்தல், மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையைக் கழித்தல் குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வேண்டுகோள்.

விடுமுறை விவரம்:

அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு விடுமுறை அளிக்கப்படுகிறது.

விடுமுறை நாட்கள்: 24-12-2025 (புதன் கிழமை) முதல் 4-01-2026 (ஞாயிற்று கிழமை) வரை.


பள்ளிகள் மீண்டும் திறக்கும் நாள்: 5-01-2026 (திங்கட் கிழமை).


சிறப்பு வகுப்பு தடை: அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெற்றோர்களுக்கான முக்கிய வேண்டுகோள்கள் (மாணவர்களின் பாதுகாப்பு கருதி):

விடுமுறை நாட்களில் மாணவர்கள் கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம்.

மாணவர்களின் வளர்ச்சிக்குச் சமச்சீரான உணவு அளிப்பது அவசியம்.

இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும்.


தாத்தா, பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும்.


பெரியோர்களை மதிக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள்.

அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்: தலைமையாசிரியர்களும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்குக் கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DSE




இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment