TNPSC : குரூப் 4 - புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி?

 Education News (கல்விச் செய்திகள்)

newproject99copy-1713964573-1717646041

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும்கூட மதிப்பெண் பகிர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு இருக்கிறது. இது தேர்வர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்திதான்.

எந்தப் பாடத்தில் இருந்து எத்தனை கேள்விகள் வரும் என்றும், கடினமான சில பாடங்களை ஒதுக்கியும்கூடத் தேர்வர்கள் திட்டமிடலாம். எந்தெந்தப் பகுதிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதைப் புரிந்துகொண்டால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்.


திட்டமிடல் அவசியம்: பொது அறிவியல் (5 கேள்விகள்), புவியியல் (5), இந்தியாவின் வரலாறு பண்பாடு - இந்திய தேசிய இயக்கம் (10), இந்திய ஆட்சியியல் (15), இந்தியப் பொருளாதாரம் - தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் (20), தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு - சமூக அரசியல் இயக்கங்கள் (20) என்று பொது அறிவு பாடத்திட்டத்துக்கு மதிப்பெண் பிரிக்கப்பட்டுள்ளது. திறனறிவுப் பகுதிக்கு 15 கேள்விகளும் காரணவியல் பகுதிக்கு 10 கேள்விகளுமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


இதில் பல தேர்வர்கள் கடினமாகக் கருதும் பகுதி அறிவியல் பகுதிதான். அறிவியல் பகுதிக்கு 5 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியை நீங்கள் ஒதுக்கிவிட்டு மற்ற பாடங்களைப் படித்தால்கூடப் போதுமானது.


.


ஆப்டிடியூட் பகுதியைப் பொறுத்தவரை நீங்கள் எந்த ஒரு பயிற்சியையும் தவிர்க்கக் கூடாது. மிகக் குறைந்த பாடத்திட்டத்தில் 25 கேள்விகள் கேட்கப்படுவதால் இந்தப் பகுதி உங்கள் வெற்றிக்குப் பெரிதும் உதவும்.


தமிழ்த் தகுதி - மதிப்பீட்டுத் தேர்வைப் பொறுத்தவரை கட்டாயப் பாடமாக இருக்கிறது. இலக்கணத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இலக்கணம் என்றால் பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், குறில் நெடில் வேறுபாடு, இன எழுத்துகள், வினா வகை, ஒருமை பன்மை அறிதல், வேர்ச்சொல் அறிதல், பெயரெச்ச-வினையெச்ச சொற்கள், எதிர்ச்சொல் எழுதுதல் போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அதுபோலத் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் என்கிற பகுதியிலிருந்து 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன.


வாசித்துப் புரிந்துகொள்ளுதல், கலைச்சொற்கள், எழுதும் திறன் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சேர்த்து 40 வினாக்கள் வருகின்றன. ஒரு பத்தியைக் கொடுத்து அதிலிருந்து கேள்விகள் கேட்கும் புதிய நடைமுறை, வரும் தேர்வில் இருந்து தொடங்குகிறது.


உங்களுக்குத் தேவையான விடைகள், கொடுக்கப்பட்டுள்ள பத்தியிலே இருக்கும். தேடி எழுத வேண்டியதுதான். மேலும் பல துறைகளைச் சேர்ந்த கலைச் சொற்கள் கொடுக்கப்பட்டு, அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் கேட்கப்படும் பகுதி ஏற்கெனவே இருந்தது. தற்போது அந்தப் பகுதியில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.


சொல் அகராதி என்கிற பகுதியில் இருந்து 15 கேள்விகள் கேட்கப்படும். அதாவது, ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல், ஒரு பொருள் தரும் பல சொற்கள், கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் போன்றவை. இந்தப் பகுதிகளுள் அனைத்துமே எளிமையானவை. எனவே, எளிதாக மதிப்பெண் எடுக்கலாம்.


- கட்டுரையாளர்: போட்டித்தேர்வுப் பயிற்சியாளர்; 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment