Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IBPS SO வேலைவாய்ப்பு 2025 – 1000+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!வேலைவாய்ப்பு
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Specialist Officers ( CRP SPL XV) பணிக்கென காலியாக உள்ள 1007 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Specialist Officers ( CRP SPL XV) பணிக்கென காலியாக உள்ள 1007 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Post Graduate Degree / Engineering Degree / Degree in Law (LLB) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PWBD விண்ணப்பதார்கள் – ரூ.175/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850 /-
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Preliminary Examination, Main Examination) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.07.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment