கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 Education News (கல்விச் செய்திகள்)

Tamil_News_large_3294234

கல்​லூரி மாணவர்​களுக்கு இந்​த ஆண்டு முதல் லேப்​-​டாப் வழங்​கப்​படும் என்று சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற 'வெற்றி நிச்​ச​யம்' திட்ட தொடக்க விழா​வில் முதல்​வர் மு..க.ஸ்​டா​லின் அறி​வித்​தார்.


தமிழக அரசின் சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறை மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் சார்​பில் 'நான் முதல்​வன்' திட்​டத்​தின் 3-வது ஆண்டு வெற்றி விழா​வும், 'வெற்றி நிச்​ச​யம்' திட்​டத்​தின் தொடக்க விழா​வும் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் இத்​திட்​டத்​தை​யும் அடுத்த ஆண்டு ஷாங்​காய் நகரில் நடை​பெறும் உலக திறன் போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​கான ஆன்​லைன் பதிவை​யும் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.


பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே அதி​கபட்​ச​மாக 9.69 சதவீத வளர்ச்சி வீதத்​தில் நம்​பர் ஒன் மாநில​மாக தமிழகம் திகழ்​கிறது. நான் முதல்​வன் திட்​டத்​தால் இது​வரை 41 லட்​சம் பேர் பயன் அடைந்​துள்​ளனர். அவர்​களுக்கு வளர்ந்து வரும் நவீன தொழில்​துறைக்கு ஏற்ற வகை​யில் தொழில்​நுட்ப திறன், தகவல் தொழில்​நுட்​பம், மொழி அறி​வு, ஹேக்​கத்​தான்​ஸ், இண்​டர்ன்​ஷிப் ஆகிய​வற்றை உள்​ளடக்கி பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.


கடந்த 3 ஆண்​டு​களில், இத்​திட்​டத்​தால் 3.28 லட்​சம் மாணவர்​கள், முன்​னணி நிறு​வனங்​களில் பணி நியமனம் பெற்​றுள்​ளனர். தமிழகத்​தில் இருந்து இந்த ஆண்டு சிவில் சர்​வீஸ் தேர்​வில் வெற்​றி​பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்​வன் திட்​டத்​தில் பயிற்சி பெற்​றவர்​கள்.


படித்த, வேலை​யில்​லாத இளைஞர்​கள், படிப்பை பாதி​யிலேயே நிறுத்​தி​ய​வர்​களை கண்​டறிந்து ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்​டம் மூலம் குறுகிய கால திறன் பயிற்சி வழங்​கப்​படும். இதற்​கான செலவை அரசே ஏற்​கும். சமூக மற்​றும் பொருளா​தா​ரரீ​தி​யாக பின்​தங்​கிய வகுப்​பினர்​கள் அனை​வருக்​கும் இத்​திட்​டத்​தில் முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டு, ரூ.12 ஆயிரம் வரை ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். தொலை​தூர மாணவர்​களுக்கு உணவுடன் கூடிய இருப்​பிட வசதி​யும் வழங்​கப்​படும்.


மேலும், கல்​லூரி மாணவர்​களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்​-​டாப் வழங்​கப்​படும். மாணவர்​களுக்கு உதவ நான் இருக்​கிறேன். திரா​விட மாடல் அரசு இருக்​கிறது. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார். துணை முதல்​வர் உதயநிதி பேசும்​போது, "தற்​போது தொடங்​கப்​பட்​டுள்ள வெற்றி நிச்​ச​யம் திட்​டத்​தின் மூலம் ஆண்​டுக்கு 75 ஆயிரம் மாணவர்​களுக்கு திறன் பயிற்சி அளிக்​கப்​படும்.


இத்​திட்​டத்​துக்கு முதல்​கட்​ட​மாக ரூ.100 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. 38 தொழிற்​பிரிவு​களில் 500-க்​கும் மேற்​பட்ட பயிற்சி நிறு​வனங்​கள் வாயி​லாக 165 பயிற்​சிகள் வழங்​கப்​படும்" என்​றார்.


விழா​வில் அமைச்​சர்​கள் பி.கே. சேகர்​பாபு, ராஜகண்​ணப்​பன், மேயர் ஆர்​.பிரி​யா, உயர்​கல்​வித்துறை செயலர் பொ.சங்​கர், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழக மேலாண் இயக்​குநர் கிராந்​தி​கு​மார் பாடி, சிஐஐ தலை​வர் உன்னி கிருஷ்ணன் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர். சிறப்பு திட்ட செய​லாக்​கத்​ துறை​யின்​ செயலர்​ பிரதீப்​ யாதவ்​ நன்​றி கூறி​னார்​.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment