Teacher Recruitment: சென்னை மாநகராட்சியில் 506 ஆசிரியர் காலியிடங்கள்... வெளியான குட் நியூஸ்!!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Teacher Recruitment| மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், 300 பட்டதாரி ஆசிரியர்களும் 206 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையில் சிறப்பு முன்னேற்றத்துக்காக, மாநகராட்சி பள்ளிகளில் 506 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என மன்றக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேயர் பிரியா தலைமையில், துணைமேயர் மகேஷ்குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் முன்னிலையில் இந்த கூட்டமானது நடைபெற்றது.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், 300 பட்டதாரி ஆசிரியர்களும் 206 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்றக் கூட்டத்தில் சென்னை நகரத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரிய மரியாதையை பிரதிபலிக்கும் விதமாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. டிமான்டி சாலைக்கு இசைத் துறையின் மாபெரும் சாதனையாளர் எம். எஸ். விஸ்வநாதனின் பெயர் சூட்டப்படுவதற்கும், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் சிலையை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமாரா நூலக நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலையை வைக்கவும், திருவான்மியூரில் உள்ள பூங்காவில் இந்திரா காந்தி சிலையை நிறுவவும் அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சி இயக்க வளாகத்தில் தேவநேய பாவாணர் சிலை அமைப்பதற்கும், சில முக்கிய சாலைகளின் பெயர் மாற்றங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மாமன்றக் கூட்டத்தில் மொத்தம் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ரூ.12 கோடி செலவில் மணலி மண்டலத்தில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையம் அமைக்கும் திட்டமும் இடம்பெற்றது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment