Education News (கல்விச் செய்திகள்)
CBSE vs ICSE: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை சிறந்த பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தியாவில், ஸ்டேட் போர்டு, CBSE மற்றும் ICSE உள்ளது. இதனிடையே எந்த வாரியம் சிறந்தது என்பதை பற்றி தற்போது பார்ப்போம்.
பொதுவாகவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவார்கள். என்ன படிக்க வைப்பது என்று. இதை யாராலும் இல்லை என்று மறுக்க முடியாது. அதிலும், குறிப்பாக பள்ளி சேர்க்கை குறித்த கேள்வி எழும்போது, அந்தக் கவலை பெற்றோர்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது. ஏனென்றால், காலம் தற்போது நிறைய மாறிவிட்டது. அரசு அல்லது அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்குகின்றனர்.
இது வருத்தத்திற்குரிய விஷயம். மேலும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தமிழ் வழியில் படிப்பதற்கு சேர்ப்பதை விட, ஆங்கில வழியில் படிப்பதையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், பல பெற்றோருக்கு CBSE மற்றும் ICSE இடையே எந்த வாரியம் சிறந்தது, தங்கள் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்பது தெளிவாக புரியவில்லை.
CBSE மற்றும் ICSE இடையே எந்த வாரியம் சிறந்தது என்பதை பற்றி தற்போது பார்ப்போம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை சிறந்த பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தியாவில், ஸ்டேட் போர்டு, CBSE மற்றும் ICSE உள்ளது.
ஸ்டேட் போர்டு: இந்த வாரியத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வாரியம் உள்ளது. அந்த வாரியத்தில், மாநிலத்தின் சொந்த மொழியுடன் கூடுதலாக ஆங்கிலம் உள்ளிட்ட கல்வி வழங்கப்படுகிறது.
CBSE: இந்த வாரியம் நாடு முழுவதும் பரவலாக உள்ளது. இது ஒரு ஆங்கில வழி பள்ளி வாரியம். இந்த வாரியத்தில் படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிக வெற்றியைப் பெறுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
ICSE: இந்த வாரியம் ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த வாரியத்தில் படிக்கும் மாணவர்களிடையே ஆங்கில அறிவு மிக அதிகமாக உள்ளது. ஆனால், உங்கள் குழந்தைகளின் ஆர்வத்திற்கு ஏற்ப வாரியத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்
எந்தவொரு போட்டித் தேர்விற்கும் செல்லும் மாணவர்கள் CBSE வாரிய புத்தகங்களின் உதவியைப் பெற வேண்டும். எதிர்காலத்தில் எந்தவொரு குழந்தையும் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், ICSE வாரியம் அவர்களுக்கு சிறந்த தேர்வாகும். எனவே குழந்தைகளின் எதிர்காலத் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வாரியத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment