TNPSC, SSC, RRB, Banking தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி - 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

அரசு வேலையில் சேர வேண்டும் என்பது உங்கள் கனவா? தமிழ்நாடு அரசே இலவச பயிற்சி வழங்கி உங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி மற்றும் ரயில்வே ஆகியவற்றிக்கான போட்டித்தேர்வுகளுக்கு சென்னையில் 6 மாத கால பயிற்சியை கட்டணமில்லாமல் தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் வழங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

போட்டித் தேர்வுகள்
தமிழ்நாடு அரசின் உள்ள பல்வேறு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குரூப் தேர்வுகள், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுகள் ஆகிய மூலம் ஒவ்வொரு ஆண்டு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே போன்று, மத்திய அரசில் இருக்கும் முக்கிய பணியிடங்கள் எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு மையம் மூலம் நிரப்பப்படுகிறது.
பொதுத்துறை வங்கியில் இருக்கும் காலிப்பணியிடங்கள் IBPS மூலமும், ரயில்வேயில் இருக்கும் காலிப்பணியிடங்கள் RRB மூலமும் நிரப்பப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பயிற்சி
அந்த வகையில், TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

TNPSC, SSC, RRB, Banking தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி - 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Authored Byஜான்வி | Samayam Tamil | Updated: 14 May 2025, 6:09 pm
Subscribe

மத்திய, மாநில அரசு பணிகளில் சேர வேண்டும் என பலர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பயிற்சியை தமிழக அரசு வழங்குகிறது வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி, மத்திய அரசின் எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கி பணிகளில் சேர விரும்புகிறவர்களுக்கு தமிழ்நாடு அரசின் போட்டித்தேர்வுகள் பயிற்சி மையம் மூலம் சென்னையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி (புகைப்படங்கள்- Samayam Tamil)
அரசு வேலையில் சேர வேண்டும் என்பது உங்கள் கனவா? தமிழ்நாடு அரசே இலவச பயிற்சி வழங்கி உங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி மற்றும் ரயில்வே ஆகியவற்றிக்கான போட்டித்தேர்வுகளுக்கு சென்னையில் 6 மாத கால பயிற்சியை கட்டணமில்லாமல் தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் வழங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

போட்டித் தேர்வுகள்
தமிழ்நாடு அரசின் உள்ள பல்வேறு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குரூப் தேர்வுகள், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுகள் ஆகிய மூலம் ஒவ்வொரு ஆண்டு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே போன்று, மத்திய அரசில் இருக்கும் முக்கிய பணியிடங்கள் எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு மையம் மூலம் நிரப்பப்படுகிறது.

பொதுத்துறை வங்கியில் இருக்கும் காலிப்பணியிடங்கள் IBPS மூலமும், ரயில்வேயில் இருக்கும் காலிப்பணியிடங்கள் RRB மூலமும் நிரப்பப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பயிற்சி
அந்த வகையில், TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள்
இதற்கான பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.
பயிற்சி பெற தகுதிகள் என்ன?
பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை
விண்ணப்பங்கள் வரவேற்பு
போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை, நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் https://www.cecc.in/ 16.05.2025 முதல் 31.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

0 Comments:

Post a Comment