CA ஆவது எப்படி? என்ன தேர்வு எழுத வேண்டும்?மாணவர்களுக்கு உதவும் முழு விவரம்

 

பட்டயக் கணக்காளர் எனப்படும் சிஏ (CA) படிப்பிற்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. வருவானம் மற்றும் நிதி சார்ந்த தேவைகளுக்கு ஆடிட்டர்கள் அவசியம் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. சிறு நிறுவனங்கள் முதல் பெரிய தொழில்கள் வரை பட்டயக் கணக்காளர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. ஆனால், சிஏ என்ற அந்தஸ்த்தை பெற ஒருவர் 4 கட்ட நிலையை கடந்து வர வேண்டும். இந்தியாவில் சிஏ ஆவது எப்படி, அதற்கு எழுத வேண்டிய தேர்வுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

பட்டயக் கணக்காளர் எனப்படும் சிஏ (CA) படிப்பிற்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆடிட்டர்களின் தேவை என்பதை தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில், லட்சக்கணக்கில் ஊதியத்துடன் நிதித்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிஏ ஆக தேர்ச்சி பெற 4 கட்ட நிலையை கடக்க வேண்டி உள்ளது. அந்த வகையில், 12-ம் வகுப்பிற்கு பின்னர் சிஏ படிப்பை தொடர்வது எப்படி? தகுதிகள் என்ன, தேர்வு முறை ஆகிய தகவல்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

CA ஆவது எப்படி?
பட்டயக் கணக்காளர் (CA) ஆக வேண்டும் என்றால், அதற்கு இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் (ICAI) நடத்தும் 3 தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். சிஏ முதல்நிலை (Foundation Examination), இடைநிலை தேர்வு (Intermediate Examination) மற்றும் இறுதித் தேர்வு (Final Examination) என நடத்தப்படும்.

முதல் கட்டம் - சிஏ பவுண்டேஷன் தேர்வு

12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், இந்திய பட்டய கணக்காளர்கள் கழகம் நடத்தும் சிஏ பவுண்டேஷன் தேர்வை எழுத வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 6 மாதங்களில் இந்த தேர்வை எழுத முடியும். ICAI வழங்கும் பவுண்டேஷன் படிப்பில் சேர வேண்டும். கணக்கு, அக்கவுண்டன்சி, சட்டம், பொருளாதாரம் ஆகிய நான்கு பாடங்கள் கொண்டு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சிஏ இன்டர்மீடியட் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். தோல்வி அடைபவர்கள், ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்ற விதம் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் முயற்சி செய்து தேர்ச்சி பெறலாம்.

இரண்டாம் கட்டம் - சிஏ இன்டர்மீடியட் தேர்வு
சிஏ பவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். அவையில்லாமல், பிகாம், பிஎஸ்சி போன்ற மூன்று வருடப் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள், சிஏ பவுண்டேஷன் தேர்வு எழுதாமல் நேரடியாக சிஏ இன்டர்மீடியட் தேர்வை எழுதலாம். இந்த படிப்புக்கான காலம் 9 மாதங்கள். இந்தத் தேர்வு நான்கு பகுதிகள் கொண்ட இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அக்கவுண்டன்சி, ஆடிட்டிங், வரி, சட்டம் போன்ற முக்கியமான பாடங்களை இந்தத் தேர்வில் படிக்க வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற, ஒரு குரூப்பில் உள்ள நான்கு பாடங்களிலும் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். மேலும், நான்கு பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 200-க்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த குரூப்பில் ஒருவர் தேர்ச்சி பெற முடியும். ஆனால், இந்த நான்கு பாடங்களில் எந்தப் பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தாலும், அந்தத் தேர்வு மட்டும் தேர்ச்சி அடைந்ததாக எடுத்துக் கொள்ளப்படும்.இரண்டு குரூப்பிலும் தேர்ச்சி அடைபவர்கள், சிஏ ஃபைனல் தேர்வுக்குத் தேர்ச்சி அடைவார்கள்.

அக்கவுண்டன்சி, ஆடிட்டிங், வரி, சட்டம் போன்ற முக்கியமான பாடங்களை இந்தத் தேர்வில் படிக்க வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற, ஒரு குரூப்பில் உள்ள நான்கு பாடங்களிலும் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். மேலும், நான்கு பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 200-க்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த குரூப்பில் ஒருவர் தேர்ச்சி பெற முடியும். ஆனால், இந்த நான்கு பாடங்களில் எந்தப் பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தாலும், அந்தத் தேர்வு மட்டும் தேர்ச்சி அடைந்ததாக எடுத்துக் கொள்ளப்படும்.இரண்டு குரூப்பிலும் தேர்ச்சி அடைபவர்கள், சிஏ ஃபைனல் தேர்வுக்குத் தேர்ச்சி அடைவார்கள்.

மூன்றாம் கட்டம் - பயிற்சி ஆடிட்டர்
சிஏ இன்டர்மீடியட் தேர்வுகளில் ஒரு குரூப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள், பயிற்சி ஆடிட்டர்களாக பணி செய்யலாம். ஆடிட்டிங் கம்பெனியில் 3 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும். இதற்கு சம்பளம் வழங்கப்படும்.

நான்காம் கட்டம் -சிஏ ஃபைனல் தேர்வுகள்
பயிற்சி காலம் முடித்து இன்டர்மீடியட்டில் இரண்டு குரூப்புகளிலும் தேர்ச்சி அடைந்தவர்கள், சிஏ ஃபைனல் தேர்வை எழுதலாம். இத்தேர்வு எட்டு பாடங்கள் கொண்டு 2 குரூப்புகளாக நடத்தப்படும். இரண்டு குரூப்பிலும் தேர்ச்சி அடையும் மாணவர்கள், சிஏ தேர்ச்சி பெறுவார்கள்.

இத்தனை கட்டங்களை கடந்துதான் ஒருவர் சிஏ ஆக முடியும். அதனைத்தொடர்ந்து, மத்திய, மாநில அரசு முதல், பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புகளை பெறலாம். சிஏ தேர்வில் தேர்ச்சி அடைபவர்களில் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.



0 Comments:

Post a Comment