Education News (கல்விச் செய்திகள்)
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது . கடைசியாக 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது . தற்போது 2025-2026ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
அக்கலந்தாய்வில் ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் கட்டாயமாக பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவேண்டும் . இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் 30.06.2025 ல் ஓய்வு பெற இருக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் , தற்போது பணிபுரியும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தாலும் , அவர்களுக்கு இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்பவர்களின் முன்னுரிமை அவர்கள் பணிபுரியும் ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை தயார் செய்யப்பட்டு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் . ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கு பட்சத்தில் அவர்கள் முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையிலும் , முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையிலும் ( வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை ) , பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பெயரின் ஆங்கில எழுத்து வரிசையின் படியும் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்
BEOs Counselling - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2025 2026 அட்டவணை
004634 I1 2025 BEOs Counselling.pdf
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment