முதுகுவலியை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்ய உதவும் மருத்துவரின் எளிய வழிமுறைகள்.! - Agri Info

Adding Green to your Life

November 3, 2024

முதுகுவலியை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்ய உதவும் மருத்துவரின் எளிய வழிமுறைகள்.!

 நீண்ட நேரம் உடல் உழைப்பை போட்டு வேலை செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள். இது உங்கள் முதுகு தண்டுவடத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி டாக்டர் எஸ்.கே.ராஜன் விரிவாக விளக்குகிறார்.

இன்றைய பரபரப்பான வேலை கலாச்சாரத்தில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது அதீத வேலை நேரத்தை எதிர்கொள்வதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒருபுறம் பலர் இருந்த இடத்தை விட்டு நகராமல் வேலை செய்கிறார்கள். மறுபுறம் பல கிலோமீட்டர் தூரம் வண்டி ஓட்டியே தேய்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் மணிக்கணக்கில் நின்று வேலை செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. இதுபோன்ற நவீன சூழல் வேலைகளில் சிக்கித் தவிப்பவர்கள் தங்களது உடல்நலன் குறித்து சிந்திக்கிறார்களா என்றால், இல்லை என்பது தான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கிறது. இவ்வாறு உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளாமல் நீண்ட நேரம் உழைப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

News18

குறிப்பாக மேற்குறிப்பிட்ட உட்கார்ந்து கொண்டேயிருப்பது, வண்டி ஓட்டிக் கொண்டே இருப்பது மற்றும் தொடர்ந்து நிற்பது உங்களது முதுகுத்தண்டில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறு நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள். பொதுவாக, கடுமையான முதுகெலும்பு பிரச்சினைகள் ஏற்படும் போது தான் அதன் தீவரத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகும்.

ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையின் தலைமை நியூரோ ஸ்பைன் சர்ஜரி மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சையின் கூடுதல் இயக்குனரும், நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு பிரபலமான மருத்துவருமான எஸ்.கே. ராஜன் இதுகுறித்து பேசுகிறார்.

உட்கார்ந்த வாழ்க்கை முறை : 

முதுகு பிரச்சனைகளின் முக்கிய காரணங்களில் ஒன்று, பெரும்பாலான வேலைகள் உட்கார்ந்த நிலையில் இருப்பதுதான். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, குறிப்பாக மோசமான தோரணையில் உட்கார்ந்திருப்பது, முதுகெலும்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது இறுதியில் முதுகெலும்பின் தவறான அமைப்பு, தசை விறைப்பு மற்றும் நாள்பட்ட வலி ஆகியவற்றுக்கு காரணமாகிறது. இதனால் முதுகெலும்பின் இயற்கையான வளைவு அழிக்கப்படுவதுடன், முதுகுக்கு ஆதரவாக இருக்கும் முக்கிய தசைகள் பலவீனமாகவும், அதிகமாகவும் நீட்டிக்கப்பட்டு, கீழ் முதுகுவலி, வட்டுகள் நழுவுதல் மற்றும் சியாட்டிகா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

மோசமான தோரணையில் அமர்தல் மற்றும் அதன் நீண்ட கால தாக்கம் : 

மோசமான தோரணையில் அமர்வது முதுகெலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாகும். உட்கார்ந்திருக்கும் போது மேசையில் முன்னால் சாய்வது, தலையை முன்னோக்கி சாய்த்து மானிட்டரைப் பார்ப்பது அல்லது உங்கள் உடலில் சமனில்லாமல் நிற்பது போன்றவை உங்கள் முதுகு மற்றும் கழுத்து தசைகளில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த பழக்கம் கைபோசிஸ், முதுகுத்தண்டு அதிகப்படியாக முன்னோக்கி வளைதல் மற்றும் நீண்ட கால தவறான சீரமைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும், இதன் விளைவாக அடிப்படை இயக்கங்கள் கூட சங்கடமானதாக மாறுகிறது. மோசமான தோரணை, காலப்போக்கில், நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கத்தை குறைப்பதன் மூலம் வலியை தீவிரப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
ஆரோக்கியமான முதுகெலும்புக்கான நடவடிக்கைகள் :

  • சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான முதுகெலும்பை பராமரிக்க முடியும் மற்றும் முதுகெலும்பு பிரச்சினைகளையும் குறைக்க முடியும். வேலை செய்யும் போது சரியான தோரணையை பராமரிப்பது முக்கியம். உங்கள் கால்களை தரையில் தட்டையாகவும், உங்கள் முதுகை நேராகவும், உங்கள் கணினித் திரையை கண்ணிற்கு நேரமாக இருக்கும்படியும் வைக்கவும்.

  • முதுகுத்தண்டில் உள்ள அழுத்தத்தை குறைக்க அடிக்கடி இடைவெளி எடுப்பதும் முக்கியம். ஒவ்வொரு 30 முதல் 45 நிமிடங்களுக்கும் ஒரு சிறிய நடை, கை, கால்களை நீட்டுதல் அல்லது எழுந்திருப்பது, உங்கள் தசைகளுக்கு செயல்பாட்டையும், விறைப்பைத் தவிர்க்கவும் உதவும். இந்த பயிற்சிகள் முக்கிய தசைகளை வலுப்படுத்த உதவும் மற்றும் இது உங்கள் தோரணையையும் மேம்படுத்துகிறது.

  • சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீண்ட நேரம் வேலை செய்வது பலருக்கும் தவிர்க்க முடியாத விஷயமாக இருந்தாலும், உங்கள் முதுகெலும்புக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பது சிறந்தது. நல்ல தோரணை நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது, சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் அடிக்கடி இடைவெளிகளை எடுப்பது முதுகெலும்புக்கு சிரமத்தைத் தருவதை தடுக்க உதவும்.

  • இன்று முதுகுத்தண்டின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, எதிர்காலத்தில் நாள்பட்ட முதுகு வலி மற்றும் கடுமையான நோய்களைத் தவிர்க்க உதவும். உங்கள் முதுகெலும்பு உங்கள் ஆரோக்கியத்தின் அடித்தளம், எனவே வரும் காலங்களில் உங்கள் இயக்கம் மற்றும் வசதியை உறுதிப்படுத்த உங்கள் உடலை இப்போதே கவனித்துக் கொள்வது சிறந்தது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment