இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதும்.. ஒரே மாதத்தில் உடல் எடை குறையும்..! - Agri Info

Adding Green to your Life

November 3, 2024

இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதும்.. ஒரே மாதத்தில் உடல் எடை குறையும்..!

 

தற்போது உடல் பருமன் என்பது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ‘ஒபிசிட்டி’யால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரும்பிய பக்கமெல்லாம் ஆங்காங்கே உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. செல்போனில் உடல் எடையை குறைக்க உதவும் வழிமுறையை தேடுவதில் பலரும் கணிசமான நேரத்தையும் செலவிடுகின்றனர். இருப்பினும் பலருக்கு என்னவோ பலன் கிடைப்பதில்லை.

குறைந்த அளவு கலோரிகளைக் கொண்ட உணவுகள் எடை கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றன. அதோடு உங்களின் மன நிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்றன. மேலும், இரத்த சர்க்கரை அளவையும் இது மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தமல்ல என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சரி இப்போது குறைந்த அளவு கலோரிகள் கொண்ட உணவுகளை பற்றி விரிவாக பார்ப்போம். மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்ட இந்த 16 உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக பலன் பெறுவீர்கள். ஏனெனில் இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

News18

வெள்ளரிக்காய்:

  • கலோரிகள்: 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

  • நன்மைகள்: வெள்ளரிக்காய்களில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மிகக் குறைவாகவும் இருப்பதால், அவை நீரேற்றம் மற்றும் எடை குறைப்புக்கு சிறந்தவையாகும். மெடிக்கல் நியூஸ் டுடே.காம் கருத்துப்படி, வெள்ளரிக்காயில் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரெல்களை கொண்டிருக்கிறது. இது ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் பழமாகும். இதில், அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது

செலரி:

  • கலோரிகள்: 100 கிராம் செலரியில் வெறும் 14 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

  • நன்மைகள்: கீரை வகையைச் சேர்ந்த செலரியில் அதிக அளவிலான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ ஆசிட்கள் நிறைந்துள்ளன. செலரி உங்கள் உடலை தண்ணீரைக் காட்டிலும் இரண்டு மடங்கு ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மட்டுமின்றி இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

இலை கீரைகள்:

  • கலோரிகள்: 100 கிராம் இலை கீரைகளில் வெறும் 23 முதல் 30 கிராம் கலோரிகள் உள்ளது.

  • நன்மைகள்: கீரை மற்றும் லெட்டூஸ் போன்ற இலை கீரைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. இதில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ள அதேவேளையில், அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஹார்வர்ட் ஹெல்த் பரிந்துரையின் படி இலை கீரைகளை சாலட்டுகள் மற்றும் ஸ்மூத்திகளில் கலந்து சாப்பிடலாம்.

சீமை சுரைக்காய்:

  • கலோரிகள்: 100 கிராம் சீமை சுரைக்காயில் வெறும் 17 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

  • நன்மைகள்: சீமை சுரைக்காய் ஆனது ஒரு பல்துறை காய்கறி ஆகும், இது ஸ்டிர்-ஃப்ரைஸ், சாலடுகள் அல்லது பாஸ்தாவுக்கு மாற்றாக கூட பயன்படுத்தப்படலாம். இதில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது என மெடிக்கல் நியூஸ் டுடே.காம் தெரிவித்துள்ளது. சீமை சுரைக்காயில் நீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கிறது.

காளான்கள்:

  • கலோரிகள்: 100 கிராம் காளான்களில் வெறும் 22 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

  • நன்மைகள்: காளான்களில் கலோரிகளில் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை ப்ரோடீன் நிறைந்த உணவாக இருப்பது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்டிருக்கின்றன.இவை சூப்கள், சாலடுகள் மற்றும் ஸ்டிர்-ஃப்ரைஸ் போன்ற பல்வேறு உணவுகளில் கலந்து சாப்பிடலாம். பிபிசி குட் ஃபுட் படி, காளான்களில் ப்ரோடீன், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

தக்காளி:

  • கலோரிகள்: 100 கிராம் தக்காளியில் வெறும் 18 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

  • நன்மைகள்: தக்காளியில் வைட்டமின்கள் சி மற்றும் கே அதிகம் உள்ளது. அத்துடன் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் தக்காளி உதவுகிறது. தக்காளியில் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை எதிர்க்கும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களான லைகோபீனை அதிகமாக கொண்டிருக்கின்றன. மேலும், இது எடை குறைப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தையும் தடுக்க உதவுகிறது.

ப்ரோக்கோலி:

  • கலோரிகள்: 100 கிராம் ப்ரோக்கோலியில் வெறும் 34 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

  • நன்மைகள்: ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் ஃபோலேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது என்று மெடிக்கல் நியூஸ் டுடே.காம் தெரிவித்துள்ளது. குறைந்த அளவு கலோரி கொண்ட ப்ரோக்கோலியை பச்சையாகவோ, வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.

    காலிபிளவர்:

    • கலோரிகள்: 100 கிராம் காலிபிளவரில் வெறும் 25 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

    • நன்மைகள்: குறைந்த அளவு கலோரி கொண்ட காலிபிளவரில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான எடை குறைப்புக்கு உதவுகிறது. மேலும், இது இதய ஆரோக்கியத்தையும், செரிமான அமைப்பையும் மேம்படுத்தும் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள் கொண்டுள்ளன. இது பெரும்பாலும் பீட்சா மேற்பரப்பில் பயன்படுத்தப்படுகிறது.

    அஸ்பாரகஸ்:

    • கலோரிகள்: 100 கிராம் அஸ்பாரகஸில் வெறும் 20 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

    • நன்மைகள்: அஸ்பாரகஸ் ஆனது ஊட்டச்சத்து நிறைந்த காய்கறியாகும். இதில் நார்ச்சத்து அதிகமாகவும் மற்றும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அஸ்பாரகஸில் வைட்டமின்கள் கே, ஏ மற்றும் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், அத்துடன் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது என்று மெடிக்கல் நியூஸ் டுடே.காம் தெரிவித்துள்ளது. அவை வறுத்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம்.

    முள்ளங்கி:

    • கலோரிகள்: 100 கிராம் முள்ளங்கியில் வெறும் 16 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

    • நன்மைகள்: முள்ளங்கியில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் மற்றும் அதிக அளவிலான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. காய்கறிகளில் நம்ப முடியாத அளவுக்கு குறைந்த அளவிலான கலோரி நிறைந்துள்ள காயாகும். முள்ளங்கி சிறுநீரகத்தில் சேர்த்துள்ள நச்சுக்களை சுத்தப்படுத்த உதவுகிறது. முள்ளங்கியில் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது.

    குடைமிளகாய்:

    • கலோரிகள்: 100 கிராம் முள்ளங்கியில் வெறும் 31 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

    • நன்மைகள்: குடைமிளகாய் ஆனது வைட்டமின் சி நிரம்பியுள்ளது, மேலும் இது எந்த உணவிற்கும் சுவையையும், வண்ணத்தையும் சேர்க்கிறது. அவை குறைந்த கலோரிகள் மற்றும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே அவற்றை சாலட்களில் கலந்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.

    முட்டைக்கோஸ்:

    • கலோரிகள்: 100 கிராம் முட்டைக்கோஸில் வெறும் 25 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

    • நன்மைகள்: முட்டைக்கோஸ் ஆனது நார்ச்சத்து நிறைந்த காய்கறி ஆகும், குறைந்த கலோரிகள் கொண்ட இந்த காய்கறி ஆனது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. சிவப்பு முட்டைக்கோஸில் வைட்டமின்கள் A, C மற்றும் K உள்ளிட்ட வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். இதை சாலடுகள், ஸ்டிர்-ஃப்ரைஸ் அல்லது சூப்களில் கலந்து சாப்பிடலாம்.

    கேரட்:

    • கலோரிகள்: 100 கிராம் கேரட்டில் வெறும் 41 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

    • நன்மைகள்: கேரட்டில் மிக குறைந்த அளவு கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. கேரட் ஆனது உங்கள் மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுமிறது. அது மட்டுமல்லாமல், விரைவான உடல் எடை இழப்புக்கும் கேரட் உதவுகிறது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து ஆனது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. அத்துடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு செல்களை வெளியேற்றவும் கேரட் உதவுகிறது.

    தர்பூசணி:

    • கலோரிகள்: 100 கிராம் தர்பூசணியில் வெறும் 30 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

    • நன்மைகள்: குறைந்த அளவு கலோரிகளை கொண்ட தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நீரேற்றத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இது கலோரிகளில் குறைவு, ஆனால் இயற்கையாகவே இனிப்பு.

      ஸ்ட்ராபெர்ரிகள்:

      • கலோரிகள்: 100 கிராம் ஸ்ட்ராபெர்ரிகளில் வெறும் 32 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

      • நன்மைகள்: குறைந்த கலோரிகள் கொண்ட ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் அவை மேன்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். ஒரு ஸ்ட்ராபெரியில் வெறும் 6 கலோரிகள் மட்டுமே உள்ளது. அவை ஸ்னாக் அல்லது ஸ்மூத்திகளில் கலந்து சாப்பிடலாம்.

      கிரீன் பீன்ஸ்:

    • கலோரிகள்: 100 கிராம் கிரீன் பீன்ஸில் வெறும் 31 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளது.

    • நன்மைகள்: கிரீன் பீன்ஸ் ஆனது குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறி ஆகும், இது வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்படலாம். கிரீன் பீன்ஸில் வைட்டமின் பி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment