உலகில் சிறந்து விளங்கும் முதல் 10 பள்ளிகளுக்கு 'World Best School Prize'விருது வழங்கப்படுகிறது. 50,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசு வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.41,79,175 ஆகும். கடந்த ஜூன் மாதம், மத்தியப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த பள்ளிகள் பல்வேறு பிரிவுகளில் சேர்க்கப்பட்டன. இந்த போட்டியை T4 Education UK ஏற்பாடு செய்திருந்தது.
இந்த இறுதிப் போட்டியில், இரண்டு இந்தியப் பள்ளிகள் இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, டெல்லி வசந்த் குஞ்ச்(Vasant Kunj) பகுதியில் உள்ள ரியான் இன்டர்நேஷனல் பள்ளி உலகின் சிறந்த பள்ளிக்கான பரிசைப் பெறலாம்.
ரியான் சர்வதேச பள்ளி ஒரு சுயாதீன மழலையர் (independent kindergarten school) பள்ளி ஆகும்.இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு பள்ளி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லம் (Ratlam) நகரில் உள்ள சிஎம் ரைஸ் பள்ளி வினோபா (CM Rise School Vinoba).சிஎம் ரைஸ் பள்ளி வினோபா அரசுப் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டுக்கான, உலகில் சிறந்து விளங்கும் முதல் 10 பள்ளிகளின் பட்டியலில் 2 இந்திய பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்காக இங்கிலாந்தில் ஆண்டுதோறும் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
CM RISE மாதிரி மேல்நிலைப் பள்ளி, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் (Jhabua) உள்ள ஒரு அரசுப் பள்ளி ஆகும்.
CM RISE மாதிரி மேல்நிலைப் பள்ளி, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் (Jhabua) உள்ள ஒரு அரசுப் பள்ளி ஆகும்.
டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ரியான் இன்டர்நேஷனல் பள்ளியில், மழலையர் முதல் மேல்நிலை வகுப்புகள் வரை உள்ளது.
நீர் பற்றாக்குறை மற்றும் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் உயிர்வாயு ஆலைகள் போன்ற புதுமையான திட்டங்களை இந்த பள்ளி உருவாக்கியுள்ளது. இந்த பட்டியலில் 'சுற்றுச்சூழல் நடவடிக்கை' பிரிவில் இந்தப் பள்ளி இடம்பெற்றுள்ளது.
துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக பள்ளிகள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்கள் அதில் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment