நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள நிரந்தர ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியடங்கள் எண்ணிக்கை மொத்தம் 4 ஆகும்.
கல்வி மற்றும் இதர தகுதிகள் விபரம்: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு வருடம் ஓட்டுநர் முன்அனுபவம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நல்ல உடல் தகுதியுடனும் இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்: இந்து மதத்தை சார்ந்தவராகவும் தமிழ் நாட்டை சார்ந்தவாரகவும் இருக்க வேண்டும். நன்னடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும்.இதற்கு அரசிதழில் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்காள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். .விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், 01.07.2024 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும் 45 வயது நிறைவு செய்யாதவராவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்த சேர வேண்டிய கடைசி நாள் 04.10.2024 பிற்பகல் 5.00 மணி வரை ஆகும். விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி "உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம், நாமக்கல் மாவட்டம் -637 211."
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது திருக்கோயில் இணையதள www.tiruchengodearthanareeswarar.hrce.tn.gov.in அல்லது www.tnhrce.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் கிடையாது. இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்தில் கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment