நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் உள்ள 800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விபரம்: ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரியின் கீழ் பல்வேறு தரங்களில் உள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் டெக்னிக்கல் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் ஆகும்
துணை மேலாளர் (சிஸ்டம்) மற்றும் உதவி மேலாளர் (சிஸ்டம்) என இரு பதவிகளின் கீழ் 798 பணியிடங்களும், இதுதவிர, துணைத் தலைவர் (IT Risk) மற்றும் உதவி துணைத் தலைவர் (IT Risk) ஆகிய இரு பிரிவுகளில் தலா ஒரு பணியிடங்கள் என இரண்டு பணியிடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்.டெக் அல்லது எம்.எஸ்.சி ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் பணியைப் பொறுத்து 2-5 ஆண்டுகள் அது தொடர்புடைய பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு மட்டும் வயது வரம்பு 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
சம்பளம் விவரம்: துணை மேலாளர் பணியிடங்களுக்கு ரூ.64,820 - ரூ.93,960 வரையும், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ரூ.48,480 - ரூ.85,920 வரையும் மாத சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க பொது, ஒபிசி மற்றும் EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதே சமயம் எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sbi.co.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ SBI இணையதளத்தை அணுகவும் மற்ற விவரங்கள் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம் 4ஆம் தேதிக்குள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment