Search

₹60,000 வரை மாத சம்பளம்... தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை அறிவிப்பு

 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்திற்குக் குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்குத் தேர்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மருத்துவ அலுவலர் 2, செவிலியர் 2, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் MBBS முடித்தவராகவும், TNMSEஇல் பதிவு பெற்றவராகவும் இருக்க வேண்டும். மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மருத்துவ அலுவலர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.60,000 சம்பளமாக வழங்கப்படும்.

செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் DGNM (Diploma in General Nursing and Midwifery) முடித்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். செவிலியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.14,000 சம்பளமாக வழங்கப்படும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.6,000 சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும், நன்னடத்தை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அரசிதழில் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் தகுதிச் சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயல் அலுவலர், முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் 628206, என்ற முகவரிக்கு 05.10.2024 அன்று மாலை 5.45க்குள் கிடைத்திடும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதிக்குப் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள், விண்ணப்பத்தில் உரிய பட்டியலில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், கோரப்பட்ட சான்றுகள் இணைக்கப்படாமல் வரப்பெறும் விண்ணப்பங்கள் எவ்விதப் பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்களைக் கோவில் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் முத்தாரம்மன் கோவில் என்கிற பெயரில் உள்ள பக்கத்தில், ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment