அக்யூட் கிட்னி இன்ஜூரி (Acute kidney injury - AKI) என்பது ஒருவரின் சிறுநீரகங்கள் திடீரென்று சரியாக வேலை செய்யாமல் போகும் நிலை மற்றும் இது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குள் ஏற்படுகிறது. சிறுநீரக செயல்பாட்டில் ஏற்படும் சிறிய பாதிப்பு முதல் சிறுநீரகம் முழுமையாக செயலிழப்பது வரை என இதன் பாதிப்புகள் இருக்கலாம். அதே போல இந்த சிறுநீரக பாதிப்பு என்பது ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக தீவிர சிகிச்சை தேவைப்படும் மோசமான கண்டிஷனில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான நிலையாக இருக்கிறது. இந்த பாதிப்பு சிறிய அளவில் இருக்கும் போதே கண்டறிவது மற்றும் சரியாக நிர்வகிப்பது மீள்வதை எளிதாக்க கூடும் என்பதால் AKI ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை நாம் புரிந்து கொள்வது முக்கியம்.
பிரபல மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி கூறுகையில் உடலில் காணப்படும் அறிகுறிகள், மருத்துவ நிலைமைகள் மற்றும் சிறுநீரகப் பாதிப்பிற்கு பங்களிக்கும் சமீபத்திய நிகழ்வுகள் போன்ற மெடிக்கல் ஹிஸ்ட்ரி மதிப்பாய்வு மூலம் பாதிப்பை கண்டறியலாம். உடல் பரிசோதனையானது Fluid retention, குறைந்த அளவே சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீரகச் செயலிழப்பிற்கான மற்ற அறிகுறிகளை மதிப்பிட உதவுகிறது என்றார்.
சிறுநீரக செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்காக Creatinine மற்றும் Blood urea nitrogen அளவை அளவிட ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். தவிர சிறுநீரக ஆரோக்கியத்தை மதிப்பிட சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்படலாம் என்றார். சில சந்தர்ப்பங்களில் சிறுநீர் பாதையில் Structural abnormalities அல்லது அடைப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகள் செய்யப்படலாம்.
AKI பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைதல் - டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக இது நிகழலாம்.
சிறுநீரகங்களில் நேரடி பாதிப்பு - தொற்றுகள், சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும்.
சிறுநீரகம் தொடர்பான நோய்கள் - Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற நிலைமைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு - கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தலாம். இது AKI பாதிப்புக்கு வழிவகுக்கும்.
AKI பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்:
AKI பாதிப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம் என்றாலும் சில பொதுவான அறிகுறிகள் இருப்பதாக கூறுகிறா மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி. வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவது, திரவம் தேங்குவதால் கால்கள், கணுக்கால் அல்லது முகத்தில் வீக்கம் ஏற்படுவது, சோர்வு மற்றும் பலவீனம், குமட்டல், வாந்தி, அல்லது பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை AKI-ன் பொதுவான அறிகுறிகள் என்றார்.
டீ-ஹைட்ரேஷன், தொற்று அல்லது மருந்து தொடர்பான பிரச்சினைகள் காரணமாக AKI பாதிப்பு ஏற்பட்டால் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் பேலன்ஸை பராமரிப்பது மிகவும் முக்கியம். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த நரம்பு வழி திரவங்கள் (intravenous fluids) அல்லது Diuretics கொடுக்கப்படலாம். அதே போல காரணத்தைப் பொறுத்து அறிகுறிகளை குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தை குறைக்க சில மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம் என்கிறார் மருத்துவர் சாட்டர்ஜி.
தீவிர நிலைகளில் சிகிச்சை…
AKI பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தால் சிறுநீரக செயல்பாடு சீராகும் வரை ரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி நீக்க டயாலிசிஸ் செய்யப்படலாம். பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட, நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வழக்கமான ஃபாலோ-அப் மற்றும் அப்பாயின்மென்ட்டை சரியாக பின்பற்ற வேண்டும்.
No comments:
Post a Comment