கிராமப்புற பெண்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தோடு பல்வேறு வகையான பயிற்சிகள் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது . முற்றிலும் இலவசமாகவே அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வரும் நிலையில் , தற்போது கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிய மையத்தில் கிராமப்புற பெண்களுக்கு என இலவச செல்ஃபோன் சர்வீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது
30 நாட்கள் நடைபெறும் செல் போன் சர்வீஸ் இலவச பயிற்சியானது தினசரி காலை 9.30மணியிலிருந்து மாலை 5.30 வரை நடைபெறும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் பயிற்சி துவங்க உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் காலை,மதிய உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் 04546-251578 & 8072334369& 9500314193& 9442758363 & 8870376796 என்ற எண்களில் தொடர்பு கொள்ளம் எனவும் அல்லது ஆகஸ்ட் ஆறாம் ஆம் தேதிக்கு முன்பாக கனரா வங்கி ர்ஸ்டி உழவர் சந்தை எதிர் புறம், கான்வென்ட் அருகில் தேனி இந்த முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment