12 ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்...இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு - Agri Info

Adding Green to your Life

July 26, 2024

12 ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்...இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் 2024-ஆம் ஆண்டிற்கான அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகுதி: இத்தேர்வுக்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 03.07.2004 முதல் 03.01.2008 தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதியாக 12-ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று வருட பொறியியல் பிரிவில் பட்டயச்சான்று பெற்றவர்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிபாடத்தில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் அல்லது அறிவியல் அல்லாத 12-ஆம் வகுப்பு பயின்றவர்கள் ஆங்கிலப்பாடப்பிரிவில் 50 சதவீதமதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
**விண்ணப்பிக்கும் முறை:**இப்பணியிடத்திற்கான தேர்வுநாள் 18.10.2024 முதல் நடைபெற உள்ளது. மேலும், இது குறித்த விவரங்களுக்கு https//agnipathvayvu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் அல்லது My IAF APP என்ற அலைபேசி விண்ணப்பபடிவத்தின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். 







🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment