Search

காஃபி குடிச்சாலும் எடையை ஈசியா குறைக்கலாம்.. இது இத்தனை நாள் தெரியாதா..?

 இன்றைய வாழ்க்கை முறை காரணமாக மனிதர்களுக்கு பெரும்பாலும் எதாவது ஒரு வியாதி வந்துவிடுகிறது. அனைவருக்கும் பொதுவாக வரும் ஒன்று அதீத எடை. அமர்ந்தே வேலை செய்வது, படிப்பது என்று உடல் உழைப்புகள் இல்லாததால் கொழுப்பு அங்கங்கே சேர்ந்துவிடுகிறது. உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல வேலைகளை செய்கின்றனர்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது டீ அல்லது காபி குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்தக் கேள்விக்கான விடையை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். காபி அல்லது டீயை சரியான அளவுகளில், சரியான முறையில் தயாரித்து, சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

ஒரு நாளைக்கு 3-4 கப் பால் சேர்த்த டீ அல்லது காபியுடன், பஜ்ஜி போண்டா, பிஸ்கட் என்று  ஸ்நாக்ஸ்களை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக உடல் எடை அதிகரிக்கும். ஆனால் நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த முறையை பின்பற்றினால், காபி குடித்தாலும் உடல் எடை அதிகரிக்காது என்று சொல்கின்றனர். உடல் எடையை குறைக்க உதவும் காபியை தான் இப்போது சொல்ல இருக்கிறோம்.

நிபுணர்களின் கருத்துப்படி, சூடான நீருடன் காபி பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் எடை வேகமாக குறையுமாம். இதை காலை, மாலை அல்லது இடைப்பட்ட காலை நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து இந்த காபியை எடுத்துக் கொள்ளலாம்.

இதை தூங்குவதற்கு முன் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்களுடைய தூக்கத்தை பாதிக்கலாம். இந்த முறையில் காபி போட்டு கொடுத்தால் உடல் எடையை ஈசியாக குறைக்கலாம் என்று கூறுகின்றனர். எடையை குறைப்பது மட்டும் இல்லாமல், எலுமிச்சையில் வைட்டமின் A, C மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

காபி பொடி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இது பசி உணர்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளலை தடுக்கிறது. காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடலின் ஆற்றல் மட்டத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. பால் இல்லாத காபி என்பதை மனதில் கொள்ளுங்கள்.பாலில் எலுமிச்சை சேர்த்தால் திறந்துவிடும். அதோடு எடையைக்குறைக்க என்னும் பொது பாலின் பயன்பாட்டைக் குறைப்பதும் நல்லது. மேலும் இந்த எலுமிச்சை காபி கலோரிகளை எரித்து உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

எலுமிச்சை காபி வைப்பது மிக எளிது. முதலில் ஒரு கப்பில் பாதி  எலுமிச்சையை பிழிந்து  சாறை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1 ஸ்பூன்  காபி பொடி மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இனிப்பு இல்லாமல் குடிக்க முடியாதவர்கள் கொஞ்சமாக சக்கரை சேர்க்கலாம். ஆனால் சக்கரை சேர்க்காமல் இருப்பது தான் நல்லது.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

0 Comments:

Post a Comment