Search

கோடைக்காலத்தில் இந்த 5 மசாலாக்களை உணவில் அதிகம் சேர்த்துக்காதீங்க..!

 கோடை காலத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பத்திலிருந்து நம் உடலை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவும் இந்த சமயத்தில் என்ன சாப்பிட வேண்டும், எந்த உணவையெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் தேவை. கோடை காலத்தில் நம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் வேறு உடல்நலப் பிரச்சனைகள் வருவதை தடுக்கவும் ஆரோக்கியமான உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் வெயில் காலங்களில் மசாலா சேர்த்த உணவுகளை தவிர்க்கும் படி கூறுவார்கள். ஆனால் மசாலா சேர்க்கவில்லை என்றால் நம் உணவுகள் முழுமையடையாது. புதினா, மஞ்சள், ஏலக்காய் போன்ற மசாலாக்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பண்புகள் உள்ளது


எனினும் இந்த கோடைக் காலத்தில் சில மசாலா பொருட்களை அளவாக பயன்படுத்துவதே நம் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். அது எந்த மசாலா பொருட்கள் என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.


இஞ்சி: இஞ்சியில் நம் உடலுக்கு நன்மை தரும் பல மருத்துவ பண்புகள் இருப்பதோடு வைட்டமின், காப்பர், மாக்னீசியம் போன்ற சத்துகள் அதிகளவு உள்ளது. ஆனால் இஞ்சியை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால். அது நம் உடலில் சூட்டை அதிகரிக்கும். இதனால் கோடை காலத்தில் தேவையில்லாத உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும்.


மிளகாய்: இந்திய சமையல் மிளகாய் இல்லாமல் ஒருபோதும் பூர்த்தியடையாது. பச்சை நிறத்தில் இருக்கும் மிளகாய் மட்டுமல்ல; சிவப்பு, குட்டை, நீளம், கரு மிளகு என எல்லா வகை மிளகாய்களும் நம் உணவு முறையில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆனால் கோடை காலத்தில் மிளகாவை அதிகமாக சேர்க்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் கோடை காலத்தில் இவை நம் உடலில் எரிச்சல் தன்மையை ஏற்படுத்தும்.

பூண்டு: சமையலில் சிறிதளவு பூண்டு சேர்த்தால் அந்த உணவின் சுவை இன்னும் அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். குளிர்காலத்தில் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் இதை கோடை காலத்தில் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாய் துர்நாற்றம், அஜீரணக் கோளாறு போன்றவை வரக்கூடும்.

கிராம்பு: எல்லாருடைய வீட்டு சமையலறையிலும் இடம் பெற்றிருக்கும் கிராம்பை, கோடை காலத்தில் மிகவும் கவனமாகவே பயன்படுத்த வேண்டும். அடிக்கடி ரத்தக்கசிவு பிரச்சனை உள்ளவர்கள் கோடை காலத்தில் கிராம்பை தவிர்ப்பது நல்லது.

பெருங்காயம்: இதுவும் நம் இந்திய சமையலில் தவிர்க்க முடியாத மசாலா பொருள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. சமையலின் போது உணவில் கொஞ்சமாக பெருங்காயம் சேர்த்தால், அதன் சுவை அதிகரிப்பதோடு நமது மெடபாலிஸத்திற்கும் நல்லது. உடல் வீக்கம் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் கோடை காலத்தில் கிராம்பை தவிர்ப்பது நல்லது; அல்லது அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.



🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment