Search

வெயிலுக்கு ஐஸ் கிரீம் ரொம்ப சாப்பிடுறீங்களா..? இந்த ஆபத்தையும் தெரிஞ்சுக்கோங்க.!

 உணவு எடுத்துக் கொண்ட பின் ஐஸ்கிரீம் போன்ற உறைந்த இனிப்பு வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று எண்ணம் உங்களுக்கு தோன்றினால், நீங்கள் பின்வரும் கருத்துக்களை நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை அறவே தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

பொதுவாக உணவு சாப்பிட்ட பின்பு நம்மில் பலர் ஐஸ் கிரீம், குளோப் ஜாமுன் போன்ற இனிப்புக்களை எடுத்துக் கொள்வது வழக்கம். அதுவும் கோடை காலத்தில், பெரும்பாலும் நாம் குல்பி, ஐஸ்கிரீம் போன்ற உறைந்த உணவு வகைகளை அவ்வாறு விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இவை உண்மையில் நம் உடலுக்கு தீங்கானது என்பதை நாம் உணர்வதில்லை. இது போன்ற உறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது என்று பல ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுவாக இது போன்ற உறைந்த இனிப்பு உணவு வகைகளில் பாம் ஆயில் (palm oil) சேர்க்கப்படுகிறது. பாம் ஆயிலில் அதிகப்படியான சேச்சுரேடெட் கொழுப்பு (saturated fat) உள்ளது. இது நம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டுள்ளது. அது மட்டும் அல்ல, இது போன்ற உறைந்த உணவுகள் கொலஸ்ட்ரால் அளவுகளையும் அதிகப்படுத்தி விடுகின்றன.

கெட்ட கொழுப்பு உங்கள் தமனிகளை அடைத்து விட கூடும். அதே போல், இது போன்ற உறைந்த இனிப்பு உணவு வகைகளில் (குல்பி போன்றவை) பால் சேர்க்கப்படுவது இல்லை. அவை பெரும்பாலும் பால் திடப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பால் திடப்பொருட்களில் அல்லது பால் பவுடரில், நம் ரத்த நாளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடிய ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொலஸ்ட்ரால் இருக்கலாம்.


இவை நமக்கு ஆரோக்கியமற்றவை மற்றும் வழக்கமான நுகர்வுக்கு தகுதியற்றவை என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மேலும், உறைந்த உணவு வகைகள் பேக்கிங் கவரிலியே இதில் 10.2% தாவர எண்ணெய் மற்றும் காய்கறி புரத பொருட்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.


அது மட்டுமல்ல, உறைந்த இனிப்பு வகைகளில் திரவ குளுக்கோஸ் நிறைந்துள்ளது. இது சர்க்கரையின் செயற்கை மூலமாகும். அதோடு, இது போன்ற உறைந்த இனிப்பு வகைகளில் உற்பத்தியாளர்கள் செயற்கை சுவைகள் மற்றும் வண்ணங்களையும் சேர்ப்பார்கள். அதனால், இது போன்ற உறைந்த இனிப்பு வகைகள் முழுக்க முழுக்க நம் உடலுக்கு தீங்கானது.

எனவே, உங்களுக்கு உணவு எடுத்துக் கொண்ட பின்னர், ஐஸ் கிரீம் போன்ற உறைந்த இனிப்பு வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று எண்ணம் தோன்றினால், நீங்கள் மேற்கூறிய விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு உறைந்த இனிப்பு வகை உணவுகளை அறவே தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.


🔻🔻🔻

Click here to join TNPSC Studymaterial whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment