இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் நிறுவப்பட்ட அறக்கட்டளையான “SNEHA” தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 14 கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை (RSETIs) நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நிறுவப்பட்ட RSETI அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IOB காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
தகுதி விவரங்கள்:
• கணினி அறிவுடன் பட்டதாரியாக இருக்க வேண்டும்
• கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
• அடிப்படைக் கணக்கியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
• உள்ளூர் மொழியில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
• ஆங்கிலம் / இந்தியில் சரளமாக இருப்பது கூடுதல் தகுதி
• MS Office (MS-Word, MS-Excel மற்றும் MS-Power point), Tally & Internet ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
• உள்ளூர் மொழியில் தட்டச்சு செய்யும் திறன் அவசியம், ஆங்கிலத்தில் தட்டச்சு திறன் கூடுதல் நன்மை என தெரிவிக்கப்படுள்ளது.
தேர்வு செயல் முறை:
(i) Written Test
(ii) Personal Interview
Office Assistant வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/-ஊதியம் வழங்கப்பட உள்ளது.
IOB விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து INDIAN OVERSEAS BANK Regional Office 12/1, A. P T. Road, Park Road-Sathy Road Jn Erode-638 003. என்ற முகவரிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment