Search

இந்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2024 – ரூ.78,000/- மாத ஊதியம்!

 இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Project Scientist III / II / I, Project Associate II / I, Accountant, Senior Project Associate போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


WII பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Project Scientist III / II / I, Project Associate II / I, Accountant, Senior Project Associate, Principal Project Associate, Finance Assistant, Language or Copy Editor, Project Assistant ஆகிய பணிகளுக்கென 25 பணியிடங்கள் WII நிறுவனத்தில் காலியாக உள்ளது.

WII கல்வித் தகுதி:  

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Doctoral Degree, B.Tech, M.Tech, M.Sc, B.Com, M.Com ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

WII வயது வரம்பு:

Project Scientist III பணிக்கு 45 வயது எனவும்,

Project Scientist II / Senior Project Associate / Principal Project Associate பணிகளுக்கு 40 வயது எனவும்,

Finance Assistant பணிக்கு 50 வயது எனவும்,

மற்ற பணிகளுக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

WII சம்பளம்:  

இந்த WII நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000/- முதல் ரூ.78,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

WII தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

WII விண்ணப்ப கட்டணம்:

SC / ST / OBC / EWS / உடல் ஊனமுற்றவர்கள் – ரூ.100/-

மற்ற நபர்கள் – ரூ.500/-

WII விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த WII நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 19.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

0 Comments:

Post a Comment