Search

உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டியது இந்த வாழைப்பூ... ஏன் தெரியுமா ?

 வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர்.

துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு 'பி' விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்...

* வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.

*அதேபோல், கை, கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து, அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால், குணம் கிடைக்கும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும்.

* ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மேலும், கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது.

* வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும்.செரிமானத்தன்மை அதிகரிக்கும். வாய்ப்புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப் பூவிற்கு உண்டு.

* மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

*வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், ரத்தப்போக்கு கட்டுப்படும். அதோடு, உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். நாளடைவில் மறையும்.

* வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.

* பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

* வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.

* உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

'வாழையடி வாழையாக வாழ வேண்டும்' என்பது பழமொழி. நம் ஆயுளையும் வாழையடி வாழையாக அதிகரிக்கச் செய்யும் வாழைப்பூ நமக்கு கிடைத்த அதிசயமே!


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment