Search

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா..? தெரிந்துகொள்ள உடனே இதை செஞ்சு பாருங்க..!

 இன்றைக்கு மாறி வரும் கலாச்சாரங்கள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. யாருக்கு எப்போது என்ன நேரிடும்? என்று சொல்ல முடியாத அளவிற்கு இன்றைய நிலை உள்ளது.

இந்த சூழலில் நாம் எவ்வளவு காலம் வாழ போகிறோம்? என்று தெரிந்துக்கொள்ள முயல்வது அனைவருக்கும் ஆர்வமாக தான் இருக்கும். இதற்காகவே எஸ்ஆர்டி எனப்படும் sit and rise test உங்களுக்கு உதவியாக உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் மரபணு நோய் மற்றும் பிற உடல் நலப்பாதிப்பு உள்ளவர்களைக் கவனத்தில் கொள்ள முடியாது.

மேலும் இந்த சோதனை துல்லியமான கணிப்பைக் கொடுக்கவில்லை என்றாலும், உங்களின் ஆயுட்காலம் பற்றிய யோசனையை உங்களுக்கு அளிக்க உதவியாக இருக்கும். எனவே இந்த சோதனை குறித்த முழு விபரங்களையும் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்.

News18

எஸ்ஆர்டி சோதனை(Sit and rise Test) :

அமெரிக்காவில் நடைபெற்ற டுடே ஷோவில் பங்கேற்ற மருத்துவர் நடாலி அசார், சிட் ரைசிங் டெஸ்ட் அதாவது எஸ்.ஆர்.டி என அழைக்கப்படும் சிட் டு ஸ்டாண்ட் டெஸ்ட் சோதனைக் குறித்து விளக்கம் அளித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 2,002 பங்கேற்றனர். இதில் 68 சதவீதம் ஆண்களாக இருந்துள்ளனர். இவர்களிடம் தொடர்ச்சியாக எஸ்ஆர்டி சோதனையை மேற்கொண்டுள்ளனர். .இதில் மிகக்குறைவான புள்ளிகளைப் பெற்றவர்கள் அதாவது பூஜ்ஜியத்திலிருந்து 3 வரை புள்ளிகளைப் பெற்றவர்கள், அதிக மதிப்பெண்களைப் (8 முதல் 10 புள்ளிகளை) பெற்றவர்களைக் காட்டிலும் இறப்பதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகம் உள்ளது கண்டறிப்பட்டுள்ளது. இவர்களில் 40 சதவீதம் பேர் 11 ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டனர் என எக்ஸ்பிரஸ் யுகே தெரிவித்துள்ளது.

எஸ்ஆர்டி சோதனையை எவ்வாறு மேற்கொள்வது?

  • இந்த சோதனையை மேற்கொள்வதற்கு உங்களுக்கு எந்த உபகரணங்களும் தேவையில்லை. மாறாக நீங்கள் செய்ய வேண்டியது எந்த பேலன்சும் (பிடிப்பும்) இல்லாமல் நீங்கள் எப்படி உட்கார்ந்து எழுந்திருக்கிறீர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

  • முதலில் நீங்கள் தரையில் உட்கார வேண்டும். பின்னர் கால்களைக் குறுக்காக அல்லது நேராக வைத்து அப்படியே எழ வேண்டும். குறிப்பாக நீங்கள் எதிலும் சாயாமல், முழங்கால்கள், முழங்கைகள், தொடைகள் மற்றும் கைகளால் எதையும் தொடாமல் மீண்டும் உட்கார வேண்டும்.

  • இதோடு எந்த உதவியும் இல்லாமல் மீண்டும் எழுந்து நிற்கவும். இந்த பயிற்சியை சொல்வதற்கு எளிதாக இருப்பது போன்று தோன்றினாலும், சற்று கடினமான பயிற்சியாகத் தான் உங்களுக்கு இருக்கும்.இதே போன்று நீங்கள் எத்தனை முறை செய்கிறீர்கள்?

    என்பதைப் பொறுத்து தான் உங்களின் பாயிண்ட்ஸ்கள் கணக்கிடப்படும். ஒருவேளை நீங்கள் ஏதேனும் ஒன்றை ஆதரவாகப் பயன்படுத்துகிறீர்கள்? என்றால் ஒரு பாயிண்ட்களைக் கழித்துக் கொள்ளவும். ஒருவேளை உங்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி அல்லது ஏதேனும் உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்காக மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த சோதனை பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.உங்களின் இறப்பு எப்போது என்பதை முழுமையாக இந்த சோதனையில் தெரிந்துக்கொள்ள முடியாது. அதே சமயம் உங்களது உடல் நிலை எந்தளவிற்கு பாதிப்பில் உள்ளது? என்பதை நீங்களே வெறும் 2 நிமிடங்களில் அறிந்துக்கொள்ள முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment