மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்தில் ( Security Printing and Minding Corporation Of India) ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.18,780 முதல் அதிகபட்சமாக ரூ.95,910 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்த கழகத்தின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன என்ன பதவிகள் காலியாக உள்ளன, யார் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
ஜூனியர் டெக்னீசியன்: இந்த பணிக்கு மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லேப் அசிஸ்டென்ட், கெமிக்கல் பிளான்ட் ஆப்பரேட்டர், பவுண்டரி மேன், புர்னாஸ் ஆபரேட்டர், மில்ரைட் மெயின்டெனன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், இன்ஸ்ட்ருமெண்டேசன் மெக்கானிக் உள்ளிட்ட பாட பிரிவுகளின் கீழ் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.18,780 முதல் ரூ.67,390 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
சூப்பர்வைசர்: இந்த பணிக்கு மொத்தமாக 7 பேர் தேர்வு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் டிகிரியில் தமிழ் அல்லது ஆங்கிலம் முடித்தவர்கள், டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேசன், பிஇ, பிடெக உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.27,600 முதல் ரூ.95,910 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
லெபாரட்டரி அசிஸ்டென்ட் குரூப் 2: இந்த பணிக்கு மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி கெமிஸ்ட்ரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.21,540 முதல் ரூ.77,160 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
எங்க்ராவர்: எங்கராவர் என்றால் மெட்டல் வொர்க்ஸ் என்று பொருள். இந்த பணிக்கு ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை படிப்பில் பைன் ஆர்ட்ஸ் (மெட்டல் வொர்க்ஸ்) முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.29.910 முதல் ரூ.85,570 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
செக்ரடரியல் அசிஸ்டென்ட்: இந்த பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்களாக கருதப்படுகின்றனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.23, 910 முதல் ரூ.85,570 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு : இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் igmhyderabad.spmcil.com இணையதளம் மூலம் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணம் ரூ.650 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.300 விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுதியான விண்ணப்பதார்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
Click here for latest employment news
No comments:
Post a Comment