Search

இதயத்தை வலுவாக வைத்திருக்க உதவும் ஆரோக்கிய பழக்கங்கள் - விளக்கும் நிபுணர்.!

 கார்டியோவாஸ்குலர் நோய்கள் அதிலும் குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக ஹார்ட் அட்டாக், உலகளவில் அதிக உயிர்களை பலி வாங்கும் நோய்களில் முதலிடத்தில் உள்ளது. வயது வித்தியாசம் இன்றி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் அரை பலரும் ஹார்ட் அட்டாக்-கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.


மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்களை விட இந்தியர்களுக்கு சுமார் 10 - 15 வருடங்கள் முன்னதாகவே ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் 40 வயதுக்கு குறைவானவர்களின் சதவீதம் சுமார் 40% ஆக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் காவேரி மருத்துவமனை மருத்துவரான ஞானதேவ் இதய நோய் பற்றியும், இதயத்தை வலுவாக வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான பழக்கங்கள் பற்றியும் கூறியுள்ளார்.

ஹார்ட் அட்டாக் என்பது ஒரு லைஃப் ஸ்டைல் டிசீஸ் ஆகும், இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கலாம். இதய தசைகளுக்கு (heart muscle) ரத்தம் வழங்கும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. பொதுவாக ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் இந்த ஃபேட் டெபாசிட் , ஒருவரின் 11 வயதிற்கு மேலில் இருந்து துவங்குவதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே எதிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் சிறு வயதிலேயே தொடங்க வேண்டும். இதற்கு குறிப்பிடத்தக்க நடத்தை மாற்றங்கள் மற்றும் விழிப்புணர்வு தேவை.

காரணிகள்: பொதுவாக இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகள் மாற்றியமைக்கக்கூடியது மற்றும் மாற்றியமைக்க முடியாதது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாற்ற முடியாத ஆபத்து காரணிகளில் வயது, பாலினம், ஜெனிடிக் மேக்கப் அல்லது குடும்ப வரலாறு ஆகியவை ஆகும். மாற்ற கூடிய ஆபத்து காரணிகளில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிகரெட் பழக்கம், ஹை கொலஸ்ட்ரால், உடல் பருமன், உட்கார்ந்தி இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் உள்ளிட்டவை அடங்கும். இதய நலனுக்காக ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்வது மிக முக்கியம். இதயத்திற்கான ஆரோக்கியமான உணவுகள் என்று பார்க்கும் போது டயட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள், பீன்ஸ், மீன், குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள், முழு தானியங்கள், ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கிய கொழுப்புகள், அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய அல்லது கட்டுப்படுத்த வேண்டிய உணவுகளில் உப்பு, சர்க்கரை, ஆல்கஹால், ரெட் மீட், முழு கொழுப்பு பால் பொருட்கள் மற்றும் நன்கு வறுத்த உணவுகள் உள்ளிட்ட பல அடங்கும். இளம் வயதினருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக சிகரெட் பழக்கம் இருக்கிறது. புகைப்பழக்கம் ரத்த அழுத்தம் மற்றும் inflammation-ஐ அதிகரிக்கிறது, இதனால் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது அதிகரிக்கிறது.

புகைபிடிப்பவர்கள் இந்த பழக்கத்தை நிறுத்திய உடனேயே இதய நோய்க்கான அபாயம் குறையத் தொடங்குகிறது, புகைப்பதை நிறுத்திய 1 வருடத்திற்குப் பின் இதய நோய்களுக்கான ஆபத்து 50% குறைகிறது. தவிர போதுமான உடல்செயல்பாடுகள் இல்லாதது இதய நோய்கள் ஏற்படுவதற்கான மற்றொரு ஆபத்து காரணி. வழக்கமான அடிப்படையில் உடல்செயல்பாடுகளில் ஈடுபடுவது எடையை கட்டுப்படுத்துகிறது, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுக்குள் வைக்கிறது மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது. எனவே வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்ற மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் அல்லது 75 நிமிட தீவிர ஏரோபிக் ஆக்டிவிட்டி உள்ளிட்டவற்றில் ஈடுபட டாக்டர் ஞானதேவ் வலியுறுத்துகிறார்..

குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் very high intensity பயிற்சிகளில் கவனம் செலுத்தாஹ் வேண்டியதில்லை. ஒருவேளை அப்படி செய்ய வேண்டும் என்றால் ஒருவர் தனது இதய ஆரோக்கியத்தை நிபுணரிடம் சென்று மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறு வயது முதலே ஆரோக்கியமான எடை மற்றும் சரியான BMI லெவலை பராமரிப்பதும் முக்கியம். இந்தியர்களுக்கு உகந்த BMI லெவல் 23-க்கும் குறைவாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. பெண்கள் குறிப்பாக 102 செ.மீ மற்றும் 89 செ.மீ.க்கும் குறைவான இடுப்பு சுற்றளவை பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 7 - 8 மணிநேரம் நிம்தியான தூக்கத்தை ஒருவர் தவிர்க்க கூடாது. மனஅழுத்தத்தை நிர்வகிப்பதும் முக்கியம். ஏனென்றால் மன அழுத்தம் கார்டிசோல் மற்றும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிற ஹார்மோன் லெவலை அதிகரிக்க செய்யும். ஒருமுறை இதய நோய்கள் வந்துவிட்டால் பெரும்பாலும் அதிலிருந்து முற்றிலும் மீள முடியாது என்றாலும் கட்டுப்படுத்த முடியும். எனவே இதய நோய் வராமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறு வயதிலேயே தொடங்க வேண்டும் என நிபுணர் அறிவுறுத்துதுகிறார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment