ஆரோக்கியமான பளபளக்கும் சருமத்திற்கு இந்த 5 காலை பானங்கள் குடிங்க - Agri Info

Adding Green to your Life

July 18, 2023

ஆரோக்கியமான பளபளக்கும் சருமத்திற்கு இந்த 5 காலை பானங்கள் குடிங்க

 ஆரோக்கியமான அதே நேரம் பளபளக்கும் சருமம் என்பது எல்லோரும் வேண்டும் ஒரு விஷயம். நிறம் மேம்படுவதை விட தெளிவான அதே நேரம் ஆரோக்கியமான சருமம் இருப்பது தான் முக்கியம். அது தான் நம் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும். அப்படி ஆரோக்கியமான சருமத்தை பெற சில காலை நேர ஜூஸ் ரெசிபிக்களை தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

எலுமிச்சை ஜூஸ்: காலையில் எழுந்தவுடன் முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பிழிந்து தேன் சேர்த்து எலுமிச்சை ஜூஸ் பருகுவது உங்கள் சருமத்திற்கு மேஜிக் செய்யும். எலுமிச்சை வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது நம் சருமத்தை உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. சருமத்தின் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கிறது.

கிரீன் டீ: க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், சருமம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் வைட்டமின் ஈ உள்ளது அதனால் இது சருமத்தை இயற்கையாக ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும் இது உள்ளிருந்து சருமத்தை புத்துணர்வு அடைய செய்கிறது.

மஞ்சள் பால்: சளி, இருமல், செரிமான பிரச்சனை என பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாக பயன்படும் இது சரும ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.  சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற இது உங்கள் சருமத்தை உள்ளிருந்து குணப்படுத்த உதவுகிறது காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மஞ்சள் பாலில் சிறிது இஞ்சியை கலந்து பருகவும்,

நெல்லி சாறு: ஆம்லா, இந்திய நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படும் இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உங்கள் தோலுக்கு  தீங்கு விளைவிக்கும் நச்சுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.  ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் மாற்றுகிறது.

இளநீர்: உங்கள் சருமம் வறண்டு, ஈரப்பதம் இல்லாமல் இருந்தால், சருமத்தில் வெடிப்பு, வறட்சி காணப்படும். அதற்கு  ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீர் அல்லது இளநீரை குடிப்பது உங்கள் தோலை ஈரப்பதத்துடன் மீட்டெடுக்க உதவும். அதோடு இதில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பியுள்ளதாள் தோலில் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவுகின்றன. அது மட்டும் இல்லாமல்  முகப்பரு தழும்புகளின் தோற்றத்தையும் குறைக்க உதவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment