Search

பாலுடன் இந்த 5 உணவுகளை ஒரு போதும் சேர்த்து சாப்பிடாதீங்க.. மீறினால் ஆபத்து..!

 பால் ஒரு முழு உணவு அதை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும்,  வெறும் பால் குடிப்பது என்பது நம்மில் பெரும்பாலோருக்கு பிடிக்காத  ஒன்றாக இருக்கும். பாலோடு டீ, காபி, அல்லது வேறு சுவை சேர்க்கும் எதாவது ஒன்றை கலந்து தான் குடிப்போம். ஆனால் பாலுடன் நீங்கள் சேர்க்கக் கூடாத சில உணவுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது தெரிந்துகொள்ளுங்க..

இயற்கையாகவே புரோட்டீன் அளவை அதிகரிக்க வாழைப்பழ மில்க் ஷேக் மூலம் சத்தியம் என்பது பலரது கருத்து. ஆனால் இதை சேர்த்து சாப்பிடுவது உங்களது உடலை பாதிக்கலாம். வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். வயிற்று பிரச்சனைகள் வரலாம். இந்த இரண்டு புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் தனித்தனியாக சாப்பிடுவது சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மீன் மற்றும் பால் என்று இரண்டு வகையான புரதங்களை இணைப்பது ஒரு மோசமான கலவையாகும்.மீன் ஒரு தனித்துவமான சுவை கொண்டது, இது பொதுவாக பாலின் கிரீமி அமைப்புடன் நன்றாக கலக்காது. பாலுடன் மீன் மற்றும் எந்த வகையான இறைச்சியையும் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் கனமான உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.

புளிப்பு மற்றும் சிட்ரஸ் பழங்கள் அல்லது பொருட்களுடன் பால் கலந்து சாப்பிடுவது  தவிர்க்க வேண்டியது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற புளிப்பு உணவுகளில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் இருப்பதால், பாலுடன் இணைந்தால் உறைந்து அமில வீச்சு, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, மார்பு நெரிசல் மற்றும் சளி இருமல் ஆகியவை ஏற்படலாம்.

முள்ளங்கி சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பது உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும், ஏனெனில் முள்ளங்கி உடலுக்கு  வெப்பத்தைத் தருகிறது மற்றும் பாலுடன் சேர்ந்தால் நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்று வலியைத் தூண்டும். எனவே, இந்த இரண்டு உணவுகளையும் சாப்பிடுவதற்கு இடையே சில மணிநேர இடைவெளியை வைத்திருப்பது நல்லது.

கடைகளில் முலாம்பழ ஜூஸ் என்று கேட்டால் பல் ஊற்றி தான் அடித்து தருவார்கள் ஆனால் இது உங்கள் உடலுக்கு நகத்தன்மையைக் கொண்டுவரும். முலாம்பழங்களில் டையூரிடிக் பண்புகள் இருப்பதால், பாலில் உள்ள மலமிளக்கிகள் மற்றும் கொழுப்புகளுடன் இணைந்தால், அமைப்பில் நச்சுகள் உருவாகும். ஒவ்வாமையைத் தூண்டுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment