Search

ஒரு நாள் சுற்றுலா செல்லத் திட்டமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..

 மாதக் கடைசியில் வேலை பார்க்கும் போது டென்ஷன் அதிகம் இருக்கும். மாதம் இறுதி என்பதால் பட்ஜெட்டும் குறைவாக இருக்கும் எப்படியாவது கடத்தி விடவேண்டும் என்றும் தோன்றும்.. வேலையில் இருந்து ஒரு பிரேக் எடுத்து 1 வாரம் ஊர் சுற்றலாம் என்று தோன்றும். ஆனால் அத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்காது.

கிடைக்கும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் அருகிலுள்ள சுற்றுலா இடத்திற்கு அல்லது ரிசார்ட் சென்று குதூகலமாக நேரத்தை செலவிட வேண்டும் என்பது தான் மனதில் ஓடும். ஒரு நாள் பயணம் சில நேரங்களில் முன்கூட்டியே திட்டமிடப்படும். சில நேரங்களில் அது தற்செயலாக நடக்கும். அதற்கான உதவி குறிப்புகளை தான் சொல்ல இருக்கிறோம்

சுற்றுலா செல்ல முடிவு செய்த பிறகு அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்வது பெரும் தலைவலி. ஒரே நாளில் போய்விட்டு திரும்ப வேண்டும். அதனால் உங்கள் இருப்பிடத்தில் இருந்து 60 முதல் நூறு கிலோமீட்டர் சுற்றத்திற்குள் இருக்கும் இடங்களை வடிகட்டி குறைத்துக்கொள்ளுங்கள். அதில் உங்கள் மனநிலைக்கும் சுற்றுலா செல்லும் ஆட்களுக்கும் ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து செல்லுங்கள்.

தொலைதூர இடத்தைத் தேர்ந்தெடுத்து, பயண நேரத்தை சாலையில் செலவழித்தால், அது பயணம் அல்ல. எனவே பயண நேரத்தை மிச்சப்படுத்த அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்யவும். 100 கிலோமீட்டர் என்றாலும் கூட 2 மணி நேரத்தில் சென்று விடலாம். பகலில் நேரம் செலவழித்து 2 மணி நேரத்தில் வீடு திரும்பி ஓய்வெடுக்கலாம்.

நீண்ட தூர பயணம் அல்லது நீண்ட நாள் பயணம் என்றால் பொது போக்குவரத்து தான் பெஸ்ட். நீண்ட தூரம் வாகனத்தை ஓட்டிசெல்லத் தேவை இல்லை. ஓய்வு கிடைக்கும். ஆனால் ஒரு நாள் பயணம் என்றால் உங்கள் சொந்த வாகனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போது தான் நேரம் குறைவாக செலவாகும். பிடித்த இடத்தில் நின்று பார்ப்பது, குறைந்த நேரத்தில் அதிக இடங்களை பார்ப்பது எல்லாம் சாத்தியமாகும்

ஒரு நாள் பயணத்தில், செல்லும் போது பிடித்த இடத்திற்கு சென்று சாப்பிடும் வாய்ப்பு இருக்கும். அதே போல நடுவில் சாப்பிட சில சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள் எடுத்துச்செல்லவும் வசதியாக இருக்கும். வழியில் ஹோட்டல் அல்லது கடை இல்லை என்றால் இது பயனுள்ளதாக இருக்கும். கடைக்குச் சென்று காத்திருக்கும் நேரத்தையும் தவிர்த்து விட்டு பயணம் செய்யலாம்.

பயணம் செய்யும்போது வசதியான  ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் அணிந்திருக்கும் உடைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தால்,  பயணம் முழுவதும் அந்த உடையின் மீது தான் நமது கவனம் இருக்கும். முழுமையாக பயணத்தை ரசிக்க முடியாது. போகும் ஒரு நாளில் இப்படி இருந்தால் நன்றாக இருக்காது அல்லவா?

அதே போல நீர் உள்ள இடங்களுக்கு செல்லும் பொது நிச்சயம் குளிக்க ஆசை வரும். அப்போது மாற்றி கொள்வதற்கு சில மாற்று துணிகளையும் எடுத்து செல்வது நல்லது. அதற்காக பெரிய பேக் என்று ஆகாமல், எளிதாக இருக்கக்கூடிய துணிகளை எடுத்து செல்வது முக்கியம்.

அதே போல எந்த இடங்களுக்கு எல்லாம் செல்லத் திட்டமிடுகிறோமோ அவை எப்போது திறக்கப்படும், எப்போது மூடப்படும், சுற்றிப்பார்க்க எவ்வளவு நேரம் ஆகும், ஆடை கட்டுப்பாடுகள் உள்ளதா என்று அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டால் அதற்கு ஏற்ப நேர மேலாண்மை செய்து கொள்ளலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment