தமிழக அரசு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, Medical Officer மற்றும் Staff Nurse பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.90,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களையும் கீழே அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
- Medical Officer – 2 பணியிடங்கள்
- Staff Nurse – 2 பணியிடங்கள்
- Multipurpose Hospital Worker – 2 பணியிடங்கள்
என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
- Medical Officer – MBBS
- Staff Nurse – Diploma in General Nursing & Midwifery
- Multipurpose Hospital Worker – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
TNHRCE சம்பள விவரம்:
- Medical Officer – ரூ.90,000/-
- Staff Nurse – ரூ.14,000/-
- Multipurpose Hospital Worker – ரூ.8000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.07.2023 மாலை 5.45 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment