Search

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு நடுவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 உணவுகள்.!

 சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு சேர்த்து, நம்முடைய செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக பராமரிப்பதும் மிகவும் அவசியம். ஏனென்றால் கோடைகாலம் நம்முடைய குடல் ஆரோக்கியத்தை பாதிக்க கூடும்.

அடிக்கும் வெயிலுக்கு செயற்கை பொருட்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட குளிர்ந்த உணவுகளை சாப்பிட பலரும் விரும்புவார்கள். ஆனால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு தீமைகளை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த ஹாட் சீசனில் நீங்கள் செய்ய வேண்டியது செயற்கை உணவு பொருட்கள் மற்றும் வழக்கமான தானியங்களுக்கு பதில் கோடை சீசனுக்கு ஏற்ற உணவுகளை டயட்டில் சேர்ப்பது தான்.

சரியான ப்ரோபயாடிக்ஸ், மோர் உள்ளிட்ட பலவற்றை டயட்டில் சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கும். உங்கள் குடல் ஆரோக்கியத்தை இந்த கோடையில் சிறப்பாக வைக்க உதவும் சில எளிய உணவுகள் இங்கே...

முழு தானியங்கள்: வழக்கமாக நீங்கள் பருப்பு சேர்த்து செய்யும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், கோடை காலத்தில் நீங்கள் வெப்பத்தை தணிக்க கூடிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் Whole grains எனப்படும் முழு தானியங்கள் உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதோடு, குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவும். பாரம்பரிய தானியங்களை விட உங்களது கோடை டயட்டில் பார்லி மற்றும் ராகி போன்றவற்றை சேர்க்கலாம். அதே போல முழு தானியங்கள் வீக்கத்தை குறைப்பது மட்டுமல்லாமல், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

வாழைப்பழங்கள்: அழற்சியை எதிர்த்து போராடுவதில் வாழைப்பழங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. தவிர குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதில் வாழைப்பழங்கள் முக்கியமானவை. கூடுதலாக வயிற்றுப்போக்கு மற்றும் ஸ்டோமக் அப்செட் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. அதே போல கோடையில் நன்கு பழுத்த பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவது அசிடிட்டி பிரச்சனையை தடுக்க சிறந்த வழி.

ஓட்ஸ் : ஓட்ஸில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. கோடை சீசனில் இதனை அடிக்கடி டயட்டில் சேர்ப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை மீட்டெடுக்கும் ஓட்ஸ், தேவையயற்ற நேரங்களில் ஏற்படும் பசியை மறக்கடிக்கும் வகையில் நீண்ட நேரத்திற்கு உங்களை முழுமையாக உணர வைக்கிறது.

மோர் : கோடையில் நம் குடலை குளிர்ச்சியாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழி தினசரியோ அல்லது அடிக்கடியோ 1 டம்ளர் மோர் குடிப்பதே. வீட்டிலிருக்கும் தயிரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து அதில் சுவைக்கு சிறிதளவு பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பருகுவது செரிமான சிக்கல், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்க அல்லது நிவாரணமளிக்க உதவுகிறது. ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த இந்த பானம் குறைவான கலோரிகளை கொண்டுள்ளதுடன் அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்தது.

தயிர் சாதம் : நல்ல வெயில் நேரத்தில் மதிய உணவாக தயிர் சாதம் சாப்பிடுவது குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள மற்றும் செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதில் ப்ரோபயாடிக்ஸ் நிறைந்துள்ளது. தவிர கால்சியம் மற்றும் புரதத்தின் நல்ல ஆதாரமாக தயிர் சாதம் இருக்கிறது. இதனால் எலும்புகள் மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த 1 கப் தயிர் சாதத்தை உங்கள் டயட்டில் சேருங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment