Search

தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..? 2 நாட்கள் வரை ஃபிரெஷ்ஷாக வைக்க உதவும் டிப்ஸ்..

 கோடை காலத்தில் நம் தாகத்தை தணிக்க கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களில் தர்பூசணி முக்கியமான ஒன்று. குளிர்ச்சி தரும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தர்பூசணியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

சாலட்ஸ் மற்றும் ஸ்மூத்திஸ் தயாரிப்பது முதல் காக்டெய்ல் மற்றும் டெசர்ட்ஸ் வரை பலவற்றில் தர்பூசணி ஸ்லைஸ் பயன்படுத்துகின்றனர். வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், தாமிரம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களையும் தர்பூசணி கொண்டுள்ளது. மேலும் இந்த பழத்தை மிதமான அளவில் சாப்பிடும் போது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளை அளிக்கும்.

ஆனால் அதே சமயம் இந்த தர்பூசணியை சரியான முறையில் ஸ்டோர் செய்து வைக்காவிட்டால் மிக விரைவாக கெட்டுவிடும் மற்றும் அதிலிருக்கும் ஊட்டச்சத்து மதிப்பும் வெகுவாக குறைந்தும் விடும். எனவே தர்பூசணியிலிருந்து கிடைக்கும் அனைத்து சத்துக்களையும் பெற அவற்றை சரியாக சேமித்து வைப்பது மிகவும் முக்கியமானது.

தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..? தர்பூசணியை நிச்சயம் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கலாம். இருப்பினும் பழத்தில் இருக்கும் ஈரப்பதம் போவதை தடுக்க காற்று புகாத கொள்கலனில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். அதே நேரம் தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைப்பது தீமை இல்லை என்றாலும், இந்த பழக்கம் தர்பூசணியின் ஊட்டச்சத்து மதிப்பை பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தர்பூசணியால் கிடைக்கும் முழு நன்மைகளையும் பெற அதிக நாள் சேமித்து வைக்காமல் முடிந்த அளவு சீக்கிரம் சாப்பிட முயற்சிக்கலாம். தர்பூசணியை சரியான வழியில் ஸ்டோர் செய்து ஃரெஷ்ஷாக வைத்திருக்க உதவும் ஈஸி டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

அறை வெப்பநிலையில் சேமிக்கவும் : நீங்கள் தர்பூசணியை வாங்கியவுடன் சாப்பிடவில்லை என்றால் அதனை அறை வெப்பநிலையில் வைப்பது நல்லது. அறை வெப்பநிலையிலேயே சேமித்து வைக்கும் போது தர்பூசணியின் ஊட்டச்சத்து மதிப்பு பராமரிக்கப்படுகிறது மற்றும் பழம் முழுமையாக பழுக்காவிட்டால், அந்த பழத்தின் பழுக்கும் செயல்முறை வேகமாகிறது. மேலும் இந்த பழத்தை கூல் & டார்க் ப்ளேஸில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். நேரடியாக சூரிய ஒளிபடாதவாறு பாதுகாக்க வேண்டும்.

பிளாஸ்டிக்கில் சுற்றி வைக்கலாம்: தர்பூசணி வாங்கி சாப்பிட்டு விட்டு மீதி பழத்தை என்ன செய்வது இப்படி ஸ்டோர் செய்வது என யோசிக்கிறீர்களா..? மீதி தர்பூசணியை க்ளிங் ராப்பில் (Cling wrap) சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் போதும். மறுபுறம் நீங்கள் தர்பூசணியை சிறிய பீஸ்களாக வெட்டி இருந்தால், அவற்றை காற்று புகாத கொள்கலனுக்கு மாற்றி ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இது பழம் ட்ரை-யாவதை தடுக்கிறது மற்றும் பழத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.

தோலை அகற்றாதீர்கள்: தர்பூசணியை ஸ்டோர் செய்து வைக்க திட்டமிட்டால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், முழு பழத்தின் தோலையும் அகற்றி விடாதீர்கள். நீங்கள் சாப்பிட நினைக்கும் அளவிற்கான பழத்தின் தோலை மட்டும் அகற்றவும். ஏனென்றால் தர்பூசணியின் தோல் அதன் ஈரப்பதத்தை பாதுகாக்க மற்றும் உலர்வதை தடுக்க உதவுகிறது. இதோடு தர்பூசணியின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவையை பராமரிக்கவும் அதன் தோல் உதவுகிறது.

ஆப்பிள்கள் & வாழைப்பழங்களுடன் சேர்த்து சேமிக்காதீர்கள்: ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்களுடன் தர்பூசணியை எப்போதும் ஸ்டோர் செய்து வைக்க கூடாது. ஏனென்றால் இந்த 2 பழங்களும் எத்திலீன் வாயுவை வெளியிடுகின்றன. இந்த வாயு தர்பூசணி பழுக்கும் செயல்முறையை வேகப்படுத்தும். தர்பூசணியை பழுக்க வைத்து சாப்பிடுவது அனைவரும் விரும்புவது என்றாலும், ஒருவேளை தர்பூசணி அதிகம் பழுத்து விட்டால் அதன் ஆயுள் மற்றும் சுவையில் தாக்கம் ஏற்படுகிறது.

ஃப்ரீஸரில் வைக்கலாம் : தர்பூசணியை மிக நீண்ட காலம் ஸ்டோர் செய்ய விரும்பினால், அதை ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்து வைக்கலாம். இதற்கு தர்பூசணியின் தோலை நீக்கி மீடியம் சைஸ் க்யூப்ஸாக வெட்டி எடுத்து கொள்ளுங்கள். பின் இந்த பீஸ்களை ஏர்-டைட் கன்டெய்னரில் அல்லது plastic wrap-ல் சுற்றி ஃப்ரீஸர் பாக்சில் வைக்கலாம். சுமார் 6 - 8 மாதங்கள் வரை இது நீடிக்கும் என்றாலும் இந்த முறை பழத்தின்Texture- தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


0 Comments:

Post a Comment